ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, ஜனாதிபதி தகுதியற்றவர் என அறிவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது

நீதிமன்ற கட்டணத்தை மனுதாரர் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு. மனுதாரர் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளார்: சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு. பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிமன்றக் கட்டணமாக 50,000 ரூபாய் … Read more

`பெண்கள் சத்தமாக பேசினால் குற்றமா?’ – தாலிபனின் புதிய சட்டம்… கலங்கிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

பல ஆண்டுகள் போராலும், ஏழ்மையாலும், நிலையான அரசு இல்லாததாலும் அல்லல்பட்ட நாடு ஆப்கானிஸ்தான். 1994 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தாலிபன் அமைப்பு, இராண்டாவது முறையாக 2021ல் ஆட்சியைக் கைப்பற்றியது. தாலிபனின் ஆட்சி தொடங்கிய முதல் நாளிலிருந்தே படிப்படியாக ஆப்கான் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. தாலிபனின் சமீபத்திய சட்டங்கள் மனித உரிமைகள் ஆணையத்தை திகிலடையை வைத்துள்ளன. “களங்கமும் நல்லொழுக்கமும்” என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த அதன் சுப்ரீம் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா அனுமதி வழங்கியுள்ளார். … Read more

ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் சர்வதேச அரசியல் கல்வி பயில லண்டன் புறப்பட்டு சென்றார் அண்ணாமலை

சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விமானம்மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவரை கட்சியினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். நாடு முழுவதும் பாஜகவில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கைபணி வரும் 1-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று வந்தார். சென்னையில் கடந்த 25-ம்தேதி நடந்த … Read more

ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு: விமர்சித்த பிரகாஷ் ராஜ்

சென்னை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக போட்டியின்றி ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அதனை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார். “போட்டியின்றி ஐசிசி தலைவராக தேர்வாகி உள்ள இந்திய கிரிக்கெட் உருவாக்கிய ஆகச் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் மற்றும் அல்டிமேட் ஆல்ரவுண்டருக்கு அனைவரும் கைத்தட்டல் அளித்து வாழ்த்துவோம்” என நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து ஜெய் ஷாவை … Read more

இனி மகள்கள், சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது! குடியரசு தலைவர் திரௌபதி முர்மு…

டெல்லி: இனி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எச்சரித்துள்ளார். ‘போதும் போதும்’ இதுவரை நடந்தது ..இனி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது  பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேசமே விழித்தெழ வேண்டிய நேரம் இது”  என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியின் பெண் மருத்துவர்  கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான … Read more

ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு அடி- ஆட்சியை அசால்ட்டாக கைப்பற்றும் காங்கிரஸ்- Lok Poll பரபர சர்வே!

சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக வெறும் 20 முதல் 29 இடங்களை மட்டுமே பெற்று பெரும் தோல்வியைத் தழுவப் போகிறது; காங்கிரஸ் கட்சி 58 முதல் 65 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றும் என்கிறது Lok Poll கருத்துக் கணிப்பு. இந்த கருத்துக் கணிப்பு ஆளும் பாஜகவுக்கு பெரும் கலக்கத்தையும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு Source Link

அஜித் தீண்டாமை பிரச்னை! நான் சாட்சி.. ஏ.கே.வை பேட்டி எடுத்த பிரபல வி.ஜே என்ன சொல்றாரு பாருங்க!

 சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்திலேயே தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, நடிகர் யோபு பாபு படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்தின் கைகளைத் தொட்டதாகவும், உடனே அஜித் டோன்ட் டச் மி எனக் கூறியதாகவும் வலை பேச்சு பிஸ்மி கூறியதுதான். மேலும் இந்தத் தகவலை எங்களிடம் மிகவும் வருதப்பட்டு, யோகி பாபு தான் கூறினார்.

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 55 வயது டெய்லர் – அதிர்ச்சி சம்பவம்

புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் தசரதபூர் கிராமத்தை சேர்ந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியை தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது, தசரபூர் கிராமத்தை சேர்ந்த 55 வயதான டெய்லர் தன்னை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் – ஆஸ்திரேலிய வீரர் லிது ஆகியோர் மோதினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-2, 4-6, 6-3 ,6-1 என்ற செட் கணக்கில் … Read more

மாயமான எம்எச்-370 விமானம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம்.. விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சி தகவல்

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-370 என்ற பயணிகள் விமானம் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி சென்றபோது காணாமல் போனது. அதில் 227 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என 239 பேர் இருந்தனர். விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் 7-வது வளைவுக்கு அருகில் விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, சுமார் 120,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேடியும், விமானம் எந்த இடத்தில் … Read more