மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து நீக்கினார் மாயாவதி! – காரணம் என்ன?

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தனது தம்பியின் மகனுமான ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து நீக்குவதாக மாயாவதி அறிவித்துள்ளார். மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகனான ஆகாஷ் ஆனந்த், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். மேலும், தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த்தை மாயாவதி அறிவித்திருந்தார். இந்நிலையில், தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அரசியல் வாரிசு என்ற தகுதியில் இருந்தும் ஆகாஷ் ஆனந்த் நீக்கப்படுவதாக மாயாவதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) … Read more

செபியின் புதிய தலைவர்.. யார் இந்த துகின் காந்த பாண்டே? அவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Tuhin Kanta Pandey Latest News: செபியின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட துகின் காந்த பாண்டேவுக்கு பல சேலஞ்சஸ் இருப்பதை பார்க்க முடிகிறது. இனி இவர் எப்படி வொர்க் பண்ண போகிறார். இந்தியன் ஸ்டாக் மார்க்கெட்டில் என்ன மாதிரியான புது ரெகுலேஷன்ஸ் கொண்டு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா கடன் ரூ.181 லட்சம் கோடி! பாஜக அடித்த கமிஷன் எவ்வளவு அண்ணாமலை? தங்கம் தென்னரசு பதிலடி

Minister Thangam Thenarasu | தமிழ்நாட்டின் கடனை சுட்டிக்காட்டி விமர்சித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சூடான பதிலடியை கொடுத்திருக்கிறார்.

ICC Champion Trophy, India vs Australia | ஆஸ்திரேலியாவை வெற்றி பெற இந்திய அணி செய்யவே கூடாத தவறுகள்..!

ICC Champion Trophy, India vs Australia | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் அரையிறுதிப் போட்டி நாளை துபாய் மைதானத்தில் நடக்கிறது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் சில தவறுகளை செய்யவே கூடாது. ஏனென்றால் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் செய்த அந்த தவறுகளால் தான் இந்திய அணி தோற்க நேரிட்டது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை கனவும் தகர்ந்து போனது. எனவே, … Read more

Kayadu Lohar: `தவறான விஷயங்களைப் பரப்ப வேண்டாம்…'- விமர்சனத்திற்கு பதிலளித்த கயடு லோஹர்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ’டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆகியிருக்கிறார். அவரது ரீல்ஸ்களும், புகைப்படங்களும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இதனிடையே அவர் தனக்கு தானே மீம்ஸ் போட்டுக்கொண்டு தன்னை புரோமோட் செய்துகொள்கிறார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். கயடு லோஹர் அந்தவகையில் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றிற்கு பிரதீப் … Read more

BSNL: 6 மாசத்திற்கு கவலையே வேண்டாம்… குறைந்த விலையில் நிறைந்த சேவை!

BSNL Cheap Recharge Plans With Long Validity: பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது லாபத்தை குவித்து வருகிறது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான இது தனியார் நிறுவனங்களில் ஆதிக்கத்தால் கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ந்து பின்னடைவில் இருந்து வந்தது. BSNL Recharge Plans: மலிவு விலையில் நிறைவான சேவை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்ததன் விளைவாக அடுத்தடுத்த மாதங்களில் பிஎஸ்என்எல் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது … Read more

போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது… வெண்டிலேட்டர் உதவி இனி தேவையில்லை…

போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளதாகவும் வெண்டிலேட்டர் உதவி இனி தேவையில்லை என்றும் வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடுமையான சுவாச கோளாறு காரணமாக கடந்த பிப்ரவரி 14ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டார். இரட்டை நிமோனியா தாக்குதல் இருப்பதாக அறிவித்த மருத்துவர்கள் அவர் சிறிதுகாலம் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) நேற்று அகற்றப்பட்டதாகவும் அவரது உடல்நிலை சீராக … Read more

IND vs AUS: “ஆஸ்திரேலியா மிகச்சிறந்த எதிரணி ஆனால்…" – அரையிறுதி பற்றி ரோஹித் சொல்வதென்ன?

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதியில் நாளை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதவிருக்கின்றன. கடந்த 2023 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருந்தது. அந்த தோல்விக்கு இப்போது இந்திய அணி பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தப் போட்டியைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். ரோஹித் ரோஹித் சர்மா பேசியதாவது, “நியூசிலாந்துக்கு எதிரான போட்டியே இப்போதுதான் முடிந்திருக்கிறது. நாங்கள் நான்கு ஸ்பின்னர்களோடு செல்ல … Read more

விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீமான் பாலியல் ரீதியாக ஏமாற்றி விட்டதாக, அவருக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப் … Read more

“மாயாவதி முடிவை மதிக்கிறேன்” – கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த் ரியாக்‌ஷன்

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் அனைத்து முடிவுகளையும் மதிப்பதாக, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார். மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகனான ஆகாஷ் ஆனந்த், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். மேலும், தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்த்தை மாயாவதி அறிவித்திருந்தார். இந்நிலையில், தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அரசியல் வாரிசு என்ற தகுதியில் இருந்தும் ஆகாஷ் ஆனந்த் நீக்கப்படுவதாக மாயாவதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) … Read more