தமிழகம் சென்ற இலங்கை தமிழர் உயிரிழப்பு – வெளியான காரணம்

சுற்றுலா விசாவில் உறவினர் வீட்டிற்கு தமிழகம் சென்ற இலங்கை தமிழர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கடந்த 19ம் திகதி சுற்றுலா விசாவில் திருச்சி விமான நிலைய பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற 45 வயதுடைய வேல்வரதன் என்பவரே திடீரென வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதற்கமைய, உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எக்கப்பட்டுள்ளது. இது குறித்து விமானநிலைய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

கட்டுமானத் துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் …….

கட்டுமானத் துறையில் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவில் உள்ள அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நிலுவையில் உள்ள பற்றுகளுக்கு உடனடியாக செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டும் பொழுது திறைசேரியில் இருந்து பணம் கிடைப்பதற்கு ஏற்ப அவை பகுதி பகுதியாக செலுத்தப்படுவதற்கு அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. கட்டுமானத் துறையில் சேர்ந்தவர்களை பாதுகாக்க முடியாவிட்டால், இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நாம் பல … Read more

தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம்! நீதிமன்றம் வெளிப்படுத்திய தகவல்

சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் மரணமடைந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையின் சாட்சி விசாரணைகளை தமது உத்தியோகபூர்வ அறைக்குள் நடத்த தீர்மானித்ததாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்ரா ஜயசூரிய இன்று பகிரங்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மரணம் சம்பவந்தமான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டதே நீதவான் இதனை கூறியுள்ளார். உறவினர்கள் விடுத்த கோரிக்கை மரணம் சம்பந்தமான பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி இருப்பதால், மரண விசாரணையின் சாட்சி … Read more

சுற்றுலா விடுதியில் இளைஞனும் யுவதியும் தற்கொலை

தங்காலையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி மற்றும் இளைஞனின் உடல்களை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுற்றுலா விடுதியில் தொழில் புரிந்து வந்த இளைஞன் இவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதே சுற்றுலா விடுதியில் தொழில் புரிந்து வந்த இளைஞனும், அம்பலாந்தொட்டை பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இளைஞன் சிறு வயது … Read more

கொழும்பில் இடம்பெற்ற மோதல் சம்பவம்:பரபரப்பை ஏற்படுத்திய காணொளி (Video)

கொழும்பு –பம்பலபிட்டி பகுதியிலுள்ள தமது ஆடை விற்பனை நிலையத்தில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஹவுஸ் ஆஃப் பேஷன் நிறுவனம் தெளிவூட்டல்களை வழங்கியுள்ளது. “தமது வாகனம், வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், மற்றுமொரு வாகனம் இடைமறிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர், நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் முறையிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் PA கட்டமைப்பின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இடைமறித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் உரிமையாளர்கள், தமது வாகன தரிப்பிடத்தில் … Read more

யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக பயணிப்போருக்கு கட்டணங்கள் குறைப்பு

இரத்மலானை மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்படும் ஒவ்வொரு நபரிடமும் அறவிடப்படும் விலகல் வரி, 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் வரி ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார். அதற்கமைய, குறித்த விமான நிலையத்திலிருந்து புறப்படும் நபர்களுக்கு 60 அமெரிக்க டொலர்களில் இருந்து அறவிடப்பட்ட விலகல் வரி 30 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரத்மலானை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் நபருக்கு அறவிடப்படும் விலகல் வரி மார்ச் மாதம் 26ஆம் திகதி வரையிலும், யாழ் விமான … Read more

உயர்தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனை கைதி

இன்று ஆரம்பமாகியுள்ள உயர்தரப் பரீட்சைக்கு சிறைக்கைதிகள் சிலர் தோற்றவுள்ளனர்.  இதன்படி, மரண தண்டனை பெற்ற கைதி ஒருவர் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கைதி சிறைவாசத்தின் போது “அனுஷய ஆசவ” என்ற நாவலையும் எழுதியுள்ளார். பரீட்சைக்குத் தோற்றும் சிறைக்கைதிகள் இவருடன் வெலிக்கடை சிறையில் உள்ள நால்வர் 2022/23 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரும் … Read more

நாட்டின் பணவீக்கம் தொடர்பாக வெளியான தகவல்

இலங்கையின் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.2 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பரில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 65 சதவீதமாக பதிவாகியுள்ளது.  உணவுப் பணவீக்கம் அத்துடன், நவம்பரில் 69.8 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 59.3 சதவீதமாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Source link

அரச ஊழியர்களுக்கான ஜனவரி மாத சம்பளம்! சற்று முன்னர் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி, அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளத்திற்கான திகதிகள் குறித்த அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார். சம்பளம் வழங்கப்படும் திகதிகளில் இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரிகளுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் 25 அல்லது 26 ஆம் திகதி வழங்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் … Read more