நடிகை சிம்ரன் வெளியிட்ட 'ரெட் லேபிள் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இயக்குனர் கே .ஆர். வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரெட் லேபிள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன் கட்சி ஒழுங்குமுறையை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாத்தா கால அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வது முதல்வர் பதவிக்கே அவமானம்! மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

சென்னை; தாத்தா கால அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வது முதல்வர் பதவிக்கே அவமானம் என பிரதமர் மோடி குறித்து முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதில் தெரிவித்துள்ளார்.  திமுக ஊழலை மறைக்க மடைமாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின் என விமரசித்துள்ளார். ‘பிரதமர், திமுகவினரைக் குறிப்பிட்டதை தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதல்வர் வகிக்கும் பதவிக்கே அவமானம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் மோடி … Read more

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு | Automobile Tamilan

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஃபோர்டு ஆலையை மீண்டும் உற்பத்திக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் முதற்கட்டமாக அடுத்த தலைமுறை என்ஜின் உற்பத்திக்கு சுமார் ரூபாய் 3,250 கோடி முதலீடு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேரடியாக 600 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 2024ல் கையெழுத்திடப்பட்ட  விருப்பக் கடிதத்தின் அடிப்படையில், நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஃபோர்டு திட்டங்களுக்கு இந்தியாவின் “உற்பத்தித் திறனை” பயன்படுத்துவதற்கான முயற்சியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டனர். மூத்த நிறுவன நிர்வாகிகள் … Read more

திருப்பூர்: பட்டா மாறுதலுக்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது; சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளரான இவர் தனது தோட்டத்துக்கு வாரிசு அடிப்படையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய காட்டூர் கிராம நிர்வாக அலுவலரான ஜெயக்குமார் ரூ. 40 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில், முதல் தவணையாக ரூ. 10 ஆயிரமும், 2-ஆவது தவணையாக ரூ. 13 ஆயிரமும் ஜெயக்குமார் பெற்றுள்ளார். இதற்கிடையே, மீதி ரூ. 17 ஆயிரத்தைத் தந்தால்தான் … Read more

சென்னையில் மீண்டும் வரும் ஃபோர்டு நிறுவனம் மூலம் 600 பேருக்கு வேலை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: ஃபோர்டு நிறுவனத்தால் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வாகன இன்ஜின் (Next-Gen Engine) உற்பத்தி ஆலை சென்னையில் அமையவுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், ‘முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம். ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. … Read more

தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்பு

ஹைதராபாத்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், முகமது அசாருதீன் அமைச்சராக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத அவரை ஆளுநர் கோட்டாவில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்ய தெலங்கானா அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் … Read more

​பாக். ராணுவ தாக்​குதல்: பலுசிஸ்​தானில் 18 போராளி​கள் உயி​ரிழப்பு

கராச்சி: பாகிஸ்​தானின் பலுசிஸ்​தான் மாகாணத்​தில் அந்​நாட்டு ராணுவ தாக்​குதலில் 18 போராளி​கள் உயி​ரிழந்​தனர். உளவுத் தகவலின் அடிப்​படை​யில் பலுசிஸ்​தானின் குவெட்டா மாவட்​டம், சில்​டன் மலைத்​தொடரிலும், கெச் மாவட்​டத்​தின் புலே​டா​விலும் பாகிஸ்​தான் ராணுவம் புதன்​கிழமை இரவு தேடு​தல் பணி மேற்​கொண்​டது. இதில் ராணுவத்​தினர் – பலுசிஸ்​தான் போராளி​கள் இடையே கடும் துப்​பாக்​கிச் சண்டை ஏற்​பட்​டது. இதில் 18 போராளி​கள் உயி​ரிழந்​தனர். அங்​கிருந்து ஆயுதங்​கள், வெடிபொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​ன. Source link

விஜய் ரசிகர்களுக்கு மெகா ட்ரீட்.. ஜனநாயகன் படத்தின் முக்கிய அப்டேட் இதோ

Jananayagan Movie Update: விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆகும். 

கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி.. 50 நாள் கழித்து வெளியான மர்மம்! நடந்தது என்ன?

புதுக்கோட்டை திருமயம் அருகே பழனிவேலு என்ற நபர் 50 நாட்களுக்கு முன் மாயமான வழக்கில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.