யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்

இணையதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாக யூடியூப் உள்ளது. டிவி பார்க்கும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருவதற்கு யூடியூப் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமான யூடியூப்பில் பயனர்களும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். இந்த வீடியோக்களில் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கை வீடியோவை அப்லோடு செய்தவர்களுக்கும் வழங்குவது மூலமாக யூடியூப் பிரபலமாகியுள்ளது. இதனால் சமூக வலைத்தள பயனர்கள் மத்தியில் யூடியூப் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. வீடியோக்களை பார்க்கும் போது … Read more

ஜூனியர் மகளிர் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

கான்பெர்ரா, இந்திய ஜூனியர் மகளிர் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் முறையே இந்திய அணி 2-3, 5-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதலாவது வெற்றியை … Read more

இங்கிலாந்தில் காந்தி சிலை உடைப்பு – போலீசார் விசாரணை

லண்டன், இங்கிலாந்து நாட்டின் லண்டன் டவிஸ்டோக் சதுர்க்கத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த காந்தி சிலை நேற்று மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலை அமைந்துள்ள பகுதியில் காந்தி, மோடி இந்திய பயங்கரவாதிகள் என எழுதப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக லண்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, லண்டனில் காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட … Read more

கரூர் மரணங்கள்: "விஜய் வீடியோ தொண்டர்களைத் தூண்டுகிறது; அரசியல் உள்நோக்கம் கொண்டது" – CPI(M) கண்டனம்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் விஜய் இன்று (செப் 30) மாலை வெளியிட்ட காணொளிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். அவர் வெளியிட்ட அறிக்கையில் விஜய்யின் வீடியோ அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தொண்டர்களைத் தூண்டிவிடும் விதமாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார். கரூர் – தவெக அறிக்கையில் … Read more

கைதான தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவத்​தில் கைது செய்​யப்​பட்ட தவெக நிர்​வாகி​கள் 2 பேரை 15 நாள் நீதி​மன்​றக் காவலில் வைக்க நீதிபதி உத்​தர​விட்​டார். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் வி.பி.ம​தி​யழகன், பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் ஆகியோர் மீது கரூர் நகர போலீ​ஸார் … Read more

பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு எதிராக போராட்டம்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2 பேர் உயிரிழப்பு

முசாபராபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதி​ராக​ நேற்று பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்​முறை​யில் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும் 22 பேர் காயமடைந்​துள்​ளனர். பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) அவாமி செயற்​குழு அமைப்​பின்​(ஏஏசி) சார்​பாக இந்​தப் போராட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்​தப் போராட்​டத்​தை தொடர்ந்து கால​வரையற்ற போராட்​டத்​துக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதைத் தொடர்ந்து இந்​தப் போராட்​டத்தை நீர்த்​துப் போகச் செய்ய பாகிஸ்​தான் அரசு முயன்று வரு​கிறது. பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்​புப் பகு​தி​களில் பாது​காப்​புப் படை​யினரை … Read more

கரூர் துயர சம்பவம்.. அமுதா ஐஏஎஸ் பேட்டி அளித்ததன் அவசியம் என்ன? இபிஎஸ் அடுக்கும் கேள்விகள்

ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், ஐஏஎஸ் அமுதா பேட்டி அளித்ததன் அவசியம் என்ன என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். 

இனி மேல் இந்தியா பாகிஸ்தான் போட்டி கிடையாது? – முழு விவரம்

India vs Pakistan : ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், போட்டியின் முடிவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் பதவியில் இருக்கும் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்தது. நக்வி, ACC தலைவராக இருப்பதுடன், PCB தலைவராகவும் மற்றும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார். அவர் ஆசிய தொடர் முழுவதும் தனது … Read more

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்….

சென்னை:  வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 35 கோடி மதிப்பிலான கோகைன் போதைப்பொருள்  பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, சர்வதேச போதை பொருள் கும்பலைச் சேர்ந்த  நபர்  கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. இதில் போதைபொருள் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருந்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், விமான நிலையத்தில்  கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். … Read more

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – அதிர்ச்சி சம்பவம்

டெல்லி, மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 200 பேர் பயணித்தனர். இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் டெல்லி விமானத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து … Read more