இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பர் மரணம்

புதுடெல்லி, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பரான மானுவல் பிரடெரிக் பெங்களூருவில் தனது மகளுடன் வசித்து வந்தார். கடந்த 10 மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் உடல் நலப் பிரச்சினை காரணமாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் மரணம் அடைந்தார். 78 வயதான பிரடெரிக்கின் மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரில் பிறந்தவரான … Read more

இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிப்பு; வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவு

லண்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த வர்ஜீனியா ஜியூப்ரே என்ற பெண், மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் இரண்டாம் அவர்களின் இரண்டாவது மகனும் இளவரசருமான ஆண்ட்ரூ (வயது 65) மீது பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது இளம் பருவத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால் இந்த புகாரை இளவரசர் ஆண்ட்ரூ தொடர்ந்து மறுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வர்ஜீனியா ஜியூப்ரே திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது … Read more

Doctor Vikatan: நைட் ஷிஃப்ட் வேலை, அதீத களைப்பு; வேலைதான் காரணமா?

Doctor Vikatan: நீண்டகாலமாக வேலை தேடிக் கொண்டிருந்த எனக்கு, சமீபத்தில்தான் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், நைட் ஷிஃப்ட் வேலைதான் கிடைத்திருக்கிறது.  ஒரு மாதமாக இந்த வேலையைப் பார்க்கிறேன். ஆனால், இதுவரை இல்லாத அளவு மிகவும் களைப்பாக உணர்கிறேன். பகலில் தூக்கமும் இல்லை. என்னுடைய திடீர் களைப்புக்கு என் நைட் ஷிஃப்ட் வேலைதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் களைப்பாக உணர ஒவ்வொருவருக்கும் காரணங்கள் வேறுபடலாம். ஒரு … Read more

தமிழக மாணவர்களின் மேற்படிப்பு தொடர்பாக கோவி.செழியனுடன் ஆஸ்திரேலிய அமைச்சர் சந்திப்பு

சென்னை: ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தமிழக மாணவர் களின் மேற்படிப்பு வாய்ப்பு களை எளிதாக்குவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியனை சந்தித்து, ஆஸ்திரேலிய கல்வி அமைச் சர் டோனி புட்டி ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாணவர்களை ஊக்கப் படுத்துவதுடன் மேலை நாடு களில் உள்ள உயர்தர கல்வி யையும் தமிழக மாணவர்கள் பயில வேண்டும் என்ற உன்னத நோக்கில் அரசு … Read more

சத்தீஸ்கர் மதுபான முறைகேடு: அமலாக்கத் துறைக்கு உத்தரவு

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ.2 ஆயிரம் கோடி மதுபான முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் அப்போதைய முதல்வர் பூபேஷ் பகேலின் மகன் சைதன்யா கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து சைதன்யா பகேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி அமர்வு விசாரித்தது. சைதன்யா பகேல் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஹரிகரன், கபில் சிபல் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் மனுதாரரை அமலாக்கத் … Read more

'கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல…' விஜய் பெயரை சொல்லாமல் அஜித் பேச்சு

Actor Ajith Kumar: கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல என்று விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் நடிகர் அஜித் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

நீதிமன்ற உத்தரவுகளை அறநிலைய துறை அதிகாரிகள் மதிப்பது இல்லை! தமிழ்நாடு அரசுமீது உயர்நீதிமன்றம் மீண்டும் மீண்டும் அதிருப்தி…

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை அறநிலைய துறை அதிகாரிகள் மதிப்பது இல்லை என தமிழ்நாடு அரசுமீது மீதுஏற்கனவே பல முறை அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் மீண்டும் அதிருப்தி தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த  தொடர் அதிருப்தி,  சமுக வலைதளங்களில் விவாப்பொருளாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  அறநிலையத்துறை மட்டுமின்றி, பல்வேறு வழக்கு களில், உயர்நீதிமன்ற தீர்ப்பினை அரசு மதிக்க தவறி வருவது, அனைவரும் அறிந்தது.  இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றம் மீண்டும் திமுக அரசுமீது அதிருப்தி தெரிவித்துஉள்ளது.  இது விவாதப்பொருளாக மாறி உள்ளது. … Read more

ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை-மத்திய மந்திரி அமித்ஷா கடும் தாக்கு

பாட்னா: பீகார் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் வருகிற 4 ஆம் தேதி நிறைவடைகிறது. இதனால் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் நான்கு நாட்களே அவகாசம் உள்ளது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பீகாரில் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். நாலந்தா நகரில் நடந்த … Read more

டி20 தொடர்: வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்த வெஸ்ட் இண்டீஸ்

சட்டோகிராம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணிக்கு … Read more

கனடா: கொலை வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை – கோர்ட்டு உத்தரவு

ஒட்டாவா, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி, போலேவார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் 38 வயதான விஷால் வாலியா என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியபோது ஒரு வாகனத்திற்கு தீவைத்துவிட்டுச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கொலையாளிகளான இக்பால் காங்க்(24), டீன்ரே பாப்டிஸ்ட்(21) மற்றும் பல்ராஜ் பஸ்ரா(25) ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். … Read more