அரசு ஊழியர்களை ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்ய கூடாது – அரசாணை சொல்வது என்ன?

சென்னை: ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: ‘ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 செப்டம்பர் 7-ம் தேதி அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் தற்காலிக … Read more

இமாச்சல் மணிமகேஷ் யாத்திரையில் கனமழையால் 10 பக்தர்கள் உயிரிழப்பு; 4 பேர் மாயம்

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மணிமகேஷ் யாத்திரை இந்த ஆண்டு பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 10 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்றும், நான்கு பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் பெய்யும் கனமழை, நிலச்சரிவுகள் மற்றும் மோசமான வானிலை ஆகியவை காரணமாக மணிமகேஷ் யாத்திரை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சிம்லாவில் ஊடகங்களிடம் பேசிய இமாச்சலப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சிறப்புச் செயலாளர் … Read more

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

தியான்ஜின்(சீனா): எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சிமாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தியான்ஜின் நகரில் உள்ள பின்ஹாய் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன உயர் அதிகாரிகளும் இந்திய உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். … Read more

திடீர் திருமண அறிவிப்பு! ஷாக் கொடுத்த 4 பிரபலங்கள்.. யார் தெரியுமா?

Celebrities Wedding Announcements Controversy : ஒரே சமயத்தில், 4 பிரபலங்கள் தங்களின் திருமண அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, இதுதான் தற்போது தமிழ்நாடு முழுக்க பேச்சாக இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

ஸ்டாலின் மருத்துவ முகாம்: 1 வாரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்-அமைச்சர் மா.சு பேட்டி!

Nalam Kaakum Stalin Medical Camp : கடந்த வாரம் வரை நடைபெற்ற 112 நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில்  1,48,290 பேர்கள் மருத்துவ பயன்பெற்றுள்ளதாக அமைசர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

பாலஸ்தீன அதிபரின்  விசாவை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

வாஷிங்டன்: ஐ.நா பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் பங்கேற்பதை தடுக்கும் வகையில், அவரது விசாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். ஐ.நா. பொதுச் சபையின் (UNGA 80) 80வது அமர்வு செப்டம்பர் 9, 2025 செவ்வாய்க்கிழமை தொடங்கும். உயர்மட்ட பொது விவாதத்தின் முதல் நாள் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பங்கேற்க இருப்பதாக … Read more

7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; சமஸ்கிருத ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்த 36 வயது சமஸ்கிருத ஆசிரியர் மீது, அதே பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் மாணவிகள் தங்கள் புகாரை தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் இது குறித்து உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட சமஸ்கிருத ஆசிரியர் பள்ளியில் விடுமுறை கடிதம் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை … Read more

தமிழக அணியிலிருந்து விலகியது ஏன்..? விஜய் சங்கர் விளக்கம்

சென்னை, ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக விளையாடி வந்த முன்னணி ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர் எதிர்வரும் சீசனில் திரிபுரா அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். அதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற்றுள்ளார். தமிழக அணிக்காக விளையாடிய கால கட்டங்களில்தான் அவர் இந்திய அணிக்கு விளையாட தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தமிழக அணியிலிருந்து விலகியது ஏன்? என்பது குறித்து விஜய் சங்கர் தற்போது விளக்கமளித்துள்ளார். அதில், “சில … Read more

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்- பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி

இஸ்லமாபாத், பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா எடுத்த இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான், இந்தியாவில் எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்க முற்பட்டது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய செயலை இந்தியா தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்தது. மூன்று நாட்களுக்கும் மேலாக இருநாடுகளுக்கும் மேலாக நீடித்த மோதல் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதையடுத்து முடிவுக்கு வந்தது. சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பாகிஸ்தானுக்கு … Read more