யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.! | Automobile Tamilan

இந்தியாவில் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு உள்ளான மாடலான XSR155 நியோ ரெட்ரோ ஸ்டைலுடன் சக்திவாய்ந்த லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்று சிறப்பான வசதிகளுடன் விளங்குகின்ற இந்த பைக்கை வாங்குவதற்கு முன்பாக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே பார்க்கலாம். XSR155 டிசைன் குறிப்பாக neo-retro வடிவமைப்பை விரும்பும் இளைய தலைமுறையினருக்கு, தினசரி நகர்ப்புற பயணத்தில் ஒரு நல்ல அனுபவம் தரும் மாடலாக விரும்பினால் யமஹாவின் நம்பகமான என்ஜினை கொண்டுள்ள எக்ஸ்எஸ்ஆர் 155 டிசைனை பற்றி முதலில் பார்க்கலாம். … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ்: "அந்த இரண்டு திறமையும் இருக்க நிரோஷா ஸ்பெஷலான பொண்ணு" – பூர்ணிமா பாக்யராஜ்

சிறந்த சின்னத்திரை கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா கடந்த அக்டோபர் 12ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், 2024-ம் ஆண்டின் `ஃபேவரைட் மாமியார் மருமகள்’ விருதுகள் நிரோஷா, சரண்யா துராடி, ஹேமா, ஹாலினி உள்ளிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் -2’ நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டன. நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவ்விருதினை வழங்கி சிறப்பித்தார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரண்யா துராடி, ஹேமா, ஹாலினி, நிரோஷா பூர்ணிமா பாக்யராஜ் பேசுகையில், “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவ்வளவு நாள்களாக … Read more

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் நவ.21-ம் தேதி தீர்ப்பு

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், நவ.21-ம் தேதிக்கு அறிவிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ-வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் … Read more

பிஹாரில் நவ.20 புதிய அரசு பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு – முதல்வர் யார்?

பாட்னா: பிஹாரில் புதிய அரசு நவம்பர் 20 ஆம் தேதி பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்க உள்ளது. இருப்பினும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதல்வராக பதவியேற்பாரா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை. பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய அரசு அமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஹார் … Read more

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

டாக்கா: கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களை அரசு தீவிரமாக ஒடுக்கியது. இதன் காரணமாக சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டு தப்பியோடிய ஷேக் ஹசீனா (78) இந்தியாவில் தஞ்சமடைந்தார். கடந்த ஆண்டு … Read more

3வது கணவரை பிரிந்த பிரபல நடிகை! அதுவும் திருமணமான ஒரே ஆண்டில்..ரசிகர்கள் அதிர்ச்சி..

Meera Vasudevan Third Marriage Divorce : பிரபல நடிகை மீரா வாசுதேவன், தனது மூன்றாவது கணவரை பிரிந்ததாக அறிவித்துள்ளார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

ஆட்டம் காட்டப்போகும் மழை! சென்னையில் இன்று முதல் சம்பவம்.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்

Tamil Nadu Weather Today: சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.  

2வது டெஸ்ட் போட்டியில் கில் இடத்தில் யார்? கவுதம் கம்பீர் எடுத்த முக்கிய முடிவு!

கொல்கத்தாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ஏற்பட்ட கழுத்து பிடிப்பு காயம், அணி நிர்வாகத்திற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட வலியால் அவர் ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறி, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்ய வராத நிலையில், 124 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்த முடியாமல் இந்திய அணி தோல்வியை … Read more

Gangai Amaran: "வெங்கட் பிரபுவை பிசினஸ் மேன் ஆக்கணும்னு நெனைச்சேன்!" – கங்கை அமரன் பேட்டி

பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என பல்வேறு அவதாரங்களில் வெற்றிகளைக் குவித்தவர் கங்கை அமரன். இப்போது, டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அவர் அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்காக அவரைப் பேட்டிக் கண்டோம். தனது நடிப்பு அனுபவம், சினிமா பயணம், AI பற்றிய கருத்துகள் என பல்வேறு விஷயங்களை இந்தப் பேட்டியில் அவர் பகிர்ந்துகொண்டார். Lenin Pandiyan நம்மிடையே பேசியவர், “பாலச்சந்திரன் கதை சொல்லும்போதுகூட, நான் அந்தப் படத்தில் நடிக்கப் போவதாக உணரவில்லை. கதையின் … Read more

ஏமாற்றம்: சாம்சங் ஆலைக்கு எதிராக ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது

சென்னை: சாம்சங் ஆலை  நிர்வாகம் 27 தொழிலாளர்களை பணி நீக்கத்தை எதிர்த்து, மாவட்ட  ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சாம்சங் ஆலைக்கு எதிராக போராடியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதி அளித்த நிர்வாகம், அதை செயல்படுத்தாமல் 27 பேரை பணி நிக்கம் செய்துள்ளது. இதை கண்டித்து, சாம்சங் , நிர்வாகத்தை எதிர்த்து சாம்சங் தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஊதிய உயர்வு உள்பட பல்வேறு … Read more