“சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” – திருமாவளவன்

மதுரை: “இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இண்டியா கூட்டணித் தலைவர்கள் இதுகுறித்து விரைவில் கலந்தாய்வு செய்ய வேண்டும். இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றுகிற திசையில் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் விசிக … Read more

மகா கும்பமேளாவில் 68 பாகிஸ்தானியர்கள் புனித நீராடல்; ஹரித்துவாரில் 480 அஸ்திகள் கரைப்பு

புதுடெல்லி: மகா கும்பமேளாவுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த 68 இந்துக்கள் புனித நீராடினர். முன்னதாக, அவர்கள் தாங்கள் கொண்டுவந்த இறந்தவர்களின் 480 அஸ்தி கலசங்களையும் உத்தராகண்டின் ஹரித்துவாரில் கரைத்தனர். உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவுக்கு பாகிஸ்தானியர்களும் வருகை புரிந்துள்ளனர். இந்நாட்டு பஞ்சாபின் சிந்து மாகாணத்திலுள்ள பாகிஸ்தானிய இந்துக்களில் 68 பேருக்கு இதற்கான அனுமதி கிடைத்திருந்தது. பஞ்சாபின் வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்தவர்கள், அங்கிருந்து ரயில் மூலம் ஹரித்துவாருக்கு சென்றனர். அங்கு தங்களுடன் கொண்டுவந்த 480 … Read more

Delhi Election 2025 Result: தோல்வி முகத்தில் ஆம் ஆத்மி… சில முக்கிய காரணங்கள் இதோ

Delhi Election 2025 Result: டெல்லி தேர்தல்களின் முன்னிலை நிலவரங்கள், மூலம் பாஜக தெளிவான பெரும்பான்மையைப் பெறுவதாகத் தெரிகிறது. 2013, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பின்தங்கியுள்ளது.

11மணி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: ஈரோட்டில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 25ஆயிரம் வாக்குகள் முன்னிலை….

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும்பணி தொடங்கியது. இந்த   இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்  வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது காலை 11மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 24,864 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.  11 மணி நிலவரப்படி, 24,864 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி 5,934 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில், தி.மு.க … Read more

வந்தே பாரத் ரெயில்களில் பயணத்தின்போது உணவு பெறலாம் – ரெயில்வே வாரியம் அறிவிப்பு

புதுடெல்லி, வந்தே பாரத் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே உணவு வேண்டுமா, வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலர் ‘உணவு வேண்டாம்’ என்று குறிப்பிட்டு விட்டு, ரெயில் பயணத்தின்போது உணவுக்கான பணத்தை செலுத்த தயாராக இருந்தபோதிலும் உணவு அளிக்க இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) ஊழியர்கள் மறுத்து விடுகின்றனர். இதுதொடர்பாக பயணிகள் புகார் தெரிவித்த நிலையில், டிக்கெட் முன்பதிவின்போது உணவு வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தபோதிலும், பயணத்தின்போது பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு … Read more

அவர் இந்திய அணியில் தொடர்ச்சியாக விளையாடாதது எனக்கு ஆச்சரியம் – ஆஸி.முன்னாள் கேப்டன்

நாக்பூர், இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 249 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் … Read more

நடுவானில் விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்ற பயணியால் பரபரப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் டென்வர் மாகாணத்தில் இருந்து ஹூஸ்டன் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் புறப்பட்டது. பிரான்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் தனது பின்னால் இருந்த பயணியிடம் இருக்கையை மாற்றுமாறு கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் அந்த பெண்ணின் இருக்கை மற்றும் ஜன்னலை காலால் எட்டி உதைத்து உடைக்க முயன்றார். அப்போது பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதனால் … Read more

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2024: பிசினஸ் சாதனையாளர்கள் சொன்ன வெற்றிச் சூத்திரங்கள்..!

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது 2024 நிகழ்வு பிப்ரவரி 7-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன், தொழிலதிபர்கள் உள்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். தொடக்க உரையில் பேசிய விகடன் குழும மேலாண் இயக்குநர் சீனிவாசன், “உலகத் தமிழர்களுக்கு முதலீடு, சேமிப்பு, காப்பீடு, கடனுதவி என ஒவ்வொரு குடும்பத்துக்குமான நிதி ஆலோசனைகளை வழங்குவதற்காக விகடன் நிறுவனம் ‘லாபம்’ எனும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது” என்பதை குறிப்பிட்டார். `ஒரு ட்ரில்லியன் டாலர் … Read more

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்

சென்னை: உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜை சேர்ந்தவர் வந்திதா பாண்டே. தமிழக கேடரில் 2011-ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்வு பெற்று தமிழகத்தில் பணியாற்றி வருகிறார். 2016-ல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று கரூர் மாவட்டத்தில் பணியாற்றியபோது, சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக, பிரபல அரசியல் பிரமுகரின் பினாமி வீட்டில்வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடியை பறிமுதல் செய்தார். அதே தேர்தலில் கண்டெய்னரில் வந்த ரூ.570 கோடியை மடக்கி பிடித்ததில் இவர் முக்கிய பங்காற்றினார். திருச்சி டிஐஜி வருண் … Read more

மகா கும்பமேளாவில் பிஹார் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் புனித நீராடல்!

புதுடெல்லி: மகா கும்பமேளாவுக்கு வருகை தந்த பிஹார் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் புனித நீராடினார். ஆரத்தியிலும் கலந்துகொண்டவர், சனாதனக் கலாச்சாரத்தை பாராட்டினார். உ.பி.யின் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவுக்கு பிஹாரின் ஆளுநர் ஆரிப் முகம்மது கான் வருகை புரிந்திருந்தார். இவரை உ.பி அரசின் சார்பில் அம்மாநில தொழில்துறை அமைச்சரான நந்து கோபால் குப்தா நந்தி வரவேற்றார். நேராக திரிவேணி சங்கமத்தில் தன் புனித நீராடலை அவர் முடித்தார். முக்கூடலில் நடைபெற்ற ஆரத்தி பூசையிலும் ஆளுநர் ஆரீப் முகம்மது … Read more