200 ஆண்டு பழமையான மூதாதையர் வீட்டை அருங்காட்சியகமாக மாற்றிய பெண்

இடாநகர்: மேற்கு அருணாச்சலில் வசிக்கும் மோன்பா சமூகத்தை சேர்ந்த 24 வயது பெண் லீகே சோமு. வேளாண் பட்டதாரியான இவர் 200 ஆண்டுகள் பழமையான தனது மூதாதையர் வீட்டை ஒரு வாழும் அருங்காட்சியகமாக மாற்றியுள்ளார். இங்குள்ள கலைப்பொருட்கள் மட்டுமின்றி மண் மற்றும் கல்லைக் கொண்டு பண்டைய மோன்பா தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்த வீடும் ஒரு அருங்காட்சியகமாக உள்ளது. மோன்பா சமூகத்தின் கட்டிடக் கலை, வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரியத்தை இது காட்டுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் மோன்பா … Read more

போப் பிரான்சிஸ்-க்கு இருமல், வாந்தி, மூச்சுத் திணறல்: வாடிகன் தகவல்

ரோம்: போப் பிரான்சிஸ், இருமல், வாந்தி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த பிப். 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசப் பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ்க்கு கடந்த பிப். 22ம் தேதி ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்தது. ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால் … Read more

அடேங்கப்பா.. ஒரு எலுமிச்சை 13 ஆயிரம் ரூபாய்-ஆ? காரணம் இதுதாங்க..

Erode District News: தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமக் கோவிலில் ஒரு எலுமிச்சை மட்டும் ரூ.13 ஆயிரத்திற்கு ஏலம் போனது.

விராட் கோலி உடைக்கப்போகும் 6 மிகப்பெரிய கிரிக்கெட் சாதனைகள்..!

Virat Kohli Records : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் நாளை அதாவது ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு இரு அணிகளும் மோதும் போட்டி தொடங்கும். நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் அனைவரின் பார்வையும் விராட் கோலி மீது இருக்கப்போகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசியாக நடைபெற்ற போட்டியில் விராட் கோலி இறுதிவரை சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 100 … Read more

சென்னை மாநகராட்சி மண்டலங்களை 15ல் இருந்து 20 ஆக அதிகரிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மறுசீரமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதால், பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலங்களின் எண்ணிக்கையை 15ல் இருந்து 20 ஆக அதிகரிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாநில அரசு நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சியை மேம்படுத்தவும் முதலீட்டை அதிகரிக்கவும், மண்டலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது என்று மாலைமலர் அறிக்கை கூறுகிறது. தற்போது, ​​மாநகராட்சியில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு வி கா நகர், அம்பத்தூர், அண்ணா நகர், … Read more

பஜாஜ் கோகோ எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷா விலை மற்றும் முக்கிய சிறப்புகள்.!

பஜாஜ் ஆட்டோவின் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார ஆட்டோரிக்‌ஷா பிரிவுக்கு என பிரத்தியேக கோகோ (Bajaj Gogo) பிராண்டினை அறிமுகம் செய்து P5009, P5012, மற்றும் P7012 என மூன்று வகைகளில் ரூ. 3,26,797 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. P5009, P5012, மற்றும் P7012. வகை பெயருக்கான விளக்கம், ‘P’ என்பது பயணிகளுக்கான வாகனம், ’50’ மற்றும் ’70’ அளவுகளை குறிக்கின்ற நிலையில், ’09’ மற்றும் ’12’ ஆகியவை முறையே 9 kWh மற்றும் 12 … Read more

“திமுக செல்வாக்கு குறைந்ததால், மும்மொழிக் கொள்கையை வைத்து திசை திருப்புகிறார்கள்'' -கே.பி.முனுசாமி

அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டார். அப்போது, பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வாங்க பொதுமக்கள் முண்டியடித்ததால், அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் திணறினர். முண்டியடிக்கும் கூட்டம் அதன்பிறகு, பொதுக்கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி, “அ.தி.மு.க மத்திய அரசுக்கு அடிமையாக இருந்ததாக விமர்சித்தார்கள். தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்கும் போது மத்திய அரசுடன் … Read more

பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து

புதுடெல்லி: முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மு.க.ஸ்டாலினுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த … Read more

உத்தராகண்ட் பனிச்சரிவு: மேலும் 14 பேர் மீட்பு; எஞ்சியோரை மீட்கும் பணிகள் தீவிரம்

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் மேலும் 14 பேர் இன்று (சனிக்கிழமை) மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 8 பேர் பனிச்சரிவில் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நடந்தது என்ன? உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே … Read more

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் காட்டிய அதிரடி; வெளியேற்றப்பட்ட ஜெலன்ஸ்கி! – நடந்தது என்ன?

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கொண்ட சந்திப்பு காரசார விவாதத்துடன் முடிந்தது, பேச்சுவார்த்தையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக் கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்தார். அந்த சந்திப்பின்போது துணை அதிபர் ஜேடி வேன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பில் ட்ரம்ப் பொறுமையிழந்தவராக காரசார விவாதத்தில் ஈடுபட்டார். ட்ரம்ப் தனது குரலை உயர்த்தி, நீங்கள் மூன்றாம் … Read more