ஒ சொல்றியா மாமா.. ஓ ஓ சொல்றியான்னு.. ஆசிரியை ஆட்டம்..!

நாகர்கோவிலைச் சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகளுடன் ஆசிரியை மதுரை அருகே நடுரோட்டில் குத்தாட்டம் போட்டது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றின் மாணவ-மாணவிகள் மதுரை அருகே உள்ள பள்ளி ஒன்றில் நடந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வேனில் மதுரைக்கு புறப்பட்டனர். மாணவ-மாணவிகளுடன் ஆசிரியைகளும் சென்றிருந்தனர்.

மதுரை அருகே ஓட்டல் ஒன்றில் உணவு அருந்துவதற்காக வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது மாணவ மாணவிகள் ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடினர்.

மாணவ-மாணவிகளுடன் ஆசிரியை ஒருவரும் நடனம் ஆடினார். மாணவ மாணவிகள் கூச்சல் சத்தத்துடன் நடனம் ஆடி கொண்டிருந்ததை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் ஆசிரியை தன்னை சமந்தாவாக பாவித்துக் கொண்டு மாணவர் ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டு நடனம் ஆடுவது போன்று உள்ளது.

இந்த வீடியோவும், மாணவ மாணவிகள் நடன மாடும் வீடியோவும் வைரலாகி வருகின்றது. வெளியூர் நிகழ்ச்சிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்ற போது நடு ரோட்டில் மாணவர்களுடன் ஆசிரியை நடனமாடும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வட்டார அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.