மின்சாரக் கட்டணம் நிலையானதாகவும் நியாயமானதாகவும் இருப்பது முதலீடுகளை ஊக்குவிக்க அத்தியாவசியமான விடயம்   

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்துறைகளை பேணுவதற்கும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் மின்சார கட்டணத்தை ஏனைய நாடுகளைப் போன்று நிலையானதாகவும் நியாயமான அளவிலும் பேணுவதன் அவசியம் குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உபகுழுவில் புலப்பட்டது. பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உபகுழுவில் கலந்துரையாடல் அதேபோன்று, ஒரு தினத்தில் மின்சாரத்துக்கு அதிக கேள்வி மற்றும் குறைந்த கேள்வி உள்ள நேரங்களுக்கிடையில் காணப்படும் பாரிய … Read more

வங்கக் கடலில் சிட்ரங் புயல் – பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை மறுதினம் 23ம் திகதி மேற்கு வங்க கடல் பகுதியில் (சிட்ரங்)  புயலாக வலுவடைய உள்ளது என சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் ,பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு நிலையம் அறிவுறுத்தியுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ தூரம் வரை பரந்து விரிந்திருக்கிறது. வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகி உள்ள … Read more

கடலில் குளிக்கச் சென்ற மாணவன் உயிரிழப்பு

அம்பலாங்கொட கடற்கரையில் நேற்று(20) காலை குளிக்கச் சென்ற பாடசாலை சிறுவர்கள் சிலர் கடலலையில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் ,மேலும் ஒரு மாணவன் காணாமல் போயுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொட கிராமிய வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவனின் சடலம் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. காணாமல் போன மாணவனை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புனர்வாழ்வு பணியகம் சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரண்பாடானது

புனர்வாழ்வு பணியகம் தொடர்பான சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரண்பட்டது. இதனால் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அரசியல் யாப்பு அமைவாக சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொண்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் இதுதொடர்பிலான தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதாக சபாநாயகர் சபை நடவடிக்கைகள் நேற்று (20) ஆரம்பிக்கப்பட்ட போதே  அறிவித்தார்.

ஆசிரியர் நியமனத்திற்கு போட்டிப்பரீட்சை – கல்வி அமைச்சர் அறிவிப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய துறைகளில் பணிபுரியும் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு போட்டிப்பரீட்சை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜயந்த நேற்று(20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 200இற்கும் அதிகமானவர்கள் ,விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்று திரும்பி வரவில்லை. 180 பேர் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்று படிப்பைப் பூர்த்தி செய்யாது இடையில் நிறுத்தியுள்ளார்கள். அத்துடன் பல்கலைக்கழகங்களில் 18மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர் காணப்பட … Read more

தற்போதைய சவால்கள் முறியடிக்கப்படும் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

உலகளாவிய COVID-19 சவாலை வெற்றிகரமாக முறியடித்தது போல் தற்போதைய சவால்களும் வெற்றிகொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வரலாற்றில் காணாத பொருளாதார நெருக்கடியை நாடு தற்போது எதிர்கொண்டுள்ளதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பல சவால்களுக்கு தீர்வு கண்டு வருவதாகவும் கூறினார். கடந்த 18 ஆம்திகதி  சிலோன் ஒக்சிஜன் (Ceylon Oxygen) கம்பனியின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தின் போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் நவீன தொழிநுட்பத்துடன் இணைந்த செயற்பாடுகள் இலங்கைக்கு மிகவும் அவசியம் … Read more

தகுதியுடைய ஆசிரியர்களை உருவாக்க தேசிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்

ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய  பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அமைச்சில், அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கல்லூரிகளை பல்கலைக்கழக மட்டத்திற்கு கொண்டு வர பல கோரிக்கைகள் கிடைக்க பெற்றிருப்பதாகவும், அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆசிரியர் சேவைக்காக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களை உருவாக்கப்படவுள்ளதாகவும், பாடத்திட்டத்திற்கு ஏற்ப மாணவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட உள்ளதாகவும் ,இந்த தகவலை அமைச்சரவைப் பத்திரத்துடன் சேர்த்து உருவாக்குவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாககவும் … Read more

வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய தகவல்

வெளிநாடுகளுக்கு செல்லும் போது சொத்துக்களாகக் காட்ட தங்க மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெறுவது வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்கத்தின் விலை தற்போது உயர்ந்துள்ளமையே இதற்கு பிரதான காரணமாகும் என இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார். தங்க மதிப்பீட்டு அட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை மட்டுமே மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பாகும். தற்போதைய தேவை காரணமாக பணியகத்திற்கு வருவதற்கு … Read more

பிரான்ஸில் எரிசக்தி நெருக்கடி: மின்சார தடை

பிரான்ஸ் நாட்டில் கடுமையான எரிசக்தி நெருக்கடியால் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், பிரான்சில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரான்ஸ் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தெருக்களில் இரவு முழுவதும் தேவையின்றி எரிந்து கொண்டிருக்கும் மின் குமிழ்களை அந்நாட்டு இளைஞர்கள் அணைத்து மின்சாரத்தை சேமித்து வருகின்றனர். இதை முறையாக பின்பற்றினால் ஒவ்வொரு ஆண்டும் 7 இலட்சத்து … Read more