வங்கக் கடலில் நாளை சம்பவம்.. சென்னையில் கொட்டும் கனமழை.. வெதர்மேன் வார்னிங்

Tamil Nadu Weather Update: வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார். இதனால், நவம்பர் 17,18ஆம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

பேரரசா் பெரும் பிடுகு முத்தரையருக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும்! தமிழ்நாடு அரசு கோரிக்கை

சென்னை: பேரரசா் பெரும் பிடுகு முத்தரையருக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும்  என  தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. பொதுவாக இதுபோன்ற கோரிக்கைகள் மாநில முதல்வரால் வைக்கப்படும் நிலையில், இந்த கோரிக்கை தமிழக அமைச்சரால் விடுக்கப்பட்டுள்ளது.  பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் நினைவாக அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், … Read more

டாடாவின் ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் அறிமுகமா.! | Tata motors harrier and safari petrol | Automobile Tamilan

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிகளில் புதியதாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிட வாயுப்புள்ளது. அதற்கு முன்பாக இன்றைக்கு முக்கிய தகவல் வெளியாகவுள்ள புதிய டாடா சியரா எஸ்யூவி மாடலிலும் இதே 170hp பவர் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற உள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் … Read more

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து; 9 பேர் பலி – என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது பிடிபட்ட வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வெடிகுண்டுகளை போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும், தாசில்தாரும் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. இந்த வெடிவிபத்தில் சிக்கி போலீஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் என 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் போலீஸ் நிலைய கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் தாசில்தாரும் உயிரிழந்தார். வெடிவிபத்து சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், தீயணைப்பு துறையினர் … Read more

1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் கொள்முதல்: அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்தும் சென்னை குடிநீர் வாரியம்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கொள்முதல் செய்யப்பட உள்ள 1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை முதல்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கியுள்ளது. இதன் மூலமும், லாரிகள் மூலமும் தினமும்1300 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகித்து வருகிறது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் ஏரி நீரை சுத்திகரித்து குடிநீராக வீடுகளில் கொண்டு வந்து சேர்க்க 1000 லிட்டருக்கு ரூ.8-ம், கடல்நீரை … Read more

ஜம்மு நக்ரோடாவில் பாஜக வேட்பாளர் தேவயானி வெற்றி

ஜம்மு: ஜம்முவின் நக்ரோடா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவயானி ரானா 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாந்தர்ஸ் பார்ட்டி வேட்பாளர் ஹர்ஷ் தேவ் சிங் தோல்வி அடைந்தார். Source link

காவல் நிலையத்தில் வெடி விபத்து… 7 பேர் பலி – ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!

Jammu Kashmir Police Station Explosion: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள காவல் நிலையத்தில், பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களின் குவியல் நேற்றிரவு (நவ. 14) திடீரென வெடித்துச் சிதறியது. இதுவரை 7 பேர் உயிரிழந்தனர், 27 காயம் அடைந்துள்ளனர்.

202 தொகுதிகளில் வெற்றி: பீகாரில் ஆட்சியை தக்க வைத்தது என்டிஏ கூட்டணி!

பாட்னா: பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது.  வரலாறு காணாத அளவில் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியான மகாபந்தன் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ந்தேதி நடைபெற்றது. இதில்   பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வெற்றி … Read more

திருச்செந்தூர்: உண்டியலில் முருக பக்தர் செலுத்திய `வெள்ளிக்காசு மாலை' – சிறப்பு என்ன?

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ம் தேதி சூரசம்ஹாரமும், 28-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்று முடிந்தன. இந்த விழாவில், உள்நாடு மட்டுமின்றி குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பக்தர்கள், என சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கலந்து கொண்டனர். வெள்ளிக்காசு மாலை திருக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலில் அவர்களின் வேண்டுதல்கள் … Read more

காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அதிகாரம் மட்டுமே இலக்கு இல்லை: செல்வப்பெருந்தகை

சென்னை: “காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அதிகாரம் மட்டுமே இலக்கு இல்லை, இது மக்களுக்கான இயக்கம்” என பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம், ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசும்போது, “காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவே கிடையாது. … Read more