திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் ஒரு மணி நேரத்தில் பல ஆயிரம் பேர் திரண்டது எப்படி?

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்ட ஒரு மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் மலையை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரம் பேர் திரண்டது காவல்துறைக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திருப்பரங்குன்றத்துக்கு நேற்று முன்தினம் இந்து அமைப்பினர் செல்வதைத் தடுக்க காவல்துறை மதுரையில் வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு, கடும் கெடுபிடிகளை போலீஸார் செய்திருந்தனர். திருப்பரங்குன்றம் மட்டுமின்றி, மதுரை மாவட்டத்தின் அனைத்து எல்லைகளையும் சீல் வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவும் … Read more

‘கைவிலங்கு, கால்களில் சங்கிலி…” – அமெரிக்கா திருப்பி அனுப்பிய இந்தியர்கள் பகிர்ந்த அனுபவம்

புதுடெல்லி: பயணம் முழுவதும் கைகளில் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக அமெரிக்​கா​வில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தி​யர்​கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். முதல் கட்டமாக அமெரிக்காவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்​தசரஸுக்கு 104 பேர் வந்தடைந்தனர். “கடந்த ஜனவரி 24-ம் தேதி அமெரிக்க எல்லைக்குள் நான் நுழைந்தபோது அந்த நாட்டு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் என்னை பிடித்தனர். முறையான விசா மூலம் என்னை அமெரிக்காவுக்கு அனுப்புவதாக சொல்லிய டிராவல் முகமை நிறுவனம் என்னை … Read more

டெல்லியில் கருத்துக்கணிப்பு மெய்யாகுமா? 2020இல் Exit Poll கணித்ததும், நடந்ததும் இதோ!

Delhi Assembly Election 2025: டெல்லி 2025 தேர்தல் நிறைவடைந்ததும் கருத்துக்கணிப்புகள் வெளியாகி பாஜகவே வெற்றி பெறும் என கணித்து வருகின்றன. அந்த வகையில், 2020இல் கருத்துக்கணிப்புகள் கணித்தது என்ன, நடந்தது என்ன என்பதை இங்கு காணலாம்.

யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும்! அமைச்சர் கோவி.செழியன்

பெங்களூரு: யுஜிசியின் புதிய  விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும் என அமைச்சர் கோவி.செழியன்  தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்  நியமனங்கள் தொடர்பான வரைவு யுஜிசி விதிகளுக்கு எதிராக  தமிழ்நாடு உள்பட ஆறு மாநிலங்கள் ஒன்றுபடுகின்றன. ஆறு மாநிலங்களின் உயர்கல்வி அமைச்சர்கள்  நேற்று (புதன்கிழமை)  அவற்றை ஜனநாயக விரோதமானது என்றும் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என்றும் கண்டனம் செய்தனர். பல்கலைக்கழக துணைவேந்த நியமனம் தொடர்பாக UGC புதிய திருத்தங்களை வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு உள்பட பல … Read more

இத்தாலியில் இருந்து டெல்லிக்கு 10 கிலோ தங்கக்காசுகள் கடத்தல் – இருவர் கைது

புதுடெல்லி, டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறையின் வான் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இத்தாலி நாட்டின் மிலன் நகரில் இருந்து வந்த காஷ்மீரைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க 2 பயணிகளை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் உறையில் நன்கு சுற்றி வைக்கப்பட்டிருந்த பொட்டலத்தை பிரித்துப் பார்த்தனர். அதில் தங்கக்காசுகள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. எடை போட்டு பார்த்தபோது அதில் 10 கிலோ 90 கிராம் தங்க காசுகள் இருந்தன. … Read more

முதல் ஒருநாள் போட்டி; இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்

நாக்பூர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் நடக்கிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு … Read more

சுவீடன்: துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி; அரை கம்பத்தில் கொடிகளை பறக்க விட உத்தரவு

ஆரெபுரோ, சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகருக்கு மேற்கே கல்வி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்ற பெயரிடப்பட்ட அந்த பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதனால், மாணவர்கள் அனைவரும் நாலாபுறமும் தப்பியோடினர். இந்த தாக்குதலில், 10 பேர் பலியானார்கள். துப்பாக்கியால் சுட்ட நபரும் பின்னர் மரணம் அடைந்து பள்ளி வளாகத்திலேயே கிடந்துள்ளார். அவர் எப்படி பலியானார் என்ற விவரம் வெளிவரவில்லை. இந்த தாக்குதலுக்கான … Read more

ஓலா S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள் – Ola S1 Pro e scooter on-Road price and Specs

ரூ.1.33 லட்சம் முதல் ஓலா S1 Pro பேட்டரி ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை துவங்குகின்றது.

Healthy Food: லோ கலோரி; நோ கொலஸ்ட்ரால்; கேன்சர் கண்ட்ரோல்… இத்தனையும் செய்யும் ஒரு காய்!

உடலில் நீர்ச்சத்தையும், வெப்ப நிலையையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் வெள்ளரிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. மலிவான விலையில், மருத்துவப் பயன்கள் நிறைந்துகிடக்கும் வெள்ளரிக்காயின் பயன்களைப் பட்டியலிட்டார் காஞ்சிபுரம் சித்த மருத்துவர் சந்திரபாபு. ”காய்கறிகளில், மிகக் குறைவான கலோரி அளவுகொண்டது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 16 கலோரிதான் உள்ளது. 95 சதவீகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் கொழுப்புச் சத்து இல்லை என்பதால், உடல் எடையைக் குறைக்க மிகவும் ஏற்றது. வெள்ளரிக்காயில் … Read more

ஏப்ரல் முதல் காலி பாட்​டில் திரும்​பப்​பெறும் திட்டம்: உயர் நீதி​மன்​றத்​தில் டாஸ்​மாக் நிறு​வனம் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி … Read more