ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் தினேஷ் காரா 2021-22ல் முடிவடைந்த நிதியாண்டில் ஆண்டு சம்பளமாக ரூ. 34.42 லட்சம் பெற்றுள்ளார்.
இந்த வங்கியின் 2021-22 ஆண்டறிக்கையின்படி, அவருக்கு முன் சேர்மனாக இருந்த ரஜ்னிஷ் குமார் சம்பளத்தை விட இவருக்கு 13.4% அதிகம் என தெரிய வந்துள்ளது.
தினேஷ் காரா கடந்த 1984 இல் அதிகாரியாக சேர்ந்தார். 16 வருடங்கள் கழித்து அதாவது 2020-ம் ஆண்டு வங்கித் தலைவராகப் பொறுப்பேற்றார். அவர் இதற்கு முன்பு உலகளாவிய வங்கி மற்றும் எஸ்பிஐ துணை நிறுவனங்களுக்குப் பொறுப்பான வங்கியின் எம்டியாக பணியாற்றினார்.
எஸ்பிஐ முன்னாள் தலைவர் ரஜ்னிஷ் குமார் வங்கியிலிருந்து மொத்தம் ரூ.30.34 லட்சம் சம்பளமாக கடைசியாக பெற்றார், அதில் ரூ.14.04 லட்சம் அக்டோபர் 2020ல் ஓய்வு பெறும்போது விடுப்பு பணமாக செலுத்தப்பட்டது.
டிவிட்டரை மிரட்டும் எலான் மஸ்க்.. பறந்தது நோட்டீஸ்..!
2020-21ல் எஸ்பிஐ சேர்மன் தினேஷ் காரா அடிப்படை ஊதியமாக ரூ. 27 லட்சம் மற்றும் அகவிலைப்படியாக ரூ.742,500 பெற்றார். அதேபோல் கனரா வங்கியின் எம்டி மற்றும் தலைமை செயல் அதிகாரி எல்.விபிரபாகர் 2021-22ல் ரூ. 36.89 லட்சம் ஆண்டு சம்பளம் பெற்றார்,. மேலும் பேங்க் ஆஃப் பரோடா அதன் எம்டி மற்றும் சி.இ.ஓசஞ்சீவ் சாதாவுக்கு ரூ. 40.46 லட்சம் ஊதியமாக பெற்றார்.
எஸ்.பி.ஐ வங்கியானது 2021-22ல் இயக்குநர்கள், தலைவர், குழு நிலைக் குழுக்கள் மற்றும் மத்திய வாரியத்தின் செயல்திறன் மதிப்பீட்டிற்கான அளவுருக்களை அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. மேலும் இவ்வங்கியின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த மதிப்பீட்டு செயல்முறையை எளிதாக்க உதவியது என்று அறிக்கை கூறுகிறது.
2019 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க, எஸ்பிஐ தலைவர் பி வேணுகோபால் தலைமையில் ஒரு நியமனம் மற்றும் ஊதியக் குழுவை அமைத்துள்ளது. மேலும், மத்திய வாரியத்தின் கூட்டங்களில் கலந்துகொள்ளும் செயல் அல்லாத இயக்குனருக்கு 70,000 ரூபாயும், மற்ற வாரிய அளவிலான குழுக்களின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு 30,000 ரூபாயும் எஸ்பிஐ கட்டணமாக வழங்குகிறது.
பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்கும் வருடாந்திர இழப்பீடு, தனியார் வங்கி தலைவர்கள் ஒரு வருடத்தில் சம்பாதித்த தொகையுடன் ஒப்பிடுகையில் கணிசமாகக் குறைவு. எடுத்துக்காட்டாக, 2020-21ல் HDFC வங்கியின் எம்.டி. மற்றும் சி.இ.ஓ சஷிதர் ஜகதீஷன் ஆண்டு சம்பளமாக ரூ. 4.77 கோடியை ஈட்டினார், அதே நேரத்தில் ஆக்சிஸ் வங்கியின் எம்.டி அமிதாப் சவுத்ரி ரூ. 6 கோடிக்கு மேல் பெற்றுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியின் எம்.டி. மற்றும் சி.இ.ஓ சந்தீப் பக்ஷி, 2021ஆம் நிதியாண்டுக்கான அடிப்படை, கூடுதல் சலுகைகள் மற்றும் ஓய்வு பெறுபவர்களின் நிலையான இழப்பீட்டைத் தானாக முன்வந்து வேண்டாம் என மறுத்தார். மேலும் வங்கியில் கோவிட்-19 தொடர்பான பாதிப்பைக் கருத்தில் கொண்டு கௌரவக் கட்டணமாக ரூபாய் 1 மட்டும் சம்பளமாக பெற்று கொண்டார்.
தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கிடையேயான ஊதிய இடைவெளி நீண்டகால பிரச்சினையாக உள்ளது. இது சிறந்த திறமைகளை ஈர்க்கும் வகையில் தீர்வு தேவை என்று வங்கியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தனிநபர் மற்றும் வங்கியின் கூட்டு செயல்திறன் அடிப்படையில் இழப்பீட்டை தீர்மானிக்க அந்தந்த வங்கிகளின் வாரியங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்று தனியார் துறை வங்கியின் மூத்த வங்கியாளர் ஒருவர் கூறினார்.
SBI Chairman Dinesh Khara draws Rs 34.42 lakh annual salary in FY22!
SBI Chairman Dinesh Khara draws Rs 34.42 lakh annual salary in FY22! | எஸ்.பி.ஐ சேர்மனுக்கு இத்தனை லட்சம் சம்பளமா? ஆச்சரிய தகவல்