ஜெர்மனியில் வெற்றி; அடுத்தது FIM MiniGP World Finals-தான்! அஜித் வாழ்த்திய இந்த இளம் ஹீரோ யார்?

சென்னையைச் சேர்ந்த ஜேடன் இம்மானுவேல் என்ற 13 வயது சிறுவன் FIM மினி ஜிபி மோட்டார் பைக் பந்தயத்தில் மூன்றாவது இடம் வென்றதைத் தொடர்ந்து, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், உலக அளவிலான பந்தயத்தில் கலந்துகொள்ளப்போகும் அவரை வாழ்த்தியிருக்கிறார். சென்னையில் பிறந்த ஜேடன் பெற்றோருடன் ஜெர்மனியில் வசித்து வருகிறார். சிறு வயதிலேயே சைக்கிள் ஓட்டுவது, சைக்கிள் ரேஸில் ஈடுபாட்டுடன் இருந்த இவருக்கு மோட்டார் பைக் ரேஸிங்கை அறிமுகப்படுத்தியுள்ளார் அவரது தந்தை. Jaden Immanuel Jaden … Read more

எம்.பி சசிகாந்த் செந்தில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

திருவள்ளூர்: மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கக்கோரி, உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்த காங். எம்பி சசிகாந்த் செந்தில், மேல் சிகிச்சைக்காக சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மத்திய அரசு, ”சமக்ர சிக் ஷா அபியான்” (எஸ்.எஸ்.ஏ.) என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கக் கோரி, திருவள்ளூர் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் நேற்று முன்தினம் காலை திருவள்ளூரில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: செப்.8ல் தேஜகூ எம்.பிக்களுக்கு பிரதமர் இரவு உணவு விருந்து!

புதுடெல்லி: செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 8 ஆம் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரவு உணவு வழங்கவுள்ளார். இதுகுறித்து தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்களில் இருந்து வெளியான தகவல்களின்படி, ‘ குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு முந்தைய நாள், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி இரவு உணவு வழங்குவார். கூட்டணிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், பிணைப்புகளை வளர்ப்பதிலும் … Read more

எஸ்சிஓ உச்சிமாநாடு: பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தியான்ஜின்(சீனா): ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே நேபாள பிரதமர் கே.பி. ஒளி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) இரண்டுநாள் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தியான்ஜின் சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழு உறுப்பினர் காய் குய் உள்ளிட்டோரை பிரமதர் மோடி சந்தித்துப் … Read more

கசந்து போன 10 வருட காதல்! காதலி ஏமாற்றியதால் உயிரை விட்ட காதலன்..

Mayiladuthurai Youth Killed Himself : 10 வருடமாக தன்னை காதலித்த காதலி திடீரென  காவல் உதவி ஆய்வாளரை காதலிப்பதாக கூறியதால் மனமுடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 125-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பருவமழையை குறிப்பிட்டு அவர் பேசும்போது, இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன. வீடுகளை சேதப்படுத்தி விட்டன. வயல்வெளிகள் நீரில் மூழ்கி போயுள்ளன. குடும்பங்கள் மொத்தமும் பாதிக்கப்பட்டு உள்ளன என கூறினார். கடந்த சில வாரங்களாக வெள்ளம், நிலச்சரிவு என பெரிய அளவில் … Read more

தற்சமயம் உலகின் சிறந்த டாப் 3 டி20 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – சுரேஷ் ரெய்னா தேர்வு

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா. இடது கை பேட்ஸ்மேனான அவர் 3 வடிவிலான போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர். குறிப்பாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர். அப்படிப்பட்ட அவர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தற்சமயம் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் டாப் 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார். அவர் தேர்வு செய்ததில் 2 இந்திய … Read more

இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை; மோடி-ஜின்பிங் சந்திப்பில் முக்கிய முடிவு

பீஜிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷியா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தன. இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதிகளில் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெறுகிறது. … Read more

1 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் சிறந்த ரேஞ்ச் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்யலாமா ?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை கூடுதலாக அமைந்திருந்தது, ஆனால் காலம் மாற துவங்கியதனால் சவாலான விலையில் அதிக ரேஞ்ச் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் தாண்டி பொதுவான 30கிமீ முதல் 60 கிமீ தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாகவும் சார்ஜிங் மேம்பாடு எனவும் சாத்தியமாகி உள்ளதால் ரூ.1,00,000 குறைந்த அல்லது சில ஆயிரங்கள் கூடுதலாக விலை கொடுத்தாலும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்ய மிக தீவரமாக பலதரப்பட்ட பயனாளர்கள், விற்பனை எண்ணிக்கை, ஆன்லைன் … Read more

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்; தேர்வு பின்னணி என்ன?

தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியாகும். இந்தப் பதவியின் நாற்காலியில் அமருவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. 30 ஆண்டுகள் சர்வீஸ், சீனியர் டி.ஜி.பி, பணியில் எந்தவித சார்ஜிம் இருக்கக் கூடாது போன்ற அடிப்படை தகுதிகள் உள்ளன. அதோடு ஆளுங்கட்சியின் ஆசியும் பெற்றவராக இருக்க வேண்டும். தற்போது தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக சங்கர் ஜிவால் இருந்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 31-ம் தேதியோடு ஓய்வு பெறுவதையடுத்து அடுத்த … Read more