பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை! திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் 364 நிறைவேற்றம்! அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் 3 அமைச்சர்கள் பேட்டி…

சென்னை: பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளதாக  நிதியமைச்சர்  தங்கம் தென்னரசு தலைமையில் 3 அமைச்சர்கள் இணைந்து பேட்டி கொடுத்தனர். தமிழ்நாட்டில் வருவாய், நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டு உள்ளதாகவும்,  பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது என்றும்,  ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று கூறியதுடன், ரூ.10.28 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதுடன்,  52.07 மில்லியன் டாலர் ஏற்றுமதி உயர்வு பெற்றுள்ளது என்நனர். மேலும் திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 … Read more

ஒரு வழியாக தைரியம் வந்து விட்டது; பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் பற்றி காங்கிரஸ் கிண்டல்

இம்பால், மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், அவ்வப்போது வன்முறை பரவி மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், … Read more

முதல் 13 பந்தில் 12 ரன்.. அடுத்த 8 பந்துகளில் 7 சிக்ஸ்.. தெறிக்க விட்ட பொல்லார்ட்

டிரினிடாட், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் – செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற செயிண்ட் கிட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பொல்லார்டு 65 ரன்களும், பூரன் 52 ரன்களும் அடித்தனர். செயிண்ட் … Read more

சூடானில் கடும் நிலச்சரிவு; கிராமமே அழிந்த சோகம்

கர்டோம், சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. 2023ம் ஆண்டு ஏப்.15 முதல் இரு தரப்பினர் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் அப்பாவி மக்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். மோதலை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. உள்நாட்டு போரால் கோடிக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர். இந்நிலையில், … Read more

"வெள்ள நீரை வீட்டில் சேமியுங்கள்; அணை கட்ட 10 வருடங்கள் ஆகும்" – பாகிஸ்தான் அமைச்சர் யோசனை

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத பருவமழையால், 150 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்நாட்டின் முக்கிய கோதுமை உற்பத்தி மாகாணமான பஞ்சாப் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. அந்நாட்டு ஊடக தகவலின்படி, கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாப் மாகாணத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 2,200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும், 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பஞ்சாப் மாகாணம் – பாகிஸ்தான் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் வெள்ள பாதிப்பை எடுத்துரைத்த பஞ்சாப் … Read more

‘குஜராத் நிறுவனங்களுக்கு ஆதாயமாக…’ – அமெரிக்க வரி விவகாரத்தில் மோடி மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: “குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க அரசின் 50 சதவீத வரிவிதிப்பால் பாதிப்புக்குள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களை கண்டுகொள்ளாமல் விட்டதாக மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் … Read more

இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: செமிகான் இந்தியா மாநாட்டை டெல்லியில் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் மிகச்சிறிய சிப் விரைவில் உலகின் மிகப் பெரிய மாற்றத்தை இயக்கும் என தெரிவித்தார். இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் செமிகான் இந்தியா 2025 மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்டுள்ளது. கடந்த … Read more

உலகில் ஒவ்வொரு 100 இறப்புகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவை தற்கொலை: உலக சுகாதார அமைப்பு

உலகில் நிகழும் மனித உயிரிழப்புகளில் ஒவ்வொரு 100 இறப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு, தற்கொலை காரணமாக நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2021-ல் தற்கொலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநலக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. உலக மக்களின் மனநலம் இன்று, மனநலம் வரைபடம் 2024 ஆகிய தலைப்புகளில் உலக சுகாதார அமைப்பு 2 அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. … Read more

கட்டா குஸ்தி 2 பூஜையுடன் துவங்கியது! யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க..

Gatta Kusthi Movie Part 2 : 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “கட்டா குஸ்தி” படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு முக்கிய செய்தி! முழு விவரம்

TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு படிப்பவர்கள் மற்றும் இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கு படிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.