திருவண்ணாமலையில் தரிசனம்.. இளையராஜாவுக்கு அறங்காவல் குழு செய்த மரியாதை

சென்னை: இளையராஜா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னும் பல காலத்துக்கு அழியாது. 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இப்போது உள்ள இளைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் போட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அடுத்ததாக அவரது இசையில் விடுதலை 2 வரவிருக்கிறது. மேலும் அவரது வாழ்க்கை வரலாறும் படமாகிறது. சூழல் இப்படி இருக்க அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்; முதல் சுற்றிலேயே வெளியேறிய ஆகர்ஷி காஷ்யப்

ஜகர்த்தா, இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நேற்று தொடங்கியது. மொத்தம் ரூ.10¾ கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் 21-18, 21-6 என்ற செட் கணக்கில் … Read more

பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 ஆம் ஆண்டாகும் போது பசுமை இலக்குகளை அடைந்துகொள்ள இலங்கை அர்ப்பணிக்கும்

நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடையும் உலகின் இலக்கை, தேசிய கொள்கையில் உள்வாங்கிய முதலாவது ஆசிய நாடு இலங்கையாகும். காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகள், அபிவிருத்தி கண்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். யுக்ரேன் யுத்தத்திற்காக அமெரிக்காவும் ஐரோப்பாவும் இந்த வருடம் ஒதுக்கிய தொகையை இரண்டு வருடங்களுக்கு காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்குப் பயன்படுத்தலாம் -உலக சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி. பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 களில் பசுமை இலக்குகளையும் அடைந்துகொள்ள … Read more

இறுதிவரை நடந்த Tug of war; தமிழகத்திலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற விருதுநகர் வேட்பாளர்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர், தமிழகத்திலேயே குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார். விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர், தே.மு.தி.க-அ.தி.மு.க. கூட்டணி சார்பில் விஜய பிரபாகரன், பா.ஜ.க சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் பிரதான … Read more

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக நிர்வாகியிடம் சிபிசிஐடி 5 மணி நேரம் விசாரணை

சென்னை: சென்னையில் ரயிலில் ரூ.4 கோடிபறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பாஜக தமிழக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகனிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப்.6-ம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி பணம் பிடிபட்டது. நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் … Read more

சீனா, இத்தாலி, நேபாளம், இலங்கை உட்பட உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 3-வதுமுறையாக வெற்றி பெற்றுள்ளது. எனினும், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எக்ஸ் சமூக வலைதளத்தில், … Read more

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்?.. பிறந்தநாளுக்கு செம விருந்து இருக்காம்.. சம்பவத்துக்கு தயாரா?

சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டாலும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இதனையடுத்து வணங்கான் படத்தில் கமிட்டான சூர்யா; அதிலிருந்து விலகினார். இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44ஆவது படத்தில் நடித்து வருகிறார்

சென்னையின் எப்.சி. அணியில் பிரேசில் வீரர் ஒப்பந்தம்

சென்னை, இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் விளையாடி வரும் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணிக்கு, பிரேசிலை சேர்ந்த எல்சின்ஹோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பின்களம் மற்றும் நடுகள வீரரான 33 வயது எல்சின்ஹோ 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். எல்சின்ஹோ கடந்த சீசனில் ஜாம்ஷெட்பூர் அணிக்காக விளையாடினார். , . Welcome Elsinho! #AllInForChennaiyin #Elsinho2026 #WelcomeElsinho pic.twitter.com/QtIxkQLr4A — Chennaiyin F.C. (@ChennaiyinFC) June 5, 2024 தினத்தந்தி Related … Read more

முதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்… மெக்சிகோவில் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மேயர்

மெக்சிகோ சிட்டி, அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் போதை கும்பல்கள், சட்டவிரோத ஆயுத பரிமாற்றம், பயங்கரவாதம், கள்ளநோட்டு புழக்கம் என நாடு முழுவதும் குற்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குற்ற சம்பவங்களின் கூடாரமாக விளங்கும் மெக்சிகோவில் நிழல் உலக தாதாக்கள், ரவுடிகள், கூலிப்படையினரை கட்டுப்படுத்த முடியாமல் ஜனநாயகமும், சட்ட திட்டங்களும் செயலிழந்து வருகின்றன. இந்தநிலையில் கடந்த ஜூன் 2-ந்தேதி மெக்சிகோவில் பொதுத்தேர்தல் நடந்தது. புதிய அதிபர், பிரதிநிகள் சபையின் 500 உறுப்பினர்கள், குடியரசு செனட் சபையின் … Read more

Doctor Vikatan: Contact Lens-ஸை கழற்ற மறந்து தூங்கிவிட்டால் பிரச்னையாகுமா?

Doctor Vikatan: எனக்கு Contact Lens உபயோகிக்கும் வழக்கம் இருக்கிறது. வேலைச்சுமை காரணமாக சில நாள்களில் 12 மணி நேரம்கூட லென்ஸ் உபயோகிக்க வேண்டியிருக்கும். அப்போது கண்களுக்கு eye drops உபயோகிக்க வேண்டுமா? இரவில் லென்ஸை அகற்ற மறந்து தூங்கிவிட்டால் என்ன செய்வது? பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த கண் மருத்துவர் ஷோபா கினி. கண் மருத்துவர் ஷோபா கினி நீங்கள் உபயோகிப்பது எந்த வகையான கான்டாக்ட் லென்ஸ் என்பது தெரியவில்லை. கான்டாக்ட் லென்ஸில் சாஃப்ட் லென்ஸ் (Soft Lens) மற்றும் … Read more