ஊசிப்புட்டான் | “நேரம் வரும், அப்ப இவனுக்கு இருட்டடிய போட்டுக்கலாம்" | அத்தியாயம் – 28
ரவி அங்கே வந்தபொழுது அந்த மனிதனின் சடலத்தை அங்கிருந்து அகற்றியிருந்தார்கள். மதிற்சுவற்றிலும் அதை ஒட்டி மழைநீர் வடிந்து செல்வதற்காகப் போடப்பட்டிருந்த சிமிண்ட் சறுக்கலிலும் ரத்தத்திட்டுகள் காய்ந்து உறைந்து கறுப்பாய் தெரிந்தது. அந்தச் சிமிண்ட் சறுக்கத்தில் வழுகிவிடாதபடிக்கு மிகவும் கவனமாகக் காலடி எடுத்து வைத்து இறங்கினான். அவன் நினைத்ததைப் போலல்லாமல் அந்தச் சிமிண்ட் சறுக்கல் மழை நீரின் உதவியால் மணல் துகள்கள் விலகிச் சற்று சொறசொறப்பாகவே இருந்தது. அந்த மனிதனின் உடல் விழுந்து கிடந்ததாய் சொல்லப்பட்ட இடத்தின் அருகில் … Read more