போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளதாகவும் வெண்டிலேட்டர் உதவி இனி தேவையில்லை என்றும் வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடுமையான சுவாச கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். இரட்டை நிமோனியா தாக்குதல் இருப்பதாக அறிவித்த மருத்துவர்கள் அவர் சிறிதுகாலம் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) நேற்று அகற்றப்பட்டதாகவும் அவரது உடல்நிலை சீராக […]