சேரன் இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆட்டோகிராஃப்’.
21 வருடங்களுக்குப் பிறகு இந்த வாரம் அத்திரைப்படம் ரீ-ரிலீஸாகிறது. முதல் ரிலீஸிலேயே பெரியளவில் கவனம் ஈர்த்த இத்திரைப்படம் காதல் திரைப்படங்களுக்கு இன்று வரை ஒரு பெஞ்ச்மார்க் என்றே சொல்லலாம்.

அத்திரைப்படத்தில் நடித்திருந்த கோபிகா தற்போது ரீ-ரிலீஸ் குறித்து பேசிய காணொளியை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இயக்குநர் சேரன் பகிர்ந்திருக்கிறார்.
‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம்தான் நடிகை கோபிகாவின் முதல் தமிழ் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை கோபிகா பேசுகையில், “‘ஆட்டோகிராஃப்தான் என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். எப்போதுமே, அப்படத்தின் லத்திகா கதாபாத்திரம் என்னுடைய ஃபேவரைட்.
நான் சேரன் சாருக்கு எப்போதுமே நன்றி கடன்பட்டிருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து லத்திகா கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த குழுவுக்கும் நன்றி.
இப்படியான பெரிய திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததை எண்ணி எப்போதும் பெருமைகொள்வேன்.

21 வருடங்களுக்குப் பிறகு ஆட்டோகிராஃப் திரைப்படம் இப்போது ரீ-ரிலீஸாகிறது.
இப்போது படத்தைப் பார்க்கும் மக்கள், அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஐ மிஸ் யூ ஆல்!” எனக் கூறியிருக்கிறார்.