பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 கிடைக்குமா? சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

Tamil Nadu Latest News: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

20000 USD மதிப்புள்ள 7.5 காரட் வைரத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில்லுக்கு பரிசாக வழங்கினார் இந்திய பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவியும் அமெரிக்க முதல் பெண்மணியுமான ஜில் பைடன் ஆகியோருக்கு கிடைத்த பரிசப் பொருட்கள் குறித்த விவரங்களை அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டது. இதில் அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு இந்திய பிரதமர் மோடி வழங்கிய 7.5 கேரட் வைரமானது மற்ற அனைத்து பரிசுப் பொருட்களைக் காட்டிலும் மிக விலையுயர்ந்த பரிசாகும். 2023 ஆம் ஆண்டில் அதிபர் ஜோ பைடனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான டாலர் … Read more

பெங்களூருவில் விமான கண்காட்சி அடுத்த மாதம் 10-ந் தேதி தொடக்கம்

பெங்களூரு, கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை என இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு விமான கண்காட்சி நடந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம்(பிப்ரவரி) 10-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த விமான கண்காட்சி நடக்கிறது. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி … Read more

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் வரலாற்று சாதனை படைத்த குசல் பெரேரா

நெல்சன், இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை குசல் பெரேராவின் அபார சதத்தின் உதவியுடன் 20 … Read more

டைம் டிராவல் செய்த விமான பயணிகள்.. நடந்தது என்ன..?

நியூயார்க், உலகம் முழுவதும் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புது வருடம் பிறக்கும் நேரம் ஒவ்வொரு நாடுகளின் இருப்பிடத்தை பொறுத்து வேறுபடும். அதன்படி, புத்தாண்டு முதலில் டோங்கா மற்றும் அதனை ஒட்டிய தீவு பகுதிகளில் பிறக்கும். அதன் பின்னர் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய ஆகிய நாடுகளில் புது வருடம் பிறக்கும். இங்கு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும்போது நமது நாட்டில் மாலை 4.30 மணி என இருக்கும். அதன் பின்னர் சீனா, இந்தியா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்கா, … Read more

Book Fair: "ஆண்கள் எழுதுவதால் 'His'tory; எனவே 'Her Stories பதிப்பகம்' என வைத்தோம்" – நிவேதிதா லூயிஸ்

பெண்களுக்காகப் பெண்களால் தொடங்கப்பட்ட பதிப்பகம்தான் Her Stories. தற்போது நடந்துகொண்டிருக்கும் 48வது சென்னை புத்தகக் காட்சியில் Her Stories அரங்குக்குச் சென்று எழுத்தாளர் நிவேதிதா லூயிஸிடம் பேசினோம். “கடந்த 2020 ஆம் ஆண்டு கோவிட் சமயத்தில் இந்த Her Storiesயை ஃபேஸ்புக் பக்கமாகத்தான் தொடங்கினோம். அதில் பெண்களைப் பற்றி, பெண்களின் வரலாறு பற்றிக் குறிப்பாக லாக்டவுன் காலத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளைப் பற்றியும் நிறைய பதிவுகள் எழுதிக்கொண்டிருந்தோம். அதற்குக் கீழே பெண்கள் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் … Read more

அமலாக்கத் துறை சோதனைக்கு பாஜக எப்படி காரணமாக முடியும்? – கே.பி.ராமலிங்கம் கேள்வி

தருமபுரி: “அமைச்சர் துரைமுருகன் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத் துறை சோதனைக்கு பாஜக எப்படி காரணமாகும். துறை சார்ந்த அதிகாரிகள் நியாயமான நடவடிக்கைகளைத் தான் மேற்கொள்கின்றனர். நடவடிக்கைக்கு உள்ளாகும் திமுக-வினரில் சிலர், பின்னர் நீதிமன்றம் சென்று விடுதலை ஆகின்றனர். நடவடிக்கைகளின் பின்னணியில் பாஜக இருப்பதாகக் கொண்டால், எப்படி அவர்கள் விடுதலையாக முடியும்,” என தருமபுரியில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கேள்வி எழுப்பினார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுப்பிரமணிய சிவா மணி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாரத … Read more

அடர் பனிமூட்டம் | டெல்லியில் 100 விமானங்கள் தாமதம்: வட இந்தியாவில் ரயில் சேவை பாதிப்பு

புதுடெல்லி: கடும் குளிர் காரணமாக வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இன்று காலை அடர் பனி மூட்டம் நிலவியதால், டெல்லியில் 100 விமான சேவைகள் தாமதமாகின. வட இந்தியாவில் பல்வேறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. விமான சேவை கண்காணிப்பு இணையதளத்தின் தரவுகள் படி, டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் 60 விமானங்கள், வந்து சேர வேண்டிய 193 விமானங்கள் பனி மூட்டம் காரணமாக தாமதமாகின. ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா விமான … Read more

தளபதி 69 படத்தில் இணைந்த நடிகர்! தனுஷின் நெருங்கிய நண்பரும் கூட..யார் தெரியுமா?

Baba Bhaskar Reportedly Joined Thalapathy 69 Movie : தளபதி 69 படத்தின் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் புதிதாக ஒரு பிரபலம் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?   

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை! ஏன் தெரியுமா?

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பல அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.