கவாஸ்கர், சச்சின், விராட் கோலி மூவரில் சிறந்த வீரர் யார்..? இங்கிலாந்து முன்னாள் வீரர் தேர்வு

லண்டன், இந்திய கிரிக்கெட் அணி பல தலைமுறைகளாக அற்புதமான பேட்ஸ்மேன்களைக் கண்டுள்ளது. 1970- 1980-களில் சுனில் கவாஸ்கர் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தார். அதன்பின் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் தெண்டுல்கர் வந்தார். தெண்டுல்கர் ஓய்வு பெற்றவுடன், விராட் கோலி அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் ஒரு முக்கிய வீரரானார். மூன்று பேட்ஸ்மேன்களும் வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், யார் சிறந்தவர்? என்று அடிக்கடி கேள்வி எழுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரான ஆலன் லாம்பிடம் சுனில் கவாஸ்கர், விராட் … Read more

படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் 'மெட்டா ஏ.ஐ.' – வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்

வாஷிங்டன், உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 2014 ஆம் ஆண்டு வாங்கியது. தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயனர்களின் தேவைக்கு ஏற்ப வாட்ஸ்அப்பில் அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் … Read more

கடலூர்: `அலட்சிய சிகிச்சை… முறையிட்டால் மிரட்டல்!' – அரசு மருத்துவரிடம் விசாரணை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறு காயங்களுடன் சிறுவன் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிறுவனை பரிசோதித்து, மருத்துவர் வழங்கிய ஊசி சிறுவனுக்கு மேலும் வலியினை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனின் தந்தை கேட்டபோது, அவரை சரமாரியாக மருத்துவர் திட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சிக்கு பின்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. … Read more

அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

மதுரை: ‘மடப்புரம் கோயில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்? அவர் என்ன தீவிரவாதியா?’ என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் முன்பு அதிமுக வழக்கறிஞர்கள் மாரீஸ்குமார், ராஜராஜன், பாஜக வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் இன்று (ஜூன் 30) காலை நேரில் ஆஜராகி, மடப்புரம் காளி கோயில் காவலர் அஜித்குமார் போலீஸ் காவலில் இறந்த விவகாரம் தொடர்பாக … Read more

தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டம், பாஷமிலாராம் தொழிற்பேட்டையில் உள்ள மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ரசாயன ஆலையில் இன்று (திங்கட்கிழமை) இந்த விபத்து நிகழ்ந்தது. அதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, 13 பேர் இடிபாடுகளுக்கு இடையேயிருந்து … Read more

சமூக ஊடகம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள், காணொளிகள், பதிவுகள் கொட்டிக் கிடக்கும் சமூக வலைதளத்தை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? இதைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா? சமூகப் பொறுப்பு: யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகக் கணக்குகளில் எதை, எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்பதில் தொடங்கி எதைப் பார்க்கக் கூடாது என்பதுவரை தனிநபர்தான் முடிவு … Read more

வருன் சக்கரவர்த்தியின் முதல் சம்பளம் இவ்வளவுதானா? ஆனா இப்போ? அவரே சொன்ன மேட்டர்!

தற்போது இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் வருண் சக்கரவர்த்தி. இவர் டிஎன்பிஎல், ஐபிஎல் மூலம் அடையாளம் காணப்பட்டார். கிரிக்கெட்தான் தனது வாழ்க்கை என முடிவு செய்வதற்கு முன்பு வரை வருன் சக்கரவர்த்தி பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார்.  ஐபிஎல் தொடரில் தனது பந்து வீச்சு தறனை வெளிப்படுத்தி தற்போது இந்திய டி20 அணியின் முக்கிய சுழற் பந்து வீச்சாளராக மாறி உள்ளார் வருண் சக்கரவர்த்தி. சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய … Read more

Dragon 100: “நான் கோபக்காரன்னு புகார்கள் சொல்லியிருக்காங்க!'' – இயக்குநர் மிஷ்கின்

அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ‘டிராகன்’. ஹீரோவாகத் தொடர்ந்து ஹிட் வரிசைகளை அடுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். ‘டிராகன்’ படத்தில் பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். Dragon இப்படத்தின் 100-வது நாள் விழா கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இங்கு படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது. இயக்குநர் மிஷ்கின் தற்போது … Read more

ஈரானில் இருந்து தமிழக மீனவர்களை மீட்க கோரிய மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 498 மீனவர்களும், நெல்லை மாவட்டத்தில் இருந்து 78 மீனவர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 72 மீனவர்களும் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 3 மீனவர்களும், என மொத்தம் தமிழகத்தைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில் சிக்கித் தவிக்கிறார்கள். போர்ச் சூழல் காரணமாக அங்கு அதிகரிப்பதால் அவர்கள் கடும் … Read more

தெலுங்கானா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 10 பேர் பலி

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு … Read more