தாராள உதவிகளுக்காக இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லேவுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவிப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ கோபால் பாக்லே அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 ஜூன் 02ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, உணவு, எரிபொருள், உரம் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் உட்பட இலங்கைக்கு தற்போது வழங்கப்படும் உதவிகள் குறித்து உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு விளக்கமளித்தார். இருதரப்பு ஈடுபாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் அவர் … Read more

முச்சக்கரவண்டி சாரதி பயணியிடம் கைவரிசை

முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் ,வாடகைக்கு சென்ற பெண் ஒருவரிடம் ,ரூபாய் 8 இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் உட்பட பல ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் தனது தனிப்பட்ட தேவை நிமித்தம் கொடகமைக்குச் சென்று மீண்டும் வீடு செல்வதற்காக வீதியில் நின்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திற்கு வந்த முச்சக்கரவண்டியில் சென்ற போதே சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி சாரதி ,பெண்ணை பாழடைந்த இடம் ஒன்றிற்கு அழைத்துச் … Read more

யாழில் விளையும் திராட்சையின் விலை ஆயிரம் ரூபாய்

இம்முறை யாழில் விளைந்த திராட்சைப் பழங்கள் இன்று முதல் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  யாழில் விளையும் ஒரு கிலோ திராட்சைப் பழத்தின் விலை 1000 ரூபாவைத் தாண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.  குறைவடைந்துள்ள திராட்சை இறக்குமதி  எவ்வாறாயினும், கடந்த வருடத்தை விட இந்த வருடம் திராட்சைப் பழங்களின் விலை அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் திராட்சைக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் திராட்சையின் அளவு குறைந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் யாழில் விளையும் திராட்சைக்கு … Read more

இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளமை மிகப்பெரிய உதவி

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளமை மிகப்பெரிய உதவியாக அடைந்துள்ளதாக கிளிமாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் சம்பிரதாயபூர்வமாக விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை இந்திய துணைத்தூதுவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் மாவட்ட மக்கள் சார்பில் அரசாங்க அதிபர் நன்றிகளைத் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த … Read more

ரஷ்ய விமானத்திற்கு எதிரான தடையை இடைநிறுத்தி அதிரடி உத்தரவு

ரஷ்யாவின் Aeroflot விமானம் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடையை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று இதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பரிசீலித்ததை அடுத்து இந்த உத்தரவு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மனு இன்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம்! பகிரங்க மன்னிப்பு கோரியுள்ள … Read more

போஷாக்கான உணவை உட்கொள்ள குடும்பம் ஒன்றுக்கு தேவையான தொகை அதிகரிப்பு

இலங்கையில் தற்போது குடும்பம் ஒன்று, போஷாக்கான உணவினைப் பெற்றுக் கொள்ள தேவைப்படும் தொகையானது 700 ரூபாவா அதிகரித்துள்ளது.   நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறு குறித்த தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வயம்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரேணுக சில்வா தெரிவித்துள்ளார்.  இதற்கு முன்னர் கடந்த 2018ஆம் ஆண்டு 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலப்பகுதியில் இந்த தொகையானது 450 ரூபாவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.   திரிபோஷ உற்பத்தி இடைநிறுத்தம்  இதேவேளை, கர்ப்பிணித்தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குறைந்த … Read more

இன்று முதல் 12 ஆம் திகதி வரையான மின்துண்டிப்பு  தொடர்பான அறிவிப்பு

இன்று (06) முதல் 12 ஆம் திகதி வரை மின்துண்டிப்பு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இந்த மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஜூன் 06 – 08: 2 1⁄4 மணித்தியாலங்கள் HI | T :  – மு.ப. 8.30 – மு.ப. 10.45 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் ABCDEFGJKL | PQRSUVW :  – பி.ப. 3.00 … Read more

தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம்! பகிரங்க மன்னிப்பு கோரியுள்ள அமைச்சர் (Photo)

ரஷ்ய விமானப் பயணிகளிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். மன்னிப்பு கோரி டுவிட்டர் பதிவு ரஷ்யாவிற்கு சொந்தமான எயாலொப்ட் விமான சேவை விமானம் தடுத்து வைக்கப்பட்டதனால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்காக இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இலங்கையுடன் தொடரும் முறுகல்! கட்டுநாயக்கவிற்கு வெறுமையாக வந்து, ரஷ்யர்களை ஏற்றிச்சென்ற ஏரோப்லோட் விமானம்  இந்த சம்பவம் ஓர் துரதிஸ்டவசமான சம்பவம் என அவர் குறிப்பிட்டுள்ளார். The … Read more

மீண்டும் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம்! சீமெந்து விலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீமெந்து விலை மீண்டும் அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை கட்டட நிர்மாணத் தொழில் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாரச்சி விலை அதிகரிப்பு தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளார். சீமெந்தின் தற்போதைய விலை தற்போதைக்கு 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து விலை 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. மீண்டும் அதிகரிக்கும் சீமெந்து விலை  கடந்த சில வாரங்களுக்கு முன்னரே குறித்த விலையேற்றம் பதிவாகியிருந்தது.  அதன் பின்னர் பொது மக்கள் தங்கள் நிர்மாணத் தொழிலை கைவிடும் நிலை ஏற்பட்டதால் … Read more

மீண்டும் சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்: கோட்டாபய – ரணில் மோதல் ஆரம்பம்

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. அதன் பின்னர், புதிய ஆளுநரையோ அல்லது தற்போதைய ஆளுநரையோ ஜனாதிபதி மீண்டும் நியமிக்க வேண்டும் என மத்திய வங்கி தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அரசியலமைப்பு சூழ்நிலையில் மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை நியமிப்பதற்கு முன்னர் நிதி அமைச்சரின் எழுத்துப்பூர்வ பரிந்துரையை ஜனாதிபதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். நிதியமைச்சின் பரிந்துரை அதற்கமைய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக பொருத்தமான பெயரை … Read more