சர்ச்சைக்குரிய ‘விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை’ ரத்து – தமிழக அரசு விளக்கம்

சென்னை: அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தவறான சுற்றறிக்கை அனுப்பிய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், தற்போது அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் … Read more

ராகுல் காந்தியுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு: தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோரை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டப்பேரவை தேர்தல் வியூகம்தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: மகாராஷ்டிராவுடன் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கும் சேர்த்து தேர்தல் தேதி குறித்தஅறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்றஎதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், இண்டியா கூட்டணியின் … Read more

“உங்கள் போன் நீங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறது” – பிரபல மார்கெட்டிங் நிறுவனம் ஒப்புதல்

வாஷிங்டன்: நம்முடைய ஸ்மார்ட்போன் நாம் பேசும் உரையாடல்களை கவனிப்பதாக, பேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களுடன் பணியாற்றும் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. நாம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது எதேச்சையாக ஏதாவது ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்திருந்தால் தொடர்ந்து அது பற்றிய விளம்பரங்களாகவே வருவதை கவனித்திருப்போம். இன்னும் ஒருபடி மேலே போய் போனிலோ அல்லது நேரிலோ ஏதாவது ஒரு பொருளை வாங்கவேண்டும் என்று யாரிடமாவது பேசிக் கொண்டிருந்த பிறகு, அது தொடர்பான விளம்பரங்கள் வருவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். … Read more

தி கோட் படத்திற்கு இலவச டிக்கெட்.. எங்கு எப்படி பெறுவது

Free Movie Ticket For The GOAT Movie : தி கோட் திரைப்படம் நாளை வெளியாகயுள்ள நிலையில், தற்போது கும்பகோணம் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது.

GOAT: `டைட்டில்ல அது இருக்கட்டும்' – விஜய் நடித்த இந்த மல்டி-ஸ்டார் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில், GOAT திரைப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. இதில் விஜயிடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாக்‌ஷி சௌத்ரி உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான விக்ரம், ஜெயிலர் எனப் பெரிய நடிகர்களின் படங்களிலும் பல திரைத்துறைகளைச் சேர்ந்த நடிகர்கள் நடித்திருக்கின்றனர். மல்டி இன்டஸ்ட்ரி-மல்டி ஸ்டார் படங்களுக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கும் நேரத்தில் தமிழ் திரைத்துறையின் நட்சத்திரங்களை சேர்த்து GOAT படத்தை … Read more

4 நாட்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை சென்னையில் இருந்து 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாளை முதல் 7-ம் தேதி வரை தொடர் விடுமுறை, முகூர்த்த நாள், விநாயகர் சதூர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கம் மற்றும் மாதவர பேருந்து நிலையத்திலிருந்து  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிளாம்பாக்கத்தில் இருந்து 725 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 190 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. போக்குவரத்துக் கழகம் சென்னையில் … Read more

GOAT Vijay: ரசிகர்களுடன் படம் பார்க்க ப்ளான் போடும் தளபதி.. 2 தியேட்டர் லோடிங்.. ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் அதிகப் பொருட்ச்செலவில் உருவாகியுள்ள தி கோட் படம் நாளை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை தமிழ் நாடு முழுவதும் சுமார் 1100 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் அர்ச்சனா கல்பாத்தியின் தலைமையில் செய்து வருகின்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய பிரதி உபவேந்தராக பேராசிரியர் ரஞ்சித் பல்லேகம நியமனம் 

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய பிரதி உபவேந்தராக பல் மருத்துவ பீடத்தின் ரஞ்சித் பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் அபிவிருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் உள்ளக தர பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.   முன்னாள்  பிரதி உபவேந்தராக செயற்பட்ட பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் உபவேந்தராக பதவியேற்றதன் பின்னர் ஏற்பட்ட பதவிக்காகவே பேராசிரியர் ரஞ்சித் பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார். 1997 ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் வைத்திய பீடத்தின் பல் மருத்துவ பட்டத்தைப் … Read more

MP: வகுப்பில் ஃபேன், ஜன்னல்களை உடைத்து போராட்டத்தில் இறங்கிய பள்ளி மாணவிகள் – என்ன பிரச்னை? | Video

மத்தியப் பிரதேசத்தில், அரசுப் பள்ளி வகுப்பறையில் சீலிங் ஃபேன், ஜன்னல்களை மாணவிகள் அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவமானது, போபாலிலுள்ள சரோஜினி நாயுடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்திருக்கிறது. மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், ஒரு மாதத்துக்கு முன்பு நியமிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீராங்கனை வர்ஷா ஜா என்பவருக்கு எதிராகப் பள்ளி வளாகத்தில் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவிகள், `வகுப்பறையைச் சுத்தம் செய்யுமாறும், … Read more

இண்டரை ஆண்டு பிரச்சினைக்கு இரண்டே நாளில் தீர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி | ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி

மதுரை: ‘இந்து தமிழ் திசை’செய்தி எதிரொலியாக இரண்டரை ஆண்டுப் பிரச்சினைக்கு இரண்டே நாளில் தீர்வு ஏற்படும் வகையில் கொட்டாம்பட்டி அருகே உதினிப்பட்டி கண்மாய்க் கரைகளை இன்று (செப்.4) பொதுப்பணித் துறையினர் சீரமைத்தனர். இதன் மூலம் மழைநீரை தேக்க வழி பிறந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை கொட்டாம்பட்டி ஒன்றியம் சொக்கலிங்கபுரம் ஊராட்சி உதினிப்பட்டி கிராமத்தில் 285 ஏக்கர் பரப்புள்ள பொதுப்பணித் துறை கண்மாய் உள்ளது. இதன் மூலம் 500 ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகவும், 500 ஏக்கர் நிலங்கள் … Read more