பசில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் – தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

சமகால அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள பங்காளி கட்சிகளை வெளியேற்ற நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ திட்டமிடுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன கட்சியை அல்லாத ஏனைய அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் நீக்கிவிட்டு தனித்து ஆட்சியமைக்க பசில் திட்டமிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு ஆதரவான 11 கட்சிகளின் தலைவர்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் பசில் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுன கட்சியில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் பசில் ராஜபக்ஷ … Read more

இலங்கை மக்களிடம் மாற்றம் ஏற்பட்டால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் நன்மை

தனியார் வாகனங்களில் பயணிக்கும் 10 சதவீதமானோர் பொது போக்குவரத்தினை பயன்படுத்தினால் 26 பில்லியன் ரூபாவை அரசாங்கத்தினால் சேமிக்க முடியும் என இலங்கை நிலையான வளசக்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். விசேடமாக மேல் மாகாணத்தில் மேலும் 10 வீதமான மக்களை பொதுப் போக்குவரத்தில் இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் 7 பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுப் போக்குவரத்து அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் … Read more

இலங்கையின் செயற்பாடு பாராட்டத்தக்கது! – உலக சுகாதார அமைப்பு

கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதில் இலங்கை பின்பற்றும் முறையைப் உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO)பணிப்பாளர் நாயகம், டாக்டர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டினார். இது உலகிற்கு முன்மாதிரியாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். கோவிட் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசிகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட ஈடுபாடு வைரஸைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவைச் சந்தித்த டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார். இலங்கையில் சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தியை மேம்படுத்துதல் தொடர்பான விடயங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர். … Read more

இனி இலங்கைக்கு கடன்கள் இல்லை! – சீன அரசாங்கம் திடீர் முடிவு?

இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்து சீன அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது கொழும்பில் இருக்கும் சீன அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று, அரசாங்கத்தின் சில உயர்மட்ட அதிகாரிகளுக்கு இந்தத் தீர்மானத்தை தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு காரணங்களுக்காக கொழும்பிற்கு கடன்கள் அல்லது உதவிகளை வழங்குவதிலிருந்து விலகியிருக்க பெய்ஜிங் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் முக்கிய … Read more

அசிங்கமான அமெரிக்கன்! – பசிலை விமர்சித்த கம்மன்பில

பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் உதய கம்மன்பில இன்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை ‘அசிங்கமான அமெரிக்கன்’ என்று கூறியதுடன், நாடு எதிர்நோக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கு அவரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றார். ஒரு அமெரிக்க குடிமகன் நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார், நாட்டை இந்த நெருக்கடிக்குள் தள்ளியது யார் என்பதை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டை இந்த நிலைக்கு தள்ளியது யார் என்பதற்கான அனைத்து உண்மைகளையும் எழுத்துப்பூர்வ … Read more

ஐநாவில் இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உரிமைகளை அங்கீகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலை அல்லது இருப்பிடத்தை அவசரமாக நிர்ணயம் செய்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், இழப்பீடு வழங்கவும் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் இன்று நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் இலங்கை தொடர்பான விவாதத்தின் போது தனது அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை குறித்து ஐக்கியநாடுகள் … Read more

என்னை சந்தித்துப் பேச வாருங்கள்! கோட்டாபய விடுத்துள்ள பகிரங்க அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று முற்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாற்றியுள்ளார். ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தன்னை சந்தித்து, பேச்சுவார்த்தைகளை நடத்தி சிக்கல்களுக்கு தீர்வு காணலாம் எனவும் ஜனாதிபதி இதன் போது சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரிடம் கூறியுள்ளார். எனினும் இது சம்பந்தமாக கட்சியினருடன் கலந்துரையாடி விட்டு, அது பற்றிய முடிவை பின்னர் அறிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அந்த மூத்த உறுப்பினர்கள் … Read more

இலங்கையின் வடக்கு – கிழக்கு கரையோர பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை(Photo)

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கரையோரங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில், ”தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது திருகோணமலை கடற்பரப்பிலிருந்து தென் கிழக்கில் 470 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதோடு, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

தென்னிலங்கையில் நூற்றுக்கணக்கான மக்களுடன் பாலம் உடைந்து விழுந்தமையினால் குழப்பம்

மாத்தறையில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணித்துக் கொண்டிருந்த பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்துள்ளது. மாத்தறை பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பலகையில் செய்யப்பட்டுள்ள பாலம் ஒன்று இன்று இடிந்து வீழ்ந்துள்ளது. விகாரைக்கு மக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.எனினும் சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். கடலின் குறுக்கே விகாரைக்கு செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலம் பொது மக்களுக்களுடன் சேர்ந்து … Read more

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு! வெளியானது அறிவிப்பு

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, நாளை   P, Q, R, S, T,U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டும், மாலை 6 மணி தொடக்கம் 10 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், E மற்றும் F ஆகிய பகுதிகளில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.30 … Read more