Vishal : 'நான் அரசியலுக்கு வரக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்; ஏனெனில்..!' – விஷால் ஓப்பன் டாக்

சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்பு  நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார். `சில யூடியூபர்ஸ் தொடர்ச்சியாக உங்களை பற்றியும், சினிமா பிரபலங்கள் சிலரையும் தவறாக பேசுகிறார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியத்திற்கு பதிலளித்த விஷால், “ என்னுடைய ஆரோக்கியம் பற்றிய உச்சக்கட்ட கற்பனை செய்தார்கள். நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுவது தவறான விஷயம். உங்களுக்கும் பெண் குழந்தைகள் மனைவிகள் இருப்பார்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.  … Read more

சீமான் மீது ஈரோட்டில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

ஈரோடு சீமான் மீது ஈரோட்டில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 29-ந்தேதி கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெறிக்கல்மேடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் குறித்து சீமான் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சீமானுக்கு பல்வேறு … Read more

ஜனாதிபதி குறித்து காங்கிரஸ் விமர்சனம்… ராஷ்டிரபதி பவன் பரபரப்பு விளக்கம்

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது.ஆண்டின் முதல் தொடர் என்பதால், ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை (சனிக்கிழமை) தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி முர்மு சுமார் … Read more

மகளிர் ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா முன்னிலை

மெல்போர்ன், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நாட் ஸ்கைவர்-பிரண்ட் 51 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து முதல் … Read more

ஜப்பானில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை

டோக்கியோ, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி விளங்குகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலையொட்டி இந்த கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 2022-ம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடந்தது. ஜப்பானின் ஒசாகா நகரில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025 நடைபெற இருக்கிறது. இதில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டு அரங்குகளை அமைத்து தங்கள் நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை காட்சிப்படுத்த உள்ளன. ஒசாகாவில் உலக … Read more

TVK : `எமோஷனல் விஜய்; 30 நிமிட முக்கிய சந்திப்பு' – பனையூர் மீட்டிங்கின் 10 ஹைலைட்ஸ்!

தவெகவின் மூன்றாம் கட்ட மாவட்டச் செயலாளர்களை அறிவிக்க பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார் விஜய். கூடுதலாக மாநில நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும் விஜய், புதுவரவாக கட்சிக்குள் வந்திருக்கும் ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் போன்றோரையும் புன்சிரிப்போடு வரவேற்றிருக்கிறார். வேகமெடுத்திருக்கும் தவெக முகாமின் இன்றைய மீட்டிங்கின் முக்கிய அப்டேட்ஸ் இங்கே. விஜய் *வழக்கம்போல மதியத்துக்கு மேல் அலுவலத்துக்கு வருமாறுதான் விஜய்யின் இன்றைய வருகையும் திட்டமிடப்பட்டிருந்தது. 19 மாவட்ட நிர்வாகிகள் இன்று அழைக்கப்பட்டிருந்தனர். காலை 8:30 மணி முதலே நிர்வாகிகள் ஆஜராகத் … Read more

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்புக்கான ஆயத்த பணிகள் தொடக்கம்

ராமேசுவரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறப்பதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டது மட்டுமின்றி பாலத்தில் விரிசல் விழுந்ததாலும், இந்த பாலம் அருகிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிளுக்கு 01.03.2019-ல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.535 கோடி மதிப்பில் பணிகள் துவங்கின. புதிய ரயில் பாலம் பாலத்தின் 2078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரம் … Read more

மகா கும்பமேளாவில் ‘பதஞ்சலி’யின் இலவச யோகா பயிற்சி

புதுடெல்லி: மகா கும்பமேளாவில் பதஞ்சலி நிறுவனம் சார்பில் பக்தர்களுக்கு இலவச யோகா சொல்லிக் கொடுக்கும் நிகழ்வு நடந்தது. அதோடு “ஒவ்வொரு இந்தியரும் தங்கள் கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா களைகட்டியுள்ள நிலையில், யோகா குரு பாபா ராம்தேவ், அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு இலவச யோகா மற்றும் தியான முகாம் நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மகா கும்பமேளாவின் தெய்வீக சூழ்நிலையை … Read more

இத்தாலியில் டீப்சீக் ஏஐ பயன்பாட்டுக்கு தடை – பின்னணி என்ன?

மிலன்: சீன தேசத்தின் ஏஐ சாட்பாட் ‘டீப்சீக்’ பயன்பாட்டை இத்தாலி முடக்கி உள்ளது. பயனர்களின் தரவை பாதுகாக்கும் நோக்கில் இந்த நகர்வை கையில் எடுத்துள்ளது இத்தாலியின் தரவு பாதுகாப்பு ஆணையம். அதுமட்டுமல்லாது டீப்சீக் சாட்பாட் பின்னணியில் உள்ள நிறுவனங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டீப்சீக் பயன்படுத்தும் பயனர்களிடம் இருந்து என்ன மாதிரியான தரவுகள் சேகரிக்கப்படுகிறது, அது எங்கு சேமிக்கப்படுகிறது மற்றும் அது குறித்த அறிவிப்பு பயனர்களுக்கு எப்படி தெரிவிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் டீப்சீக் சாட்பாட் … Read more

அஜித்துக்கு போன் செய்து பேசிய விஜய்! என்ன சொன்னார் தெரியுமா?

Actor Vijay Wished Ajith Kumar On Phone Call : நடிகர் அஜித்திற்கு சமீபத்தில், பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு, விஜய் போன் செய்து பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்க்கலாம்.