இன்றைய ராசி பலன் | 01/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

`14 ஆண்டுகளாக விமான நிலையத்தில் வசிக்கும் முதியவர்!' – காரணத்தைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி!

பொதுவாகவே வீட்டில் பிரச்னை ஏற்படும் போது சிலர் வீட்டை விட்டு வெளியேறுவதும், பின்பு திரும்புவதும் வழக்கமாகக் கொண்டிருப்பர். இன்னும் சிலர் திரும்ப வராமல் வேறு ஏதேனும் ஊருக்கோ, அல்லது நாட்டுக்கோ சென்றுவிடுவதையும் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒருவர் வீட்டாரின் மீது கோபித்துக்கொண்டு கடந்த 14 ஆண்டுகளாக விமான நிலையத்தில் தங்கிவருவது அனைவரையும் அதிர்ச்சி கலந்த வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சீனாவைச் சேர்ந்த வெய் ஜியாங்குவோ என்பவர் தன்னுடைய 40-வது வயதில் தன் பணியிலிருந்து விலகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து … Read more

“கல்வி அறிவைவிட அனுபவத்துக்கு அதிக சக்தி உண்டு!" – மாநிலங்களவையில் பிரதமர் மோடி

மாநிலங்களவை உறுப்பினர்கள் ப.சிதம்பரம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிகேஎஸ் இளங்கோவன், நவநீத கிருஷ்ணன், ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட 72 எம்,பி-க்களின் பதவிக்காலம் ஜூலைக்குள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இவர்களுக்கான பிரிவு உபசார விழா இன்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது ஓய்வுபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவும், பிரதமர் மோடியும் பிரியாவிடை கொடுத்தனர். நாடாளுமன்றம் அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அதிக அனுபவம் இருக்கிறது. சில சமயங்களில் … Read more

சென்னை: ப்ளஸ் டூ மாணவியைக் காதலிக்கக் கட்டாயப்படுத்திய இளைஞர் கைது!

சென்னையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவரை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில நாள்களாக மாணவி முகேஷிடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மனவேதனையடைந்த முகேஷ், தன்னுடைய நண்பன் சையத் மசூத்தை அழைத்துக் கொண்டு பைக்கில் மாணவியைச் சந்திக்கச் சென்றார். வேளச்சேரி பகுதியில் மாணவி தனியாக நிற்பதை முகேஷ் பார்த்தார். உடனே அங்குச் சென்ற அவர், மாணவியிடம் ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய், … Read more

நெல்லை: ஆபரேஷன் கஞ்சா 2.0; மூன்று நாள்களில் 19 பேர் கைது! – பிடிபட்ட கஞ்சாவைப் பதுக்கியதா போலீஸ்?

தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடந்ததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்தபடியே இருந்தன. குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தைச் செயல்படுத்த காவல்துறை தலைவரான சைலேந்திரபாபு உத்தரவிட்டார். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதன்படி, தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களை ஒழிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. நெல்லை மாநகரத்தில் கடந்த 28-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாள்களாக நடத்தப்பட்ட சோதனையில், … Read more

“நெருங்க முடியாத நெருப்பைப் போன்றவர் பிரதமர் மோடி!" – எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நாடகத்திற்குப் பிரதமர் மயங்கமாட்டார் என எடப்பாடி பழனிசாமி முதல்வரின் டெல்லி பயணம் குறித்து விமர்சித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தி.மு.க செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் அரசு அதிகாரிகள் செய்தது சட்டவிரோதம் என்று மத்திய அரசுக்குப் புகார் போயிருக்கிறது. பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு தமிழகம் வந்த போது கோ பேக் மோடி என்று கருப்பு பலூன் பறக்க விட்டவர். அதுமட்டுமல்லாமல் பிரதமரின் தனிப்பட்ட … Read more

“நம்பிக்கையளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!" – செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின்

மு.க ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றப் பிறகு, மூன்றாவது முறையாக டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்துள்ளார். இன்று மதியம் 1 மணியளவில் பிரதமரின் அலுவலகத்தில் நடந்த சந்திப்பு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித் ஷா, மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சந்திக்க நேரம் … Read more

தேனி: கண்ணகி கோயில் செல்ல அனுமதி நேரம் குறைப்பு; கேரள அரசு கெடுபிடிகளைத் தளர்த்த பக்தர்கள் கோரிக்கை!

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,000 அடி உயரத்தில் தமிழக – கேரள வன எல்லையில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. 2,000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பௌர்ணமியன்று சித்திரை முழு நிலவு விழா கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கண்ணகி கோயில் திருவிழாவிற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தற்போது … Read more

உயர் சாதி என்ற சொல்லை இப்படியும் சொல்லலாம்! – வாசகர் வாய்ஸ்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், [email protected]க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! மனித குலத்துக்கு சாதி தேவையில்லை, அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியது. எனினும், உடனடியாக அது இயலாது. மேலும், இன்றைய அதி நவீன காலத்திலும் சாதியம் நிலவுவது மட்டுமன்றி, சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த நிலையை விட அதிகமாக ஆகியிருப்பதும் வேதனைக்குரியது. இது தொடர்பாக சிந்திக்கவும், பேசவும் … Read more

நாமக்கல்: முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது அதிமுக பெண் கவுன்சிலர்கள் கொலை மிரட்டல் புகார்!

நாமக்கல், கொமாரபாளையம் காவல் நிலையத்தில் நேற்றைய தினம் 3 அதிமுக கவுன்சிலர்கள் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் தங்கமணி மீது கொலை மிரட்டல் புகார் அளித்திருக்கின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் பேசினோம். “நாங்கள் அ.தி.மு.க-வில் நீண்டகாலமாக உறுப்பினர்களாக இருந்து வந்தோம். தற்போது நடைபெற்று முடிந்த ஊராட்சித் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு 16-வது வார்டில் பூங்கோதை, 43- வது வார்டில் ரேகா, 13-வது வார்டு நந்தினி ஆகிய மூவரும் வெற்றி பெற்றிருந்தோம். பின்னர் நகராட்சித் தலைவர் தேர்தலில் கொமாராப்பாளையம் … Read more