பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மேற்கு வங்க சட்டப்பேரவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற ஏதுவாக … Read more

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் பலி

கீவ்: உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் போர் வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து உக்ரைன் ராணுவம் அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “உக்ரைனின் மத்தியப் பகுதியில் உள்ள போல்டாவா பகுதியை நோக்கி ரஷ்யா திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தியது. வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி எழுப்பியும் கூட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல போதிய அவகாசம் இல்லாமல் போமது. ஏவுகணை தாக்குதல் நடந்த … Read more

குரூப்-4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்! டிஎன்பிஎஸ்சி தகவல்..

சென்னை: குரூப்-4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான  டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு தேவையான காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி, தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்து வருகிறது. அன்படி,  தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து … Read more

வௌ்ளத்தில் மிதக்கும் ஆந்திரா.. நேரில் சென்று பார்வையிடாத பவன் கல்யாண்! காரணம் இதுதான் என விளக்கம்

அமராவதி: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கு அவர் Source Link

A.R. Rahman: சிங்கப்பூரில் ரசிகர்களை ஏங்க வைத்த ரஹ்மான்.. இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!

சிங்கப்பூர்: தமிழ் சினிமாவைக் கடந்து தென்னிந்திய சினிமாவின் முகமாகவும், அதன் பின்னர் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் முகமாகவும் இன்றைக்கு உலகம் முழுவதும் அறியப்படுபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். இவரது இசைக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்தும் ரசிகர்கள் உள்ளனர். உலகின் எந்த மூலைக்குச் சென்று ரஹ்மான் இசைக் கச்சேரி நடத்தினாலும் இவரது இசையைக்

Nivin Pauly: "எனக்காக நான்தான் பேச வேண்டும்…" – பாலியல் வழக்கு குறித்து நிவின் பாலி சொல்வதென்ன?

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். இதன் அடிப்படையில் சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு வருகிறது. பெண்கள் மட்டும் அல்ல இளைஞர் ஒருவரும் இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாகப் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகர் நிவின் பாலி பாலியல் தொந்தரவு … Read more

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: சட்ட நிபுணர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநாடு தொடர்பாக சட்ட நிபுணர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 2026-ம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே கடந்த மாதம் கட்சிக் கொடி மற்றும் பாடலையும் அறிமுகம் செய்தார். அந்த நிகழ்விலேயே விரைவில் மாநாடு நடைபெறும் எனவும் விஜய் அறிவித்தார். இதற்காக பல்வேறு … Read more

ரூ.1.45 லட்சம் கோடியில் ராணுவ தளவாடம்: பாதுகாப்பு துறைக்கான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு படைகளுக்கு ரூ.1,44,716 கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ராணுவத்தின் டேங்க் படைப்பிரிவை நவீனமயமாக்க, எதிர்காலத் தேவைக்கான நவீன டேங்குகள் வாங்கப்பட உள்ளன. மேலும் வான் பாதுகாப்பு ரேடார்கள், கவச வாகனங்களும் வாங்கப்படவுள்ளன. இந்திய கடலோர காவல் படைக்கு டோர்னியர் … Read more

பாரா ஓலிம்பிக் : வெண்கல பதக்கம் வென்று தங்கவேலு மாரியப்பன் சாதனை..!

Thangavelu Mariyappan : பாரீஸ் நகரத்தில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட வீரர்கள் பலரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாட்மிண்டன் பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், நித்யஸ்ரீ சிவனும் பாட்மிண்டன் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். இவர்களைத் தொடர்ந்து உயரம் தாண்டுதல் பிரிவில் கலந்து கொண்ட தங்கவேலு மாரியப்பன் வெண்கலம் வென்று அசத்தினார். இதனால் தொடர்ச்சியாக மூன்று பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வென்ற … Read more

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு

சென்னை வரும் அக்டோபர் 19 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், ‘தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு’ நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு, அடுத்த மாதம் (அக்டோபர்) 19-ந்தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில், … Read more