‘புது வெள்ளை மழை…’ – ராஜஸ்தானில் திடீர் வானிலை மாற்றமும், வைரல் பகிர்வுகளும்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வானிலை பெரும் மாற்றம் காண்டுள்ளது. அங்குள்ள சுரு மற்றும் சர்தார்சஹர் முதலான பகுதிகளில் கனமழை மற்றும் பனிக்கட்டி மழை பெய்து வருகிறது. அங்கிருக்கும் தெருக்களில் பனிக்கட்டிகள் ஒரு போர்வை போல விரிந்து கிடக்கும் படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன. இந்திய வனத்துறை அதிகாரியான (ஐஎஃப்எஸ்) பர்வீன் கேசவன் இதுபோன்றதொரு வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை பகிர்ந்துள்ளார். அதில், ராஜஸ்தானின் சுருவில் உள்ள தெருக்கள், வீடுகள், திறந்தவெளிகள் பனிக்கட்டிகளால் வெள்ளைப் போர்வை … Read more

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குநர்! ரூ.1000 கோடி வசூல் கொடுத்தவர்..யார் தெரியுமா?

Sivakarthikeyan To Act In Director Atlee Film : நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது பராசக்தி மற்றும் மதராஸி ஆகிய படங்களில் நடித்து வருவதை தொடர்ந்து, அடுத்து அவர் யாருடன் கூட்டணி வைக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.  

IND vs NZ: இந்தியா அரையிறுதியில் யாரோடு மோதும்…? நியூசிலாந்து வெற்றி பெற 70% வாய்ப்பு – ஏன்?

IND vs NZ: ஐசிசி சாம்பியன்ஸ் லீக் 2025 தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நாளையோடு (மார்ச் 2) நிறைவடைய இருக்கின்றன. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன. IND vs NZ: துபாயில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா குரூப் – பி போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. குரூப் – பி பிரிவில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தையும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இரு அணிகளில் எந்த அணி துபாயில் இந்திய அணியுடன் முதல் … Read more

90 செகண்டில் அமெரிக்கா கட்டிவைத்திருந்த பிம்பத்தை அசைத்துப் பார்த்த ஜெலன்ஸ்கி… உக்ரைனுக்கு ஆதரவாக ஒன்று திரண்ட EU

கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லை… ராஜதந்திரம் என்ன ராஜதந்திரம்…. எங்க எதிர்க்கட்சி காரங்ககூட சரசம் பண்ணது நீதானே ?… 2014ல் இருந்து இப்பவரை ரஷ்ய தாக்குதல் தொடருது எங்களைக் காப்பாற்ற என்ன பண்ணீங்க ? இப்போ நிலைமையே வேற நாங்க நிறுத்தறோம்… நிறுத்திக் காட்டுறோம்… என்ன உத்தரவாதம் ? என்ன உத்தரவாதம் தரமுடியும்… இந்த நிமிஷம் தலைமேல் குண்டு விழாதுன்னு நிச்சயம் இல்லை… இவை, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே … Read more

லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள்: உக்ரைன் அதிபரை நேருக்கு நேர் எச்சரித்த டிரம்ப்

வாஷிங்டன், ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் … Read more

KFC சிக்கனால் இளம்பெண்ணுக்கு உடல்நலக் குறைவு; ரூ.10,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

திருப்பூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கார்த்திகா முருகவேல். பி.காம் பட்டதாரியான இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்தாண்டு மே மாதம் 6-ம் தேதி தன் தோழியுடன், கோவை காந்திபுரத்தில் உள்ள கே.எஃப்.சி (KFC) உணவகத்திற்குச் சென்று சிக்கன் சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வயிற்றுவலி, காய்ச்சல், வாந்தி போன்ற தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். அடுத்த நாள் காலையில் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், மாலை தனியார் மருத்துவமனைக்குச் … Read more

குமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கிட முதல்வர் உத்தரவு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா நடந்துவரும் நிலையில் இன்று (மார்ச் 1) மாலையில் நடைபெற்ற தேர் பவனியில் அலங்காரம் … Read more

உத்தராகண்ட் பனிச்சரிவு: நான்கு பேர் பலி, 46 பேர் மீட்பு, ஐந்து பேரை தேடும் பணி தீவிரம்

புதுடெல்லி: உத்தராகண்ட்டின் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லை சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) தொழிலாளர்களில் 4 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 5 பேரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட வருவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட்டின் சாமோலி மாவட்டத்தில் உள்ள உயரமான மனா கிராமத்தில் உள்ள எல்லை சாலைகள் அமைப்பின் முகாமில் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்பட்ட பனிச்சரிவில் 55 தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், அவர்களில் … Read more

'குட் பேட் அக்லி' இயக்குநருக்கு சஃப்ரைஸ் கொடுக்க இருக்கும் அஜித் ரசிகர்கள்.. என்னனு தெரியுமா?

நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பரிசு வழங்க உள்ளனர். 

பாஜகவின் மறைமுக மொழிக் கொள்கை மாநில மொழி வெறுப்ப்பு : முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு  க ஸ்டாலின் மாநில மொழி வெறுப்பே பாஜகவின் மறைமுக மொழிக் கொள்கை எனத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலி இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தில், ”மாநில மொழிகளை வளர்ப்பதற்கும், பரவச் செய்வதற்கும்தான் தேசிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்று பா.ஜ.க. அரசு சொல்வது பச்சைப் பொய் என்பதை பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் … Read more