இன்று முதல் பாராளுமன்றத்தை பொது மக்கள் பார்வையிட அனுமதி

பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காக பொதுமக்களுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று (20) முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றக் கட்டடத்தொகுதிக்கு வருகைதர பாராளுமன்ற அனுமதி அளிக்கப்ட்டுள்ளது. அமர்வு அல்லாத நாட்களில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 3.00 மணிவரை (விடுமுறை நாட்கள் தவிர்ந்த) அனுமதிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார். நிலவிய கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த … Read more

கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சான்றளிப்பு ,சரிபார்ப்பு செயன்முறை மீண்டும் ஆரம்பம்  

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை பிராந்திய அலுவலகங்களில் ஏற்பட்ட சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்புப் பிரிவின் கணினி அமைப்பிலான செயலிழப்புக் கோளாறுகள் சீரமைக்கப்பட்டு, குறித்த சான்றளிப்பு மற்றும் சரிபார்ப்பு சேவைகள் 2022 செப்டம்பர் 20 (நாளை) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது என்பதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொது மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றது. கொன்சியூலர் விவகாரப் பிரிவின் ஏனைய அனைத்து சேவைகளும் தொடர்ந்தும் வழங்கப்படும். வருகை தரும் … Read more

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம்

பிரிட்டனில் முடியாட்சி செய்த இரண்டாவது எலிசெபெத் மகாராணி, இன்று நிரந்தர பிரியாவிடை பெற்றார். கடந்த பத்து நாட்களாக பொது மக்கள் மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்திய வெஸ்ட்-மின்ஸ்ட்டர் அபே மண்டபத்தில் இன்று (19) இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. மகாராணி கடந்த 8 ஆம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.இறக்கும் போது 96 வயது. இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பொதுநலவாய நாடுகளின் இராஜ்ஜியத் தலைவர்கள் அடங்கலாக பல முக்கியஸ்தர்களும் … Read more

இலத்திரனியல் , மின்சார தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக பங்களாதேஷுடன் இலங்கை கைகோர்ப்பு

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் பங்களாதேஷ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து, பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 செப்டெம்பர் 12ஆந் திகதி இலங்கை இலத்திரனியல் மற்றும் மின்சார ஏற்றுமதியாளர்களுக்கான மெய்நிகர் வர்த்தக அமர்வை ஏற்பாடு செய்தது. பங்களாதேஷைச் சேர்ந்த மூன்று முன்னணி இலத்திரனியல் மற்றும் மின்சார நிறுவனங்கள் வர்த்தக அமர்வில் இணைந்ததுடன், பங்களாதேஷ் சந்தையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களை வழங்கும் 10 இலங்கை நிறுவனங்களுடன் பயனுள்ள சந்திப்புக்களை நடாத்தியது. பங்களாதேஷ் இலத்திரனியல் வர்த்தகர்கள் சங்கம் … Read more

கராச்சி இலங்கை துணைத் தூதரகம் , பாகிஸ்தான் இலங்கை வர்த்தக மன்றம் இணைந்து ஆசிய கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியின் நேரடிக் காட்சி கராச்சியில் ஏற்பாடு

கராச்சியில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகமும், பாகிஸ்தான் இலங்கை வர்த்தக மன்றமும் இணைந்து 2022 செப்டெம்பர் 11ஆந் திகதி இலங்கை துணைத் தூதரகத்தில் ஆசியக் கிண்ண இறுதிக் கிரிக்கெட் போட்டியின் நேரடிக் காட்சியை திரையிடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தன. கராச்சியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஜகத் அபேவர்ண, பாகிஸ்தான் இலங்கை வர்த்தக மன்றத்தின் தலைவர் அஸ்லம் பகாலி மற்றும் பாகிஸ்தான் இலங்கை வர்த்தக மன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சாகிப் ரவுஃப், … Read more

தமிழர்களுக்காக பேசிய ஒரே நாடு இந்தியா!

இலங்கை சிறுபான்மை தமிழ் மக்கள் தொடர்பாக ஜெனிவாவில் முதன் முதலாக 13 ஆவது திருத்தச்சட்ட தீர்வு திட்டத்தை முன்வைத்த நாடு இந்தியா எனவே இதனை அனைத்து தமிழ் தலைமைகளும் ஏற்றுக்கொண்டு செயற்படுமாறு கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.   மட்டக்களப்பு வாவிக்கரையில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற காரியாலயத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச்சட்டம் அவர் மேலும் கூறுகையில், இலங்கை சிறுபான்மை … Read more

தைவான் நிலநடுக்கம்: இடிந்து விழுந்த கட்டிடங்கள்,தடம் புரண்ட ரயில்கள்

தைவானின் யூஜிங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்சர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியதினால் , சுனாமி அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. தீவு நாடான தைவானின் தென்கிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள டைடுங் நகரில் நேற்று முன்தினம் (17) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.எனினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் அடுத்தடுத்து பல முறை நிலஅதிர்வுகள் உணரப்பட்டன.இந்த நிலையில் நேற்று (18)  உள்ளூர் நேரப்படி மதியம் 12.14 மணியளவில் டைடுங் நகரில் … Read more

பிரிட்டன் மகா ராணி இரண்டாம் எலிசபெத்  உடல் இன்று அடக்கம்

பிரிட்டன் மகா ராணி இரண்டாம் எலிசபெத்  உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளிலும் உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஐரோப்பிய நாடான பிரிட்டன் மகா ராணி இரண்டாம் எலிசபெத், 8ம் திகதி இரவு காலமானார்.இறக்கும் போது வயது 96. ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் இருந்து அவரது உடல், 14ம் திகதி லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் ஹாலுக்கு எடுத்து வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பிரிட்டன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று இரவு பகலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். … Read more