“ரஹ்மானுடன் அரசியல் பேசவில்லை; பாஜகவுக்கு மீனா வந்தால்…” – எல்.முருகன் விவரிப்பு

திருச்சி: “ஏ.ஆர்.ரஹ்மானுடன் அரசியல் எதுவும் பேசவில்லை. நடிகை மீனா பாஜகவுக்கு வந்தால் வரவேற்கத்தக்கது” என்று மத்திய இணை அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் கூறினார். திருச்சியில் இன்று (ஜூன் 30) செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுகவினர் தோல்வி பயத்துடன் ஆட்சி நடத்தி வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி மூலம் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம். முதல்வர் ஸ்டாலின் செயல்படாததன் விளைவாக லாக்கப் மரணம் நடந்துள்ளது. காவல் நிலையத்துக்கு செல்லவே மக்கள் அச்சப்படுகிறார்கள். முதல்வரின் உத்தரவை … Read more

மணிப்பூரில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு

சூரசந்த்பூர்: மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 72 வயது பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். சூரசந்த்பூர் நகரத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள மோங்ஜாங் கிராமத்துக்கு அருகே பிற்பகல் 2 மணியளவில் பாதிக்கப்பட்டவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து காரை நோக்கி சுட்டதாக சூரசந்த்பூர் மாவட்ட … Read more

சமூக வலைதளத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது எப்படி?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன. சமூக வலை தளங்கள் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்திய காலம் மாறி, அதற்குள் சிக்கிக்கொண்ட மனநிலைக்குப் பலரும் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்ற குறும் வீடியோக்களில் இன்றைய தலைமுறை அதிக நேரத்தைச் செலவிடு வதால் கல்வி, வேலை, உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. உலகம் முழுவதும் மாணவர்கள் சுமார் 1-2 மணி நேரத்தில் 300-400 ரீல்ஸ்கள் பார்ப்பதாகவும், சராசரியாக ஒரு நபர் … Read more

கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியீடு

இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!

பாஜக – அதிமுக இடையே இணைப்பு தான் உள்ளது, பிணைப்பு இல்லை – தொல். திருமாவளவன்!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக – பாஜக இடையே பிணைப்பு இல்லை என கூறி உள்ளார். 

Vetrimaaran: 'STR-49'ல் இரண்டு கெட்டப்களில் அசத்தும் சிலம்பரசன்; தொடங்கும் படப்பிடிப்பு அப்டேட்

கடந்த இரண்டு நாட்களாக வெற்றிமாறன் – தனுஷ் – சிலம்பரசனின் ‘வட சென்னை’ என்.ஓ.சி. விவகாரம்தான் கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு வெற்றிமாறன் முடிவுக்கு வந்துவிட்டவே, மீண்டும் உற்சாகமாகியுள்ளது பட யூனிட். வெற்றிமாறனின் படத்தின் தற்போதைய நிலவரம் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி.. இயக்குநர் வெற்றி மாறன் தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கிறார். அந்த படத்தின் புரோமோ ஷூட் ஒன்று விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கான படப்பிடிப்பு ஒன்று சமீபத்தில் சென்னை எழும்பூரில் … Read more

ஃபுஜைரா : கார்கள் செல்லும் போது சாலையில் எழும் இசை

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஃபுஜைரா-வில் கார்கள் செல்லும் போது சாலையில் இசை ஒலிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் முறையாக இதுபோன்ற சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது கலை மற்றும் இசைக்கு ஃபுஜைரா கொடுத்துவரும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. ஃபுஜைரா நகருக்குள் நுழையும் இடத்தில் சுமார் 750 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை கடக்கும் போதும் வாகனத்தின் உள்ளே இருந்தபடி இசையை ரசித்தபடி பயணம் செய்யலாம். இது அந்த சாலை வழியாக செல்லும் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

'உயிரிழந்த இளைஞர் என்ன தீவிரவாதியா?' – காவல்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை சரமாரி கேள்வி

மதுரை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்ற இளைஞர், போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இதனிடையே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றபோது, “உயிரிழந்த இளைஞர் என்ன பயங்கரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினாரா?” … Read more

பாக். டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல் ரவுண்டர் நியமனம்

கராச்சி, பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் ஆல் ரவுண்டர் அசார் மக்மூத் நியமிக்கப்பட்டுள்ளார். 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு அணியை நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக தடுமாறி வரும் பாகிஸ்தான் அணிக்கு இவரது வருகை வலுவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த … Read more

பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பஜர் அலி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கத்தை எதிர்த்து கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தை தொடர்ந்து அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து வங்காளதேசத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. பிரதமராக முகமது யூனிஸ் பதவியேற்றார். ஆனால் அதன் பிறகு வங்காளதேசத்தில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன. சமீபத்தில் துர்க்கை அம்மன் கோவில் ஒன்று சூறையாடப்பட்டது. இந்த நிலையில், வங்காளதேசத்தில் 21 வயது இந்து பெண்ணை அரசியல் … Read more