சென்னை: சென்னை மாநகரில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு மாநகராட்சியிடம் உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர் கே.பி.கே.சதீஷ் பேசும்போது, “நெம்மேலி குடிநீர் திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்” என பேசினார். அப்போது திமுக கவுன்சிலர்கள், … Read more