Coolie: ரஜினியுடன் இணையும் நாகர்ஜுனா! – இருவருக்குமான இந்த கனெக்ட் தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ‘மாநகரம்’ திரைப்படத்திற்குப் பிறகு திரைக்கதை பணிகளுக்காகத் தனது இணை இயக்குநர் சந்துரு அன்பழகனுடன் இணைந்திருக்கிறார் லோகேஷ். ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரனுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இதனைத் தாண்டி தனது வழக்கமான தொழில்நுட்பக் குழுவுடன் கைகோத்திருக்கிறார். ‘ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ரஜினி நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் மலையாள நடிகர் செளபின் சாஹிர் நடிக்கிறார் … Read more