காங்கிரஸ் ராஜஸ்தான் தேர்தல் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஜெய்ப்பூர் நேற்று காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அடுத்த மாதம் (நவம்பர்) 25 ஆம் தேதி 200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் மற்றும் மத்தியில் ஆளும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நேற்று இந்த தேர்தலுக்கான, 33 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.  பட்டியலில் முதல்வர் … Read more

தொடர்ந்து 519 ஆம்  நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 519 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 519 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் … Read more

ராஜஸ்தானில் பாஜக தேர்தல் வேட்பாளர்கள் 2ஆம் பட்டியல் வெளியீடு

ஜெய்ப்பூர்’ ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலுக்காக பாஜக  63 பேர் கொண்ட 2 ஆம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது, அடுத்த மாதம் (நவம்பர்) 25 ஆம் தேதி 200 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது.  இங்கு ஆட்சியைப் பிடிக்க தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று இந்த தேர்தலுக்கான, 33 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான … Read more

5.3 ரிக்டர் அளவில் நேபாளத்தில் நில நடுக்கம்

காத்மண்டு  இன்று காலை நேபாளத்தில் 5,3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7.24 மணி அளவில் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இது ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிருப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. இந்த நில நடுக்கம் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு, அதன் அண்டை மாவட்டங்களான தோதி, அச்சாம், பஜுரா மற்றும் சூடூர் பச்சிம் மாகாணத்திற்கு உட்பட்ட … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் : இன்று இந்தியா – நியூசிலாந்து மோதல்

தர்மசாலா தர்மசாலாவில் நடைபெறும் இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன  இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாச்சலப்பிரதேச கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கத்தில் நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது. இதுவரை இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காள தேசம் அணிகளை அடுத்தடுத்து வெற்றி கொண்டு அருமையான நிலையில் உள்ளது. அணியின் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் … Read more

மகளிர் உரிமை தொகை : அரசின் புதிய அதிரடி அறிவிப்பு

சென்னை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்குத் தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு தற்போது 2 ஆம் மாத தவணைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழக அரசு இது குறித்து வெளியிட்ட அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக அரசின் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டமும், தேவையுள்ள ஒருவர்கூட விடுபடாமல் தகுதியான … Read more

வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ள 9 துறைமுகங்கள்

சென்னை வானிலை ஆய்வு மையம் 9 துறைமுகங்களுக்குப் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தி உள்ளது. கடந்த 19 ஆம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்றய நாள் நள்ளிரவிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. பிறகு இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. இவ்வாறு தென்மேற்கு அரபி கடலில் உருவான இந்த … Read more

தீவிர புயலாக வலுப்பெறற் தேஜ் புயல்

டில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் அதாவது 19ம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்றைய நாள் நள்ளிரவிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் இது புயலாக உருவெடுத்தது. … Read more

சென்னையில் இன்று மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை சென்னையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.   இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாலையில் நெரிசல் மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், 19-ந் தேதி … Read more

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 11 ஆண்டுகளுக்குப் பின் சென்னை வருகை

சென்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை பல ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இருநாட்டுத் தொடர்களில் விளையாடாமல் இருந்துவரும் சூழலில், ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்களில் மட்டும் இரு அணிகளும் மோதி வருகின்றன. உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை பாகிஸ்தான் … Read more