Jyothika: `ஏன் வாக்களிக்கவில்லை?' – ஜோதிகா அளித்த விளக்கம்

‘ஸ்ரீகாந்த்’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை ஜோதிகா அரசியலுக்கு வருவது குறித்துப் பேசியிருக்கிறார். ஜோதிகா ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை மீண்டும் தொடங்கினார். ‘ராட்சசி’, ‘பொன்மகள் வந்தாள்’ என்று பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ மலையாளத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.இதனைத் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜோதிகா சமீபத்தில் இயக்குநர் விக்ரம்பால் இயக்கிய  ‘சைத்தான்’ படத்தில் நடித்திருந்தார். ‘ஸ்ரீகாந்த்’ … Read more

அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு 7 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது… சென்னை – திருவண்ணாமலை இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது…

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே வேலூர் வழியாக ரயில் போக்குவரத்து நேற்று மாலை முதல் மீண்டும் துவங்கியது. வேலூர் – திருவண்ணாமலை இடையே அகலப்பாதையாக மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள கடந்த 2008ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 2018ம் ஆண்டு பணிகள் முழுமையாக நிறைவடைந்த போதும் கடந்த 7 ஆண்டுகளாக வேலூர் – திருவண்ணாமலை இடையே ரயில் சேவை துவக்கப்படாமல் இருந்தது. இந்த ரயில் சேவை நேற்று முதல் துவங்கப்பட்டது, சென்னை கடற்கரையில் இருந்து மாலை … Read more

அமேதியில் ராஜீவ் வலது கரம்!முடிவுக்கு வந்த 25 வருட குடும்ப அரசியல்? ராகுல் வெற்றி உறுதி..ஷ்யாம் தகவல்

சென்னை: சோனியா காந்தியின் கோட்டையாகத் திகழ்ந்து வந்த ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இது பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்துள்ளது.  பலரும் எதிர்பார்த்ததைப் போலவே ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டுவிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இந்தத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பதை உலகமே அறியும். Source Link

பேராசை.. வீட்டை கொத்தனார் சொந்தம் கொண்டாடுற கதையா இருக்கு.. இளையராஜா விவகாரம்.. தயாரிப்பாளர் தாக்கு!

சென்னை:  இளையராஜாவின் காப்புரிமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டைட்டில் டீசரில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தங்கமகன் படத்தில் இடம்பெற்ற பாடல் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வைரமுத்து மற்றும் இளையராஜா இடையே பனிப்போர் நிலவு வரும்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை   மற்றும் CHEC PORT CITY COLOMBO (PVT LTD) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 

கொழும்பு துறைமுக நகரத்தில் ஏற்றுமதி வர்த்தகத்தை முன்னேற்றம் நோக்கில் பிரதான அதற்கான முதல் ஆரம்பப்படியாக CHEC Port City Colombo (Pvt) Ltd மற்றும் இலங்கை  ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன.  ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் பேராசிரியர் கிங்ஸ்லி பேர்னாட் மற்றும்  CHEC Port City Colombo (Pvt) Limited இன் முகாமைத்துவப் பணிப்பாளர் Xiong Hongfeng ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்ததில கைச்சாத்திட்டனர்.  முகாமைத்துவப் பணிப்பாளர் Xiong Hongfeng உரையாற்றுகையில் … Read more

கடும் வெப்பத்தினால் 100 பேர் மரணம்… பால் விலையை மிஞ்சிய ஐஸ் விலை..!!

Mali Heatwave: இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது. ஆனால் ஆப்பிரிக்காவின் மாலியில் ஏற்பட்டுள்ள வெப்பம் வரலாறு படைத்துள்ளது. சாதனை அளவை எட்டியுள்ள வெப்ப அலை காரணமாக, மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Dhoni: 103 வயது ரசிகர்; தோனி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் – வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல, அது ஒரு எமோஷன் என இந்தியாவில் கோடிக்கான கிரிக்கெட் ரசிகர்கள் தலைமுறை தலைமுறைகளாகக் கிரிக்கெட்டைக் கொண்டாடி வருகின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கிரிக்கெட்டைத் தீவிரமாகப் பார்த்து ரசித்து ஆதரவு தந்து வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருந்திருவிழாவாக இருப்பது ஐபிஎல் தொடர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடரைக் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இதில் தோனிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதுவும் இந்த ஐபிஎல் … Read more

17 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மலை – சென்னை ரயில் சேவை: மலர் தூவி வழியனுப்பி வைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. விழுப்புரம் – காட்பாடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டன. இப்பணியை தொடங்குவதற்கு முன்பாக, விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை – தாம்பரம் இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி நிறுத்தப்பட்டன. அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, நிறுத்தப்பட்ட … Read more

“அமேதி, ரேபரேலி காங். வேட்பாளர்கள் தேர்வால் பாஜகவுக்கு கலக்கம்” – ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகள் வேட்பாளார் தேர்வால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளார் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதில் நிறைய பேர் நிறைய கருத்துகளைச் சொல்லலாம். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் ராகுல் காந்தி தேர்ந்த அரசியல்வாதி. தேர்ந்த செஸ் வீரரும் கூட. கட்சி இந்த முடிவை நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் ஒரு பெரிய அரசியல் உத்தியை … Read more

ஐ.நா. பொதுச் சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்: இந்திய கண்டனம்

புதுடெல்லி: எப்போதுமே சந்தேகத்துக்குரிய போக்கினையே கொண்ட நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், அந்நாட்டின் ஐ.நா.வுக்கான நிரந்தர தூதுவரின் தீங்கிழைக்கும் அநீதியான கருத்துக்களை இந்தியா சாடியுள்ளது. பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், ஐ.நா பொதுச்சபையில் ‘அமைதி கலாச்சாரம்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர், குடியுரிமை திருத்தச் சட்டம், அயோத்தி ராமர் கோயில் ஆகியவைகளை உள்ளடக்கி பேசியதற்கு இந்தியா இவ்வாறு எதிர்வினையாற்றியுள்ளது. ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி … Read more