பாராளுமன்றமும், கொழும்பு பல்கலைக்கழகமும் இணைந்து ஆரம்பித்த குறுகிய கால பாடநெறி

இலங்கை பாராளுமன்றம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் என்பன இணைந்து வரலாற்றில் முதல் தடவையாக ஆரம்பித்த பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த குறுகியகால பாடநெறியின் முதலாவது கட்டம் அண்மையில் பூர்த்தியடைந்தது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைகள் திணைக்களத்தின் இறுதியாண்டு பட்டதாரி மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பாடநெறியின் வளவாளர்களாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் மற்றும் பாராளுமன்ற செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். இதற்கு அமைய கடந்த 16ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் இப்பாடநெறியின் அங்குரார்ப்பண … Read more

மாணவர்களுக்கு பகல் உணவு வழங்குவதற்காக 4 பில்லியன் ரூபா

பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்குவதற்காக மேலதிகமாக 4 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கமைவாக பகலுணவு வழங்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிகமாக மேலும் 1 மில்லியன் மாணவர்களுக்கு முழுமையான போஷாக்கு நிறைந்த ஒருவேளை உணவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். இதற்கு தேவையான நிதியை வெளிநாட்டு நன்கொடை மூலம் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு மேலதிகமாக இதற்கான நிதியையும் அரசாங்கம் ஒதுக்கீடு … Read more

ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட் போட்டித் தொடர் – இந்திய அணி வெற்றி

ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று (04) ஐக்கிய அரபு அமீரக அணிக்கும், இந்திய பெண்கள் அணிக்கும் இடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கிண்ண பெண்கள் ரி20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகிறது. இதற்கமைய நேற்று (04) நடந்த போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டது. இதில் நாணய சுழற்சியை வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொண்டு 20 ஓவர் நிறைவில் … Read more

வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைபோன்று இடம்பெறுகிறது

வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைபோன்று இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (04) இரவு வெல்லவ ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் சில சக்கரங்கள் தடம் புரண்டன. இதனால் தடம்புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகள் அந்த இடத்தில் இருந்து  அகற்றப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து வடக்கிற்கான ரயில் சேவைகள் ,எவ்வித தடையும் இன்றி இடம்பெறுவதாக  ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு அரச நிறுவனங்களுக்கு QR முறை

சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக்கைகளை சீர்செய்வதற்காக QR Code முறையை  அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.  சமுர்த்தி பயனாளிகள் மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் உதவி தேவைப்படுவோரையும் இந்த அமைப்பில் உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கட்டமைப்பில் முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அரசிடமிருந்து உதவிகளைப் பெற தகுதியுடையவர்கள் ஆகியோர் உள்ளடங்குவர். நலன்புரி நன்மைகளை பெறுவதற்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசின் நிதி உதவி … Read more

பலத்த மழை நிலைமை தற்காலிகமாக குறைவடையும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு , தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஒக்டோபர்05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஒக்டோபர்05ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை இன்றும் அடுத்த சில நாட்களிலும் தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்குமற்றும் … Read more

இலங்கையில் மாணவர் விசா தாமதம் குறித்து கனடா வெளியிட்டுள்ள அறிவிப்பு

கடந்த ஐந்து வருடங்களில் பெறப்பட்ட மாணவர் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது இலங்கை விண்ணப்பதாரர்கள் எதிர்கொள்ளும் கனேடிய விசாக்கள் தாமதம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்து பேசிய அவர், ​​ கோவிட் தொற்றுநோய், தொற்றுநோய்க்குப் பிறகு தேவை அதிகரிப்பு மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களின் விளைவாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக … Read more

இலங்கை , ஐஸ்லாந்து நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் வலுவடையுமென ஐஸ்லாந்து ஜனாதிபதி உறுதி.

சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இலங்கை மக்கள் பொருளாதார சவால்களை மிகவும் வெற்றிகரமாக கையாள்வார்களென ஐஸ்லாந்து ஜனாதிபதி Guoni Th. Johannesson நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை இலங்கை – ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் பலப்படுத்தப்படுமென்றும் அவர் உறுதியளித்துள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஐஸ்லாந்து ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இரு நாடுகளுக்குமிடையிலுள்ள நட்புறவை தற்போது மக்கள் … Read more

இலங்கையின் பிரிவெனாக் கல்வியை மேம்படுத்த சிங்கப்பூரின் ஸ்ரீலங்காராம நன்கொடை.

சிங்கப்பூர் ஸ்ரீலங்காராம பௌத்த விகாரையின் அனுசரணையில் இலங்கையின் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பிரிவெனாக்களுக்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சிங்கப்பூரில் உள்ள நன்கொடையாளர்களின் உதவிகளுடன் இலங்கையின் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள பிரிவெனாக்களில் கல்வி கற்கும் தேரர் மற்றும் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட பிரிவெனாக்களுக்கு கல்வி உபகரணங்கள் எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவுள்ளன.சமன் ஏக்கநாயக்க, … Read more

கொரிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

இலங்கைக்கான புதுடெல்லியில் உள்ள கொரிய குடியரச தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஹான் ஜொங்ஹூன் அவர்கள் (அக் 04) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த லெப்டினன்ட் கேணல் ஜொங்ஹூன்ஐ ஜெனரல் குணரத்ன அவர்கள் வரவேற்றார். இச்சந்திப்பின் போது, கொரியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக சுமுக கலந்துரையாடல் நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் … Read more