சென்னை மத்தியில் தமிழகத்தை வஞ்சிக்காத அரசு தேவை என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று சென்னை கொளத்தூரில் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த முதல்வர் மு க ஸ்டாலின், “அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி கொளத்தூர் தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றியுள்ளோம். யார் என்ன சொன்னாலும் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும். பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைய ஊக்கம் அளிக்கும் நாள் மார்ச் 8. மகளிர் முன்னேற்றத்திற்குத் திராவிட மாடல் அரசு பல திட்டங்களைத் தீட்டு செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவிகள் இல்லை தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக உள்ள திட்டத்தை மத்திய அரசின் உதவி […]