இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணியில் கூடுதல் வீரர் சேர்ப்பு

மும்பை, பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 22-ம் தேதி கவுகாத்தியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் கூடுதல் வீரராக … Read more

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 18 பேர் பலி; 34 பேர் மாயம்

ஜாவா, இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் பல வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றி பேரிடர் தணிப்பு கழகம் வெளியிட்ட செய்தியில், சிலாகேப் நகரின் சீபியுனிங் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், 10 முதல் 25 அடி ஆழத்தில் மக்கள் புதைந்து போய் விட்டனர். அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. சிலாகேப் நிலச்சரிவில் … Read more

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் மற்றும் அதையொட்டி பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது அதற்கடுத்த 48 மணி … Read more

டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது

புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் – பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கடந்த 10-ம் தேதி இரவு டெல்லி செங்கோட்டை அருகே ஒரு கார் வெடித்துச் சிதறியது. காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் நபி கார் குண்டு தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. காஷ்மீர், டெல்லி, ஹரியானா, குஜராத், உத்தர … Read more

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! சேகர் பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சபரிமலை சீசன் நவம்பர் 17, 2025 முதல் ஜனவரி 20, 2026 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு, தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக  தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் 41நாள் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் இருந்து, தினசரி லட்சக்கணக்கானவர்கள் சபரிமலை வந்து செல்வார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அதிகம் பேர் சபரிமலை செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில்,   சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​களுக்​காக அறநிலை​யத்துறை சார்​பில் 24 மணி நேர​மும் … Read more

முத்தம் கொடுக்க முயன்ற கள்ளக்காதலனின் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண் – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சாம்பி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அதேவேளை, சாம்பிக்கும் அதேகிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலை வளர்த்துள்ளனர். இதனிடையே, அந்த இளம்பெண்ணுக்கு வீட்டில் பெற்றோர் வெறொரு நபருடன் திருமணம் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனால் கள்ளக்காதலை முறித்துக்கொள்ளும்படி சாம்பியிடம் அந்த இளம்பெண் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்கமறுத்த சாம்பி தன்னுடன் தொடர்ந்து கள்ளக்காதலில் இருக்கும்படி அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார். … Read more

வங்காளதேசம் – அயர்லாந்து 2வது டெஸ்ட்: நாளை தொடக்கம்

டாக்கா, வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த 11ம் தேதி நடந்த முதல் டெஸ்ட்டில் அயர்லாந்தை இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நாளை தொடங்கும் 2வது டெஸ்ட்டிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற … Read more

ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடும் கடுமையாக தண்டிக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்வைத்து பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். மேலும் உலக நாடுகளிடையே நிலவி வரும் மோதல்களை நிறுத்துவதாக கூறி வர்த்தக தடை, வரிவிதிப்பு என மிரட்டி வருகிறார். 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்த நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைவிதித்தன. குறிப்பாக, ரஷியாவின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ள … Read more

ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கக் கோரிய வழக்கை தள்ளிவைத்த ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: ரேஷன் கடைகளில் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் டிச.16-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் சுகாதாரத் துறை உள்ளிட்ட 3 துறைகளின் செயலர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான லட்சுமி ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், ‘பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை சுத்தமாக பராமரித்து பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி … Read more