ஆர்எஸ்எஸ் அமைப்பை பிரதமர் மோடி தடை செய்ய வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கூறுகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “நாட்டின் தற்போதைய சட்டம் – ஒழுங்கு நிலைக்கு பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும்தான் காரணம். சர்தார் வல்லபாய் படேல் முன்வைத்த கருத்துகளை பிரதமர் நரேந்திர மோடி உண்மையிலேயே மதிக்கிறார் என்றால் அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும். இது எனது தனிப்பட்டக் கருத்து. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். … Read more

பிரதமர் மோடி பேசியது பொய்… அதை பாஜகவே சொல்லிவிட்டது – தயாநிதி மாறன்!

Tamil Nadu News: பிரதமர் மோடியின் தமிழர் விரோதப் பேச்சு, பொய் என்பது தேசிய ஜனநாயக கூட்டணி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கை மூலம் அம்பலமாகி உள்ளது என தயாநிதி மாறன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மும்பை: மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ,இதன் காரணமாக இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.  இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பெண்கள் அணி  கோப்பையை கைப்பற்றுமா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்தியாவில் நடைபெற்ற வரும்,  ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 339 ரன்கள் … Read more

ஹீரோ விடாவின் புராஜெக்ட் VXZ ஸ்போர்ட்ஸ் பைக் டீசர் வெளியானது | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பிராண்ட் விடா கீழ் வரவுள்ள முதல் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிளுக்கான பெயரை புராஜெக்ட் VXZ என அழைக்கப்படுவதாக முதல் டீசரை வெளியிட்டுள்ளது.  முன்பாக யூபெக்ஸ் என அறியப்பட்ட டீசர் ஆனது அட்வென்ச்சர் ஸ்டைல் என உறுதிப்படுத்தி புதிய டீசரை வெளியிட்டுள்ளது. விடா இந்திய சந்தையில் தற்பொழுது ஸ்கூட்டர்களை மட்டுமே வி்ற்பனை செய்து வரும் நிலையில், ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற பைக்கின் டீசரில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை … Read more

`நீக்கப்பட்ட செங்கோட்டையன்' – எடப்பாடி வீட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் முடிவு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு பத்து நாள் கெடு விதித்தார். இதை தெரிவித்த 24 மணி நேரத்திற்குள், செங்கோட்டையன் அ.தி.மு.கவில் வகித்து வந்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இருப்பினும் கட்சியின் மூத்த தலைவராக இருப்பதால், அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அ.தி.மு.க தலைமை இருந்தது. இபிஎஸ் இல்லம் இந்த நிலையில், அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் … Read more

சென்னையில் 2 நாள் நடைபெற இருந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் நவம்பர் 5, 6 ஆகிய இரு தினங்களும் நடைபெறுவதாக இருந்த, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன் பின் இரண்டு தரப்பினரையும் இணைத்து நடத்தப்படும் இம்மாநாட்டின் இறுதியில் முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் திட்டங்களை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த … Read more

பிஹார் தேர்தலில் தாக்கம் செலுத்தும் ‘தமிழ்நாடு மாடல்’ – வாக்குறுதிகள் சொல்வதென்ன?

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பிரதான அணிகளான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கைகளில் பல்வேறு தமிழகத் திட்டங்கள் தாக்கம் செலுத்தியுள்ளன. இதன் பின்னணி குறித்து பார்ப்போம். பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, ஹெச்ஏஎம், ஆர்எல்பி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் … Read more

கதறி அழுத பெண் வீட்டார்.. என்ன நடந்தது? திடுக்கிடும் தகவல் அளித்த பெண்ணின் பெரியப்பா

Tirunelveli District Local News: காதலித்த பெண்ணை லண்டனிலிருந்து கடத்தி காதல் திருமணம் செய்து கொண்டு கோவை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்ததாக  பெண்ணின் பெரியப்பா கொடுத்த வீடியோ  ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Aarav Studios: “இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகள்'' – தயாரிப்பாளராகும் பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று, தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவர் ஆரவ். இந்த ஆண்டு வெளியான அஜித் குமாரின் விடா முயற்சி, கலகத்தலைவன் போன்ற படங்களில் நெகட்டிவ் பாத்திரங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ளார். திரைப்படத் துறையில் தனது பயணத்தின் அடுத்த மைல் கல்லாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் ஆரவ். அஜித்துடன் ஆரவ் Aarav அறிக்கை இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும் எனக்கு பெரும் உற்சாகத்தையும் … Read more

41பேர் பலியான கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூர்:  விஜய் பிரசார கூட்டத்தில் 41பேர் பலியான கரூர் வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் செப். 27 ஆம் தேதி  தவெக தலைவர் விஜய்  மேற்கொண்ட பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் உயர்நீதிமன்ற நீதிபதியின் … Read more