ஜூலை 5 அன்று பேரழிவு ஏற்படுமா? ஜப்பானிய பாபா வாங்காவின் கணிப்பால் உலகம் அச்சமடைந்துள்ளது

ஜப்பானிய உளவியலாளர் ரியோ டாட்சுகி, 2025 ஆம் ஆண்டில் ஜப்பானில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்படும் என்று கணித்துள்ளார். அவர் பல்கேரியாவின் பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வாங்காவுடன் ஒப்பிடப்படுகிறார். உலகளாவிய நிகழ்வுகள் குறித்து அவர் மிகவும் துல்லியமான கணிப்புகளைச் செய்துள்ளார். ஜூலை மாதம் ஜப்பானில் ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் என்ற கணிப்பு மக்களை பயமுறுத்தியுள்ளது. ஜப்பானில் சமீபத்திய நாட்களில் பல முறை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இவை ரியோ தட்சுகியின் தீர்க்கதரிசனத்துடன் இணைக்கப்படுகின்றன. ஜப்பானிய … Read more

"பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்தது இவனைத்தான்…" – யார் இந்த US Open சாம்பியன் ஆயுஷ் ஷெட்டி?

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் சூப்பர் 300 (US Open Badminton Super 300) தொடரில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 6-ம் இடத்தில் இருக்கும் சீன தைபே வீரர் சௌ டியென் சென்னுக்கு எதிரான அரையிறுதியில் முதல் செட்டை இழந்தபோதிலும் அடுத்து இரண்டு செட்களை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஆயுஷ் ஷெட்டி. அதைத் தொடர்ந்து, நேற்றைய இறுதிப்போட்டியில் கனடா வீரர் பிரையன் யாங்கை … Read more

“திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல” – உதயநிதி விவரிப்பு 

சென்னை: “புள்ளிவிவரங்களின் அடிப்படையில்தான் திமுக ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறோம். இது வெறும் வார்த்தை ஜாலத்துக்காக அல்ல” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விவரித்துள்ளார். தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 19-வது தேசிய புள்ளியியல் தின விழா சென்னை நந்தனத்தில் இன்று (ஜூன் 30) நடைபெற்றது. இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், இளங்கலை மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு … Read more

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு 6 நாள் பயணம்

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூன் 30) முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு அதிகாரபூர்வமாக பயணம் மேற்கொள்கிறார். அவரது தலைமையில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையைச் … Read more

"திமுகவினர் பைத்தியம் பிடித்து திரிகின்றனர்" – எல். முருகன் ஆவேசம்!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எல்.முருகன், திமுகாவை கடுமையாக சாடி பேசினார். மேலும், ஏ. ஆர். ரகுமான் சந்திப்பு குறித்து விளக்கினார். 

சண்டைக்கு ரெடியான இங்கிலாந்து – பிளேயிங் லெவன் அறிவிப்பு – ஆனா இந்திய அணி ஹேப்பி!

England Playing XI Announcement: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரின் 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுதினம் (ஜூலை 2) தொடங்குகிறது. இந்நிலையில், இங்கிலாந்து அணி இந்த 2வது போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது.  சமீப ஆண்டுகளாகவே, அதிரடி அணுகுமுறையை கையில் எடுத்திருக்கும் இங்கிலாந்து அணி, இதுபோன்று போட்டி தொடங்குவதற்கு 48 மணிநேரங்களுக்கு முன்னதாக பிளேயிங் லெவனை அறிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையிலேயே, இங்கிலாந்து அணி … Read more

Suriya 46: "சஞ்சய் ராமசாமி போன்ற கேரக்டர்; ஃபேமிலி கதை" – 'சூர்யா 46' சீக்ரெட்ஸ் சொல்லும் இயக்குநர்

சூர்யா தற்போது ‘கருப்பு’ படத்தின் படப்பிடிப்பிலும், ‘சூர்யா 46’ படப்பிடிப்பிலும் இயங்கி வருகிறார். ‘சூர்யா 46’ படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. ஷூட்டிங் இடைவெளியில் தற்போது ஆப்பிரிக்கா டூரும் சென்றிருக்கிறார் சூர்யா. Suriya 46 சூர்யாவின் 46-வது படத்தை ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இத்திரைப்படம் தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. இயக்குநர் வெங்கி அட்லூரி, “‘சூர்யா 46’ படத்தை ஒரு பயோபிக் படமாகத்தான் எடுக்க … Read more

ஈரான் அணுஆயுத தளங்களை அழித்த அமெரிக்க பங்கர் பஸ்டர்களைப் போல இந்தியாவும் உருவாக்குகிறது

இஸ்ரேல் – ஈரான் போரின் போது ஈரானில் உள்ள மூன்று அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் B-2 விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பங்கர் பஸ்டர்கள் மூலம் ஈரானிய அணு ஆயுத தளங்களை முற்றிலும் அழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உயர் சக்தி கொண்ட பதுங்கு குழி-பஸ்டர் ஏவுகணைகளைத் தயாரிக்க இந்தியா சொந்தமாக முயற்சித்து வருவதாக இந்தியா டுடே ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு … Read more

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணியின் பயிற்சி முகாமில் ஹர்ப்ரீத் பிரார்.. காரணம் என்ன..?

பர்மிங்காம், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி … Read more

"தண்டனையை விரைவாகப் பெற்றுத் தந்து நீதியை நிலைநாட்டும் திராவிட மாடல் அரசு" – முதல்வர் ஸ்டாலின்

திருப்புவனம் லாக்கப் டெத் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா, தனது காரிலிருந்து 10 பவுன் நகை காணாமல் போய்விட்டதாகத் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரின்படி, கோயில் காவலாளி அஜித்குமாரை (வயது 27) விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற போலீஸார் அவரைக் கடுமையாகத் தாக்கியதில், அஜித்குமார் உயிரிழந்தார். திருப்புவனம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் … Read more