அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய 3 ரயில்கள்.. எப்படி நடந்தது! உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க உத்தரவு

India oi-Vigneshkumar டெல்லி: ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் பெரும் விபத்தில் சிக்கியுள்ளது. இதற்கிடையே இது விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் இப்போது மிக மோசமான ஒரு விபத்து நடந்துள்ளது. 12841 எண் கொண்ட கோரமண்டல் ரயில் மேற்கு வங்கத்தில் கொல்கத்தா அடுத்துள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும். இத ஒடிசா, ஆந்திரா வழியாக இரண்டாவது நாளில் சென்னை … Read more

முற்றிலும் சிதைந்து உருக்குலைந்து கிடக்கும் ரயில் பெட்டிகள்..பயணிகள் கதி என்ன? அச்சத்தில் உறவினர்கள்

India oi-Jeyalakshmi C புவனேஸ்வர்: ஓடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. சில பெட்டிகள் முற்றிலும் சிதைந்து உருக்குலைந்து போயுள்ளது. அதில் பயணித்த பயணிகளின் கதி என்னவானது என்ற அச்சம் எழுந்துள்ளது. விபத்தில் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என ஒடிசா மாநில அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பாலாசோர் அருகே சாலிமர் – … Read more

புயல் வேகத்தில் தமிழக அரசு! கோரமண்டல் ரயில் விபத்து : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

India oi-Vignesh Selvaraj சென்னை : கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம்புரண்டு விபத்தில் சிக்கிய நிலையில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தமிழர்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ள தகவல் உதவி மையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. ரயிலில் பயணம் செய்த்தவர்களின் குடும்பத்தினர் … Read more

அடர்ந்த காடு.. ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் மெகா சிக்கல்.. ஒடிசாவில் என்ன நடக்கிறது?

India oi-Shyamsundar I புவேனஸ்வர்: ஒடிசாவில் 2 பயணிகள் ரயில் அடுத்தடுத்து விபத்துக்கு உள்ளானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்டு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதால் அங்கே மீட்பு பணிகள் மேற்கொள்வது கடினமாகி உள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் இரண்டும்தான் விபத்து உள்ளாகி இருக்கிறது. இதில் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதவில்லை. மாறாக ஒரு ரயில் தடம் புரண்டதால் … Read more

சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது எப்படி? அதிர்ச்சி தகவல்!

India oi-Vignesh Selvaraj கொல்கத்தா : கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது மோதியதால் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது பற்றி முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாக பஜார் ரயில் நிலையம் அருகே வனப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் பலர் … Read more

\"5 வயது மகனையே வெட்டி கொன்று.. சமைத்து சாப்பிட்ட தாய்..\" உறைய வைக்கும் ஷாக் சம்பவம்! மிரண்ட போலீசார்

International oi-Vigneshkumar எகிப்து: இளம் பெண் ஒருவர் தான் பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் அவனைக் கொடூரமாகக் கொலை செய்து தின்ற சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் அனைவரைக் காட்டிலும் நம் மீது நமது தாய்க்குத் தான் பாசம் அதிகமாக இருக்கும். நாம் எந்தவொரு மோசமான சூழலில் இருந்தாலும் அம்மா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கும். இக்கட்டான சூழலில் இருக்கும் பிள்ளைகளைக் காக்கும் தாய்மார்கள் குறித்துப் பல செயல்களைப் பார்த்திருப்போம். … Read more

கர்நாடகாவில் விழுந்த அடி.. தவறை திருத்தும் பாஜக! ராஜஸ்தானில் மோடி ‛பக்கா மூவ்’! அப்போ காங்கிரஸ்?

India oi-Nantha Kumar R ஜெய்ப்பூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில் அங்கு செய்த மிக முக்கியமான தவறை இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் திருத்தி கொள்ளும் வகையில் பாஜக பணியை தொடங்கி உள்ளது. இதற்கு பிரதமர் மோடியை பிள்ளையார் சுழி போட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்நிலையில் தான் அசோக் … Read more

200 யூனிட் இலவச மின்சாரம் உட்பட 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்!

India oi-Mathivanan Maran பெங்களூர்: 200 யூனிட் இலவச மின்சாரம் உட்பட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ50,000 கோடி செலவாகும் எனவும் கர்நாடகா அமைச்சரவை மதிப்பீடு செய்துள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு … Read more

\"சமுத்திரக்கனி\"யின் மார்பை அறுத்து.. உறுப்புகளை சிதைத்து.. அந்த \"சொக்கனை\" காணோமாமே.. தேனி அதிர்ச்சி

Tamilnadu oi-Hemavandhana தேனி: பால் கறப்பதற்காக, விடிகாலை நேரத்தில் கிராம மக்கள் சிலர் சென்றபோதுதான், சமுத்திரக்கனியை அந்த கோலத்தில் பார்த்துள்ளனர். என்ன நடந்தது தேனியில்? ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அடுத்துள்ளது பொன்னம்மாள் பட்டி.. இங்கு வசித்து வந்தவர் பெருமாள். இவரது மனைவி சமுத்திரக்கனி.. 48 வயதாகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கிறார்கள்.. பெருமாள் கடந்த 14 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.. அதேபோல, இவர்களது மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்து இறந்துவிட்டார்.. … Read more

ஸ்கூல் தொடங்கியதும்.. இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க.. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: வரும் 9-ந் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கோடையில் நிலவும் கடும் வெயில் காரணமாகவும், வெப்ப அலை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள் உடனே … Read more