நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது! IMF கடன்… – தனது இலக்கை அறிவித்தார் ரணில் (Live)

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணத்தை ஜனாதிபதி சற்றுமுன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.  நாடாளுமன்றில் ஜனாதிபதி உரையாற்றுகையில், கடந்த ஜூலை 9ஆம் திகதி நான் தீப்பிடித்த நாட்டையே பொறுப்பேற்றேன். குழப்பத்தில் இருந்த ஒரு நாடு. நாளைய தினம் பற்றிய நம்பிக்கை ஒரு துளி கூட இல்லாத நாடு. அதிகாரப்பூர்வமாக திவாலான நாடு என அறிவிக்கப்பட்ட நாடு. பணவீக்கம் 73% வரை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்ட நாடு. நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் பல நாட்களாக தவித்த மக்கள் … Read more

புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

மே மாத நடுப்பகுதிக்குள் சுமார் 33,000 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22.3.2023) உரையாற்றிய அமைச்சர், அண்மையில் பல்கலைக்கழக பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். 7,500 தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்கள் “மேலும், சுமார் 7,500 தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்திலிருந்து தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இறுதி முடிவுகள் … Read more

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் நடிகை சமந்தா.. அசரவைக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சமந்தா  நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளார். 8 மாதங்களாக இந்த நோயில் கஷ்டப்பட்டு வந் இவர், மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக வெளிவந்த யசோதா ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் வெளியாவதாக இருந்த இப்படம் திடீரென தள்ளிப்போனது. இதனாலேயே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. லேட்டஸ்ட் … Read more

எரிபொருள் விலையை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம்

அடுத்த மாதம் முதல் எரிபொருள் விலைய குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த எரிபொருளின் விலையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பெட்ரோல் விலை 100 ரூபாயில் குறைக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான எரிபொருள் விலை சூத்திரத்தின் மூலம் மாத்திரமே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும் மற்றும் மின்சாரச் சட்டமூலம் 06 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். … Read more

இலங்கை உயர்ஸ்தானிகர் – இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (21.03.2023) டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக்கான உதவிகள் தொடர்பாக 2021ஆம் ஆண்டு நவம்பர் முதல் அமைச்சர் சீதாராமனுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட நடத்தி வரும் தொடர்ச்சியான சந்திப்புகளின் அடிப்படையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டை நனவாக்குவதற்கு இந்திய அரசாங்கம் எடுத்த தலைமைத்துவத்திற்காக அமைச்சர் … Read more

இலங்கைக்கு IMF விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்

வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முதற்கட்ட கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் சில தினங்களில் கடன் தொகை கிடைக்கவுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளை சர்வதேச நிதியம் விதித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின் முதல் தவணையாக 333 மில்லியன் டொலர்கள் சில தினங்களில் கிடைக்கவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில் இந்த மூன்று பில்லியன் … Read more

சர்வதேச நாணய நிதியக் கடனுதவி குறித்து மத்திய ஆளுனரின் அறிவிப்பு

 சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க கருத்து வெளியிட்டுள்ளார். வங்குரோத்து அடைந்த நாட்டின் கடன் செலவுகளை குறைப்பதற்கு இந்த நிதி உதவி பயன்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தினால் 16 தடவைகள் கடன் வழங்கப்பட்ட போதிலும் அவை கொடுகடன் தொகைகளை ஈடு செய்ய மட்டுமே போதுமானதாக காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை வழங்கப்படும் கடனுதவியானது அரசாங்கம் உள்நாட்டு சந்தைகளில் கடன் பெறுவதனை தவிர்க்கும் … Read more

இலங்கைக்கு இறுதி வாய்ப்பு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் கிடைத்துள்ள இந்த கடைசி வாய்ப்பையும் இழந்தால் இலங்கை லெபனானாக மாறிவிடும் என பேராசிரியர் ரொஹான் சமரஜீவ எச்சரித்துள்ளார். லெபனானின் அரசியல் தரப்பினரால் ஒருமித்த கருத்தை அடைய முடியவில்லை மற்றும் வங்கி முறையை செயல்படுத்த முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனானிலுள்ள மக்கள் குறைந்த பட்சம் வங்கியில் இருந்து தங்கள் பணத்தை எடுக்க கூட முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் சிலர் பொம்மை கைத்துப்பாக்கிகளுடன் வங்கிகளில் குதித்து தமது பணத்தை கேட்பதாகவும் கூறினார். இது … Read more

ஆசிரியர்களுக்கான விசேட அறிவிப்பு!

ஆரம்ப நிலை ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு இன்று அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஆரம்ப நிலை ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்று (21.03.2023) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இடமாற்றம் தொடர்பான விபரம் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றின் ஊடாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்றால் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதேவேளை … Read more

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் ரசிகர்கள்

அசத்தப்போவது யாரு புகழ் கோவை குணா உடல்நலக் குறைவினால் உயிரிழந்துள்ளார். கோவை குணா கோவை விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்த கோவை குணா தமிழில் திரைப்படங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகள் மற்றும் மிமிக்கிரி செய்து பலரது மனதில் இடம் பிடித்தவர். பின்னர் தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் என்ற சங்கத்தில் இணைந்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். இவர் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்களை சிரிக்க … Read more