"அப்போது நான் அழவில்லை; ஆனால்…" – தனிமை பற்றி மாளவிகா மோகனன்

கார்த்தியுடன் ‘சர்தார் 2’, விஜய் சேதுபதியுடன் ‘பாக்கெட் நாவல்’ எனத் தமிழில் இப்போது பயங்கர ஆக்டிவ்வாக இருக்கிறார் மாளவிகா மோகனன்.

இன்று பேன் இந்தியா நடிகைகளில் ஒருவராக இருக்கும் மாளவிகா மோகனன், ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Malavika mohanan| மாளவிகா மோகனன்
Malavika mohanan| மாளவிகா மோகனன்

அவர் அவ்வப்போது, அவருடைய சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடுவார். அப்படிச் சமீபத்திய உரையாடலின்போது, சென்னையில் அவர் அனுபவித்த தனிமையின் வலி குறித்து பகிர்ந்திருக்கிறார்.

அதில் மாளவிகா மோகனன், “கடந்த மாதம் வேலை விஷயமாக நான் சென்னையில் இருந்தேன். நீண்ட காலம் நம்முடைய வீடு, குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களைப் பிரிந்து இருப்பது ஒரு கட்டத்தில் மிகுந்த தனிமை உணர்வைத் தரத் தொடங்கும்.

நாள் முழுவதும் உழைத்துவிட்டு, அன்றைய பொழுதின் இறுதியில் பேசுவதற்கு ஆள் இல்லாத ஒரு வெற்று ஹோட்டல் அறைக்குத் திரும்புவது ஒரு கட்டத்தில் என் மனதைப் பாதிக்கத் தொடங்கியது என்று நினைக்கிறேன்.

Malavika Mohanan
Malavika Mohanan

இது ஏதோ ஒரு சினிமாத்தனமான காட்சி அல்ல. சத்தமாக அழுது ஆர்ப்பாட்டம் செய்வது போன்ற ஒன்றல்ல. இது மிகவும் மௌனமான, ஆழமான உணர்வுப்பூர்வமான ஒரு விஷயம்.

நான் ஏதோ கதறி அழுதேன் என்றெல்லாம் இல்லை, ஆனால் அப்போது ஒருவிதமான மனச்சோர்வுக்கு உள்ளானேன்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.