மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை!

  மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் (29) பாராளுமன்றத்தில் தெரிவித்த பதில், அர்த்தத்தை சிதைக்கும் விதத்தில் பல ஊடகங்களில் செய்திகளாக வெளியாகியுள்ளன.எனினும், 2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில், பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு நேற்று பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், மாகாண சபைகளில் … Read more

ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்-செய்திகளின் தொகுப்பு

போதைப்பொருட்களை உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறியும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் 5000 போதைப்பொருள் பரிசோதனை சாதனங்கள் பொலிஸாருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் … Read more

மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, காணிகளை அடையாளம் காணும் கலந்துரையாடல் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (30) முற்பகல் நடைபெற்றது. இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல் தொடக்கம் மட்டக்களப்பு வரையான கரையோர பிரதேசத்தில், அரச மற்றும் தனியார் காணிகளை அடையாளம் காண்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தப் பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்து மட்டக்களப்பை 2023 ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் … Read more

அரச ஊழியர்கள் குறித்த சுற்றறிக்கைகள் உடன் நடைமுறையாகும் வகையில் இரத்து! வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியிருந்த இரு சுற்றறிக்கைகள் உடன் நடைமுறைக்கு வரும் கையில் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு இன்றைய தினம் அறிவித்துள்ளது. அரச ஊழியர்களின் உடை அதன்படி 2019 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரண்டு சுற்றறிக்கைகளையும் மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source … Read more

விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவரின் துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ அதிகாரி கைது

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, அதற்கான 14 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மெகசீன்களை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ கெப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி இந்த முன்னாள் இராணுவ அதிகாரி நேற்று முன்தினம் இரவு கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் கம்பஹா பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் வசித்து வரும் 42 வயதான முன்னாள் இராணுவ அதிகாரியே … Read more

மனித தவறினால் அதிகளவு எண்ணெய் கடலில் கலப்பதனால் உயிரினங்கள் அழிகின்றன

கடல்வளத்தை பாதுகாப்பது தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு செயலமர்வு  கடல்சார் சூழல் பாதுகாப்பு  அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரி.தயாரூபன்  தலைமையில்  இன்று (30) நடைபெற்றது. இதன் போது கடல்சார் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் கடலில் எண்ணெய் கலத்தல், சர்வதேச கப்பல் வழிப்பாதையில்  இலங்கை அமைந்துள்ளதால் நிகழும் எண்ணெய் கசிவு, போன்ற விளைவுகளைத் தவிர்ப்பது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி அதிகாரசபை தெளிவுபடுத்தியது. மனித தவறினால் அதிகளவு எண்ணெய் கடலில் கலப்பதனால் கடல்வாழ் உயிரினங்களின் பல்வகைமை அழிவதும்  … Read more

விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவரின் துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ அதிகாரி கைது

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, அதற்கான 14 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மெகசீன்களை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ கெப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி இந்த முன்னாள் இராணுவ அதிகாரி நேற்று முன்தினம் இரவு கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் கம்பஹா பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் வசித்து வரும் 42 வயதான முன்னாள் இராணுவ அதிகாரியே … Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில், உள்ளூராட்சி மன்ற எல்லை மீள் நிர்ணய கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில், உள்ளூராட்சி மன்ற  எல்லை மீள் நிர்ணய கலந்தரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) இடம்பெற்றது. இதன்போது மாவட்ட குழுக்களின் எல்லை நிர்ணய அறிக்கைகள் தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. அந்த அறிக்கைகள் தலைமைக் காரியாலயத்தில் தேசிய எல்லை நிர்ணய குழுவினால் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட குழுக்களின் எல்லை நிர்ணயத்தில் ஏதும் பிரச்சினைகள் இருந்தால் அவை நிவர்த்தி செய்யப்படும். குடிசன மதிப்பீட்டு திணைக்களம் 2020ம் … Read more