எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள் – ஹெலிகொப்டரில் சுற்றித் திரியும் பிரபுக்கள்! கொந்தளித்த மக்கள்

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கம் மிகவும் மோசமான அரசாங்கம். நாங்கள் பசியில் வாடுகின்றோம். பிரபுக்கள் ஹெலிகொப்டரில் மிகவும் தாழ்வாக சுற்றி திரிவதாக தென்னிலங்கை மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். அண்மையில், எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, ​​ஹெலிகொப்டர் ஒன்று மிகவும் தாழ்வாகப் பறந்து சுற்றி திரிவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தொடர்பில், மேலும் தெரியவருவதாவது, குருநாகலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் பொது மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த போது, … Read more

வீதி விளக்குகள் தொடர்பில் பசில் முன்வைத்துள்ள கோரிக்கை

அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். நிதியமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அத்துடன் உள்ளுராட்சி தலைவர்களிடமும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமும் மின்சாரத்தைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மின்சார பாவனையைக் குறைப்பதற்கான மாற்று வழிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமாறு பசில் ராஜபக்ச கேட்டுக்கொண்டார். Source link

கட்டாயமாக்கப்படும் கோவிட் தடுப்பூசி அட்டை! நடைமுறைக்கு வரும் காலம் தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் கோவிட்-19 செயலூக்கி தடுப்பூசியைப்   பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மீண்டும் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது. இதேவேளை, கோவிட் – 19 மரணங்களுக்கு அரசாங்கத்தினூடாக வழங்கப்பட்ட போக்குவரத்து செயற்பாடுகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   Source link

சட்டவிரோத நிதி சேகரிப்பில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் தொடர்பில் விசாரணை

நாட்டில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நிதி சேகரிப்பு தொடர்பில் ஆராயும் விதமாகச் சட்டவிரோத நிதி சேகரிப்பில் ஈடுபட்ட 1100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சட்டவிரோத சொத்துகள் தொடர்பாக விசாரணை பிரிவினால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் பணமோசடி சட்டத்தின் கீழ் 78 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத செயல்களில் … Read more

இன்னும் ஒரு சில நாட்களில் சுற்றிவளைக்கப்படவுள்ள கொழும்பு (Video)

நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் கோரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. இதில் எவ்வித கட்சி பேதமுமின்றி ராஜபக்சர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 15ஆம் திகதி பாரிய மக்கள் … Read more

ஜனாதிபதி கோட்டபாய அதிரடி உத்தரவிட்டாலும் மின் தடை தொடரும்

இலங்கையில் மின்சார தடையை தவிர்க்க முடியாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டாலும் மின்சாரம் வழங்கல் ஒழுங்குமுறையை அமுலாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஐந்தாம் திகதியின் பின்னர் நாட்டில் மின்சார தடை இருக்காது என, ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் பல தலைவர்கள் உறுதியளித்தனர். எனினும் இலங்கை மின்சார சபை அதற்கு பதிலளிக்கவில்லை. குறித்த நேரத்தில் எரிபொருளை வழங்கியிருந்தால் மின் தடையை குறைத்திருக்க முடியும் எனவும், ஆனால் … Read more

ஷேன் வோர்ன் தங்கியிருந்த அறையில் ரத்தக்கறை! தாய்லாந்து பொலிஸார் தகவல் (PHOTOS)

புகழ்பெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் தங்கியிருந்த சொகுசு விடுதி அறையின் தரையிலும், குளியல் துண்டுகளிலும் “இரத்தக் கறைகள்” காணப்பட்டுள்ளதை தாய்லாந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ஷேன் வோர்ன்  தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் தாய்லாந்து ஊடகத்தை மேற்கோள்காட்டி இன்று (6) தாய்லாந்து பொலிஸார் ஷேன் வோர்ன் தங்கியிருந்த அறையில் தரையில் மற்றும் குளியல் துண்டுகளில் இரத்தம் இருப்பதைக் கண்டுப்பிடித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளனர். “அறையில் அதிக … Read more

உக்ரைனின் வினிஸ்டா விமான நிலையத்தை அழித்து நொருக்கிய ரஷ்யா படைகள்

உக்ரைன் – ரஷ்யா போர் இன்று 11 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரைனின் வினிஸ்டா விமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி வடக்கு பகுதியில் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரஷ்ய படைகள் அணிவகுத்து வரும் … Read more

உடன்பிறப்புக்களை சமாதானப்படுத்துவதில் தோற்றுப்போன மஹிந்த ராஜபக்ச!

 சகோதரர்களான கோட்டாபய மற்றும் பசில் ஆகியோரின் முடிவை மாற்றியமைக்க பிரதமர் ராஜபக்ச மேற்கொண்ட முயற்சி பயன் தரவில்லை. பல மாதங்களாக முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையிலான அதிருப்திக் குழுவின் முக்கிய இலக்காக இருந்த அவரது இளைய சகோதரரும் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷவின் முறைப்பாட்டையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவர்கள் இருவரையும் அமைச்சு பதவியில் இருந்து வெளியேற்றினார். இந்த முடிவில் கோட்டாபயவும் பசில் ராஜபக்சவும் உறுதியாக இருந்தனர். இதன்போது ராஜபக்ச குடும்பத்தில் … Read more

விபத்தில் தந்தையும் மகனும் பரிதாப மரணம்: பேருந்து மீது பொதுமக்கள் தாக்குதல்(Video)

வவுனியா – குருக்கள் புதுக்குளம் பகுதியில் பேருந்து மற்றும்  மோட்டார் சைக்கிள் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர். குருக்கள் புதுக்குளம் பகுதியில் மன்னார் பறயநாலங்குளம் பிரதான வீதியில் இன்று (06) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வருகைதந்து கொண்டிருந்த தனியார் பேருந்து குருக்கள் புதுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது உள்வீதியில் இருந்து பிரதான வீதிக்கு ஏறிய மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் … Read more