கொழும்பிற்கும்  யாழ்ப்பாணத்திற்கும் இடையில் ரயில் மூலம் குறுகிய நேரத்திற்குள் பயணிக்க நடவடிக்கை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் மூலம் குறுகிய நேரத்திற்குள் ,பயணிக்கக்கூடியவகையில் ரயில் சேவையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக போக்குவரத்து , நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான  பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாண மக்களுக்கும், யாழ்ப்பாணத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருதவதாக தெரித்த அமைச்சர் ,வடக்கு ரயில் பாதையில், மஹவ முதல் வவுனியா வரையிலான பகுதி குறுகிய காலத்தில் முழுமையாக நவீனமயப்படுத்தப்படும் என்றும் கூறினார்.   தற்போது கொழும்பில் இருந்து … Read more

பதுக்கி வைக்கப்பட்டும் முட்டையை அரசுடமையாக்க நடவடிக்கை

நிர்ணய விலைக்கு மேலதிகமாக முட்டை விற்பனை செய்தல் மற்றும் சட்டவிரோதமாக முட்டையை களஞ்சியப்படுத்துவோரை கண்டறிவதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று முதல் ஆரமப்மாகிறது. வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும். பழுப்பு அல்லது சிவப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபா என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.  சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ள நிலையில் பதுக்கி வைக்கப்பட்டும் முட்டையை அரசுடமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

ரணிலின் புலம்பெயர் அலுவலகத்தின் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்

கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட புலம்பெயர் அலுவலகம் உலகெங்கிலும் உள்ள அனைத்து புலம்பெயர் பிரிவுகளையும் உள்ளடக்கியதென தெரியவந்துள்ளது. முக்கியமாக இந்த அலுவலகம் முதலீடுகள் மற்றும் சுற்றுலா துறையை ஈர்ப்பதில் கவனம் செலுத்தும் என கூறப்பட்டது. ஆனால் அதன் அலுலகம்பற்றிய விவாதங்கள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. புலம்பெயர் தமிழர்கள் இந்நிலையில், புலம்பெயர் அலுவலகம் ஒருங்கிணைப்பின் மையப் புள்ளியாக செயல்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க நேற்று … Read more

"ஐ.நாவிற்காக முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களிடம் திரட்டப்படும் அதிமுக்கிய ஆவணங்கள்"

2009 யுத்த களமுனையில் நின்ற போராளிகள் மற்றும் பொதுமக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த அமர்விற்கான மிக முக்கியமான ஆவணங்களை திரட்டிவருவதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுசெயலாளர் ரவி தெரிவித்துள்ளார்.  எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் சில புலம்பெயர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளமை மனித உரிமைகள் பேரவையினுடைய கடுமையான அழுத்தங்களை தவிர்த்து அதன் செல்நெறியை தமது … Read more

தூர நோக்குடன் செயற்படும் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப  முடியும் – மிஹிந்தலை ரஜமஹா விஹாராதிபதி  தேரர் தெரிவிப்பு

தூர நோக்குடன் செயற்படும் தலைவர் என்ற வகையில் இந்த நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்புவார் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. வலவாஹெங்குனவெவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.  “ஒரு விடயம் நடக்கவேண்டுமாயின்  தகுதியானவர்களுக்கே அது வழங்கப்பட வேண்டும்” என்ற வார்த்தைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இன்று இந்நாட்டின் காவலராக மாறி நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை சுமந்து வருவதாகக் குறிப்பிட்டார். இன்று … Read more

மண்ணெண்ணெய் விலை ரூ. 340 ஆக மறுசீரமைப்பு

இன்று நள்ளிரவு (21) முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் ரூ. 340 ஆக அதிகரிக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய ரூ. 87 ஆக இருந்த மண்ணெண்ணெய் நாளை (22) முதல் ரூ. 340 ஆக விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தரிசு நிலங்களில் பயிர் செய்கை

பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்படாத வயற்காணிகளை பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1,05,000 ஏக்கர் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது. இக்காணிகளை பெரும் போகத்தில் பயன்படுத்தும் வேலைத்திட்டத்தினை விவசாய அமைச்சு முன்னெடுத்துள்ளதாக  அமைச்சு தெரிவித்துள்ளது. திருகோணமலை, அம்பாறை, அனுராதபுரம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 21500 ஏக்கர் தரிசு நிலங்களில் பயிர்  செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பெரும்போகத்திற்கு தேவையான உரவகைகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை

பெரும்போகத்திற்கு தேவையான உரவகைகளை விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக விவசாய அமைச்சின் செயலாளர் புஷ்பகுமார தெரிவிக்கையில்,எதிர்வரும் பெரும்போகத்திற்குரிய உரவகைகளை விவசாயிகளுக்கு நெல்விதைப்பதற்கான ஆரம்ப வேலைகளை செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னரே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சு சகல கமநல மாவட்ட ஆணையாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். விவசாயிகளுக்கு உரிய வேளைக்கு உரிய உரவகைகளை வழங்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதீத அக்கறையுடன் இருப்பதால் இதனை ஒரு தேசிய தேவையாக கருதி நடவடிக்கை எடுக்கப்பட … Read more