இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளமை மிகப்பெரிய உதவி

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளமை மிகப்பெரிய உதவியாக அடைந்துள்ளதாக கிளிமாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்று
கிளிநொச்சி மாவட்டத்தில் சம்பிரதாயபூர்வமாக விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை இந்திய துணைத்தூதுவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் மாவட்ட மக்கள் சார்பில் அரசாங்க அதிபர் நன்றிகளைத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் திரு.ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நிவாரணப் பொதிகளை சம்பிரதாயபூர்வமாக இதன்போது பயனாளிகளிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலர்கள், கிராம உத்தியோகத்தர்கள், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பயனாளிகள்,ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.