5 நாடுகள் – 8 நாள் பயணம்; பிரதமர் மோடி, ஜுலை 2ந்தேதி வெளிநாடு பயணமாகிறார்…

டெல்லி: பிரதமர் மோடி, ஜுலை 2ந்தேதி வெளிநாடு பயணமாகிறார். அவரது பயணத்திட்டம் 8 நாட்கள் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின்போது, 5 நாடுகளுக்கு செல்வதாக வெளியுறவுத்துறை அறிவித்து உள்ளது. உலக நாடுகளிடையே போர்மேகம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, ஜுன் மாதம் கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டிற்கு சென்றார். அவரின் 3 நாள் பயணத்தின்போது, கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். பின்னர் கனடா பயணத்தை நிறைவு செய்த … Read more

ரெயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்கள் நேரடி தேர்வு: ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி, ரெயில் கட்டுப்பாட்டு துறை, இந்திய ரெயில்வேயின் மூளை அல்லது நரம்பு மையமாக கருதப்படுகிறது. அத்துறையில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ரெயில்வே தேர்வு வாரியம் நடத்திய ரெயில்வே போக்குவரத்து பழகுனர் தேர்வு மூலம் ஊழியர்கள் நேரடி தேர்வுமுறை மூலம் நியமிக்கப்பட்டு வந்தனர். 2017-ம் ஆண்டில் இருந்து இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கார்டுகள், நிலைய மேலாளர்கள், குமாஸ்தாக்கள் ஆகியோரில் இருந்து ரெயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், கட்டுப்பாட்டு துறையில் பணப்பலன்கள் சமமாகவோ, … Read more

2-வது டெஸ்ட்: வங்காளதேசத்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இலங்கை

கொழும்பு, வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 247 ரன்னில் அடங்கியது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 116.5 ஓவர்களில் 458 ரன்கள் குவித்து ஆல்-அவுட் … Read more

ஜப்பானில் 8 பெண்கள் பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு தகாஹிரோ ஷிரைசி என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 9 பேரை கொலை செய்தார். இதில் 8 இளம்பெண்களும் அடங்குவர். அவர்களை பலாத்காரம் செய்து பின்னர் துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் 2020-ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை … Read more

CJI BR Gavai: "நீ நீதிபதியானால் அம்பேத்கர் காட்டிய வழியைப் பின்பற்றுவாய்" – தந்தை குறித்து கவாய்

ட்நாக்பூரில் நடந்த கோர்ட் பார் அசோசியேஷன் நிகழ்வில் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய், தான் சட்டம் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது… “கட்டடக் கலை கலைஞர் ஆக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், என் தந்தைக்கு வேறு கனவு இருந்தது. அவருக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், அவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டதால், அவரால் வழக்கறிஞராக ஆக முடியவில்லை. இந்திய தலைமை நீதிபதி … Read more

அரசு விழாவுக்காக மருத்துவர்களிடம் கட்டாய வசூல் நடப்பதாக பேசிய நபரை தேடி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திண்டுக்கல்: அரசு விழாவுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் கட்டாய வசூல் நடப்பதாக வெளியான ஆடியோவில் பேசிய நபரை தேடி வருகிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடியில் புதிய சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் புளுரோஸ்கோபி கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 28) தொடங்கி வைத்தார். இதே போல், ரூ.2.25 கோடியில் திண்டுக்கல்லில் 4 இடங்களில் அரசு ஆரம்ப … Read more

''மதச்சார்பின்மை நமது கலாச்சாரத்தில் முக்கியமானதல்ல'' – சிவராஜ் சிங் சவுகான்

வாரணாசி: இந்தியாவுக்கு சோசலிசம் தேவையில்லை, மதச்சார்பின்மை நமது கலாச்சாரத்தில் முக்கியமானதல்ல என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். அவசரநிலையின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “இந்தியாவில் சோசலிசம் தேவையில்லை. மதச்சார்பின்மை என்பது நமது கலாச்சாரத்தின் மையக்கரு அல்ல. எனவே, இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். தனது அதிகாரத்தைக் காப்பாற்றுவதற்காக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தினார். அப்போது … Read more

கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது: இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் கருத்து

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது என்று இஸ்ரேல்பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்து உள்ளார். இஸ்ரேல், ஈரான் இடையே 12 நாட்கள் தீவிர போர் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அணு ஆயுதங்களை ஈரான் தயாரிப்பதை தடுக்க கடந்த 13-ம் தேதி அந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தோம். 12 நாட்கள் நீடித்த போரில் எங்களது லட்சியங்களை அடைந்துவிட்டோம். … Read more

த்ரிஷா பரிசளித்த ‘கஜா’ இயந்திர யானை! அதன் விலை என்ன தெரியுமா?

Trisha Mechanical Elephant Gaja Price : நடிகை த்ரிஷா, கோயில்களுக்கு இரண்டு இயந்திய யானைகளை நன்கொடையாக அளித்துள்ளார். அதே போல அன்னதானமும் கொடுத்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

மாணவர்களிடையே சாதி, மத மோதலை தடுக்க பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்

Tamil Nadu school guidelines : அனைத்து பள்ளிகளிலும் சாதி, மத மோதலை தடுக்கவும், மாணவர்களிடையே ஒழுக்கத்தை வளர்கபகும் வகையிலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.