Judiciary: “நீதித்துறையில் பாலின சமத்துவம் வேண்டும்'' – இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் சொல்வதென்ன?

நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி (Vipul Manubhai Pancholi) குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக அக்டோபர் 1, 2014 அன்று பதவியேற்றார். பின்னர் ஜூலை 24, 2023 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஆகஸ்ட் 27, 2025 அன்று உச்சநீதிமன்றக் கொலீஜியம் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. அதனை ஏற்று, ஆகஸ்ட் 29, 2025 அன்று அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். ஆனால், இவருக்கு முன்பு பதவி வழங்கப்பட வேண்டிய மூத்த பெண் நீதிபதிகள் இருந்தபோதும் ஏன் … Read more

பிஹார் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து அவதூறு: தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்

சென்னை: பிஹாரில் நடந்த வாக்காளர் அதிகார யாத்திரையில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து அவதூறு தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஹார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரை கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இச்சம்பவத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் … Read more

ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, அமராவதியை இணைக்கும் புல்லட் ரயில்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

விசாகப்பட்டினம்: ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூருவை இணைக்கும் புல்லட் ரயில் விரைவில் தொடங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் இன்று நடந்த இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “மிக விரைவில், தென்னிந்தியாவிற்கு புல்லட் ரயில் வர உள்ளது. இது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஹைதராபாத், சென்னை, அமராவதி மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களையும் இணைக்கும். ஐந்து கோடிக்கும் … Read more

வரிவிதிப்புக்கு எதிரான தீர்ப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வசமுள்ள ‘ஆப்ஷன்’ என்ன?

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று கூறி, அந்த உத்தரவுகளை அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது, ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ‘இந்த விவகாரத்தில் அடுத்து என்ன?’ என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சூழலில், ‘வரிவிதிப்பு தொடர்பான ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை அமெரிக்க உச்ச … Read more

படப்பிடிப்பில் அதிரடி! இயக்குநருக்கு பளார்…நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ

Fight At Pati Patni Aur Woh 2 Shooting : இந்தி படமான பதி பத்னி அவர் வாே 2 என்கிற படம் உருவாகி வருகிறது. இதில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட படக்குழுவினருக்கு தர்ம அடி விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

புதுமைப் பெண் திட்டம் : கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 – அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்

puthumai pen thittam : கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் புதுமைப் பெண் திட்டம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.

தோனி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய மனோஜ் திவாரி! சேவாக்கிற்கு பாராட்டு

Manoj Tiwary : இந்திய அணியின் முன்னாள் பிளேயரான மனோஜ் திவாரி, தோனி மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். குறிப்பாக, அவருக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்புகளை தோனி கொடுக்கவில்லை என்றும், அவரால் தான் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் கனவு இருட்டடிப்பு செய்யப்பட்டதாகவும் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார். இப்போது மீண்டும் ஒருமுறை அந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், இந்திய அணியில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக மீண்டும் ஒருமுறை குற்றம் சாட்டியுள்ள அவர், தனது … Read more

Yolo: “அமீர்கிட்ட சாதரண ஆள் வேலை செய்ய முடியாது'' – அனுபவம் பகிர்ந்த சமுத்திரக்கனி

இன்று நடைபெற்ற யோலோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்வில், இயக்குநர் சாம், நடிகர் தேவ், நடிகை தேவிகா மற்றும் படக் குழுவினருடன் இயக்குநர்கள் ஏ.ஆர்.கே சரவணன், சதீஷ், சமுத்திரக்கனி, ஆர்.கே.செல்வமணி, அமீர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். YOLO ‘பருத்தி வீரன் ஷூட்டிங்கில் மூக்கிலிருந்து ரத்தம் வந்தது’ நிகழ்ச்சியில் சமுத்திரக்கனி பேசியதாவது, “நானும் யோலோ பட இயக்குநரும் (சாம்) பருத்தி வீரன்ல அமீர் அண்ணன் கிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை பார்த்தோம். அவர் கிட்ட சாதாரண ஆட்கள் எல்லாம் வேலைபார்க்க … Read more

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல்…

கெய்ரோ: இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல்  வெளியாகி உள்ளது. “ஏமனில் உள்ள சனா பகுதியில் ஹவுதி பயங்கரவாத ஆட்சியின் இராணுவ இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக” இஸ்ரேலிய இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. இந்த தாக்குதலில்   ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தின் பிரதமர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய ஆதரவு ஹவுதிகள் இன்று … Read more

எந்த நாட்டையும் இந்தியா எதிரியாக கருதுவது இல்லை: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது: இந்தியா எந்த நாட்டையும் எதிரியாக கருதுவது இல்லை. எங்களுக்கு மக்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் நலன்கள் மிகவும் முக்கியமானவை. சர்வதேச உறவுகளில் நிரந்தர நண்பரோ, எதிரியோ இல்லை. நிரந்தர நலன் மட்டுமே உள்ளது. உலகம் புதிய சவால்களுடன் வெகு வேகமாக மாறி வருகிறது. சுயசார்பு என்பது விருப்பமல்ல, தேவையானதாக மாறிவிட்டது … Read more